Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவைப் பின்பற்றி சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் பாக்கிஸ்த்தான் ராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவைப் பின்பற்றி சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் பாக்கிஸ்த்தான் ராணுவம்

கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெருமளவில் சரணடைந்த போராளிகள் பொதுமக்களென பல தமிழர்கலை சட்டத்திற்கு முரணான வகையில் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று வருவது நாம் அறிந்ததே. இவ்வாறான படுகொலைகள் சிங்கள ராணுவத்தால் வெற்றிக்கேடயங்களாக கருதப்பட்டு கொலைக்களங்களில் வீடியோ ஒளிப்படங்களாக்கப்பட்டு பின்னர் பெரும்தொகைப் பணத்திற்காக ஊடகங்களிற்கும், இன்னும் தனிநபர்களுக்கும் விற்கப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே.

சிறிலங்காவைத் தொடர்ந்து உள்நாட்டுக் கிளர்சிகளையும், சுதந்திரப் போராட்டங்களையும் எதிர்நோக்கி வரும் இன்னும் பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிறிலங்காவின் பாணியில் அப்போராட்டங்களை நசுக்க எத்தணிக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக, இந்தியா கடந்த சில மாதங்களாக சட்டிஷ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டத்தை கடும் ராணுவ பலம் கொண்டு நசுக்கி வருவதும், இந்த ராணுவ தாக்குதல்களில் நாள்தோறும் பெரும்பாலான பொதுமக்கள் பலியாகி வருவதும் தெரிந்ததே.

இதே பாணியை பாக்கிஸ்த்தானின் ராணுவமும் தற்போது கையாள ஆரம்பித்திருக்கிறது. பாகிஸ்த்தானில் பழங்குடிகளான பஷ்ட்டூன்களின் போரட்டத்தினை கடுமையாக நசுக்கி வரும் பாக்கிஸ்த்தான் அரசு அண்மையில் சரணடைந்த 6 பஷ்ட்டூன் போராளிகளின் கண்களைக் கட்டி வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக்கொல்லும் விட்டியோக்கள் வெளியாகியுள்ளன. சுமார் 6 இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வரிசையில் நிற்கவைப்பது காட்டப்படுகிறது. பின்னர் சுமார் 5 அல்லது 6 பாக்கிஸ்த்தான் ராணுவ வீரர்கள் இயந்திரத் துப்பக்கிளால் அவர்களைச் சகட்டுமேனிக்குச் சுட்டு வீழ்த்துவதும், இன்னொரு வீரர் ஒரு படி மேலே சென்று இறந்து கீழே விழுந்து கிடக்கும் இளைஞர்களின் சடலங்களின் மேல் தனது இயந்திரத் துப்பாக்கியால் மீண்டும் சுடுவதும் படமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உதவியுடன் பாக்கிஸ்த்தான் அரசாங்கம் நடத்திவரும் இப்படுகொலைகளின் சாட்சியங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்து பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

http://www.nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Politics/09-Oct-2010/COAS-orders-inquiry-into-footage-showing-execution-of-civilians

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்கிஸ்தான் பயங்கரவாதி இயக்கம் லக்ஷர் இ தைபாவிட்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் பயிற்ச்சியும், வெடி குண்டுகளும் கொடுத்து இந்தியாவில் இறக்கிவிட்டிருப்பது, இந்தியாவிற்கும் ஸ்ரீ லண்கவிட்கும் இடையில் நடக்கும் பனிப்போரை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்த விரிசலை ஊதி பெரிதாக்கும் கெட்டித்தனம் நமது அரசியல்வாதிகளுக்கு உண்டா? அல்லது, தேத்தண்ணியில் சீனி இல்லை என்று வெளி நடப்பு செய்வார்களா?

ஜே. ஆர். போட்ட சீனியில் மயங்கி தமிழர் உரிமைகளை விட்டுக் கொடுத்த அமிர்தலிங்கம் பரம்பரை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.