Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு உணவில்லை உடுதுணியில்லை புலம்பெயர் உறவுகளே உதவுங்கள் ஒரு முன்னாள் போராளி இறைஞ்சுகிறான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
audio.gifகடைசிவரை கணவனும் மனைவியும் களங்களிலேயே வாழ்ந்தார்கள். ஊர் உறவுகள் அவர்களுக்காக வாழ்ந்த பெற்றோர் யாவரையும் துறந்து இலட்சியத்துக்காகவே இறுதிவரை உழைத்தவர்கள். இதயத்தில் ஏந்திய கனவு மெய்ப்பட காவலண்களில் தூக்கம் மறந்த கண்களோடு விழித்திருந்த காலங்களை இன்றும் வேதனையுடன் வெளிப்படுத்தும் இவர்களுக்கு இன்று யாருமேயில்லை. இந்தக் குடும்பத்தின் துயரங்கள் சொல்லில் அடக்கிச் சேமிக்க முடியாத துயரங்கள். அன்றாட உணவு அடிப்படை வசதிகள் ஆடைகள் எல்லாவற்றுக்கும் அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும் அவலம். கடைசிவரையும் கனவுகள் மெய்ப்படும் நினைவோடிருந்த இருவரும் ஒரே இடத்தில் ஒரே நாளில் காயமடைந்து ஆளையாள் காணாது தொலைந்து போய் மருத்துவமனையில் மீளவும் சந்தித்த போது யாருக்கு யார் ஆறுதல் சொல்வதெனத் தெரியாத நிலமை. கணவன் காயமடைந்து நரம்புகள் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் இயங்காது போய்விட்டான். மனைவி காலில் காயமடைந்து நடக்க முடியாத நிலமையில். ஆளையாள் பார்த்து அழுததைத் தவிர வேறெந்த ஆறுதலும் அவர்களுக்கிருக்கவில்லை. தங்களுக்காக கப்பல் வருமென்று நம்பியதும் பொய்த்து தங்களைத் தோழில் தாங்கும் உறவுகள் உலகெங்கும் உள்ளார்கள் என்ற நம்பிக்கையும் பொய்த்து ஏமாற்றப்பட்டுவிட்டோமென நொந்து கொள்கிறார்கள். கடவுளின் தூதுவர்களென வெள்ளுடை தரித்தவர்களாலேயே பயங்கரமானவர்கள் கொடுமையான ஆயுதங்களோடு நின்றவர்கள் என்ற அவமதிப்பு அவ்வப்போது குத்திக்காட்டல் என உளரீதியான துன்பத்தைத் தாங்குவதா ? அன்றாட வாழ்வுக்கான போராட்டத்தைத் தாங்குவதா ? இவர்கள் வென்ற போது விசிலடித்துக் குதூகலித்த புலம்பெயர்ந்த எங்களிடம் தங்களைக்காக்குமாறு வேண்டுகின்றனர். தான் மட்டுமன்றி தன்போலுள்ள எல்லோருக்காகவும் புலத்துத் தமிழர்களிடம் இறைஞ்சும் இந்தக் குடும்பத்தின் துயரங்கள் இவை…

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி அக்காவுக்கு....

அவர்களின் நிலையை நினைக்க மிகவும் பரிதாபம்..

இப்படிப் பாதிக்கப்பட்டோர் பல்லாயிரம் தான், ஒரே நேரத்தில் எல்லாருக்கும் உதவமுடியாவிட்டாலும் என்னால் முடிந்த சிறு உதவியை எங்கள் மண்ணைக்காக்க போரிட்ட இந்த உன்னதங்களுக்கு செய்யவிரும்புகிறேன் சாந்தி அக்கா..... என் உதவியை எப்படிச் செய்யமுடியும் என்பதை என் தனிமடலுக்கு அறியத்தருவிர்கள ?

என்னால் முடியும் தருணங்களில் அவர்களின் அவர்களுக்கான உடைகளோ, உபகரணங்களோ அனுப்பவும் விருப்பம் ஆனால் அதை அவர்கள் எப்படி அங்கே பெறமுடியும்...இருவருமே இயலாத நிலையில் இருப்பதால் அவர்கள் பிரயாணங்களை மேற்கொண்டு பார்சல்களை எப்படி receive பண்ணலாம்... அதற்கும் ஏதாவது வழியிருந்தால் சொல்லவும்......

இளங்கவி

Edited by ilankavi

  • தொடங்கியவர்

உங்கள் உதவிக்கு முதலில் நன்றிகள் இளங்கவி.

ஒவ்வொருவர் இத்தகைய ஒவ்வொருவரை பொறுப்பேற்றால் அவர்கள் வாழும்நாட்களை மகிழ்ச்சியாக்கலாம். இதை ஒவ்வொருவரும் தமது கடமையாக உணர்ந்து முன்வந்தால் இவர்களை வாழவைக்கலாம். அண்மைய நாட்களில் எனது இடுகைகளைப் பார்த்து பலர் உதவ முன்வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

மற்றும் நீங்கள் உடை உபகரணங்கள் அனுப்புவதாயின் தற்போதைக்கு சிக்கலானது. அவர்களால் நீங்கள் அனுப்பும் இடங்களில் சென்று எடுப்பது திரிவது இயலாது. இருவரும் நடக்க இயலாதவர்கள். உதவிக்கும் யாருமில்லை. அருகில் இருக்கும் நண்பர்கள்தான் ஆளாளுக்கு துணையாக உள்ளார்கள்.

அவர்களுக்கு உடுப்புகள் அங்கே வாங்குவது விலைகுறை. அனுப்புச் செலவும் இல்லை. தனிமடலில் விபரங்கள் அனுப்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி,

மேலுள்ள உறவுபற்றி உங்களுக்கு தனிமடல் இட்டிருந்தேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நிலமையின் அவசரத்தால் எழுதுகிறேன்.

பதில் போடுங்கள்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.