Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது கணவரை மருந்து கட்டவென இராணுவத்தினர் அழைத்து சென்றனர் - இராசையா இளந்திரையனின் துணைவியார் சாட்சி

Featured Replies

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010

கையில் காயப்பட்டிருந்த எனது கணவரை மருந்து கட்டுவதாகக் கூறி இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைக் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட் சியமளித்த விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இராசையா சிவரூபனின் (இளந்திரையனின்) மனைவி வனிதா சிவரூபன் மன்றாட்டமாகக் கேட் டார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ஆணைக் குழுவின் அமர்வு இடம்பெற்றது. அங்கு சாட்சியமளித்த வனிதா சிவரூபன் மேலும் தெரிவித்தவை வருமாறு: நானும் கணவரும் பிள்ளைகளும் இராணுவக் கட்டுப்பாட் டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தோம். எனது கணவர் கையில் காயமடைந்திருந்தார். அதனை அவதானித்த இராணுவத்தினர் எனது கணவரை மருந்து கட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காகக் கூறி கூட்டிச் சென்றனர்.

எனது கணவர் விடுதலைப் புலிகள் இயக்க சிரேஷ்ட உறுப்பினர் என்பதனால் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று படையினர் உறுதியளித்தனர்.

பின்னர் நாங்கள் முகாமுக்குச் சென்றோம். முகாமுக்கு வந்த இருவர் தம்மை சி.ஐ.டி. என அறிமுகப்படுத்தி எனது கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் என்னை அங்கு வருமாறும் அழைத்தனர். அவர்களில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நான் அவர்களுடன் செல்ல மறுத்து விட்டேன்.

சிரேஷ்ட உறுப்பினர்களின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்று அரசு ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்தது. எனவே எனது கணவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரை என்னிடமே ஒப்படையுங்கள் என்று கண்ணீர் உதிர்த்த வாறு சாட்சியமளித்தார் இளந்திரையனின் மனைவி.

http://www.eelanatham.net/story/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F

Edited by உமை

சிங்கள அரச பயங்கரவாதிகளின் உத்தரவாதங்களை நம்பிப் பயனில்லை?

பாண் கி மூன் அமைத்த விசாரணைக் குழுவிற்கு விபரங்களை அனுப்பி வைத்தால் பலன் கிடைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.