Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மை விமர்சிப்பவர்களுக்கு‏

Featured Replies

முதலில் எமது இணையத்தள விருந்தாளிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விருமபுகின்றோம். எமது தமழீழ மீட்பு போராட்டத்தின் உண்மையான தன்மானமுள்ள தமிழன் என்றால் அவன் மாவீரனாக போராடி மடிந்தவன்தான்.

மற்றவர்கள் எப்படி மாறுவார்கள் என்பது எம் கண் முன்னே நடக்கும் காட்சிகளில் தெரிகிறதுதானே.

தற்போதய தமிழர்கள் எல்லோரும் கற்றடிக்கும் திசையில் சாயப் பழகிக் கொண்டு விட்டார்கள் என்பது கண்கூடாக காண்கிற காட்சி.

பாலியல் ரீதியில் பிழை விட்டவர்களுக்கு எம்மவர்கள் வெடி வைத்தது ஞாபகத்திற்கு வரவில்லையா கனவாங்களே?

பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்கு மீன் போல இருப்பவர்கள் தங்களை புனிதமானவர்கள் என காட்டி கருத்துக்கள் சொல்வதை நினைக்கும் போது கவலையாக உள்ளது.

எமது இணையத் தளத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

எமது இணையத்தளம் யாழ்ப்பாணத் தமிழர்களை குறிவைத்து குறை கூறுவதாக குறைப்படும் கனவான்களின் கவனத்துக்கு சில

எமது சில செய்திகள் கனவான்களாகிய படித்த பண்பான உங்களின் தலைக்கு பொருத்தமான தொப்பியாக இருந்தால் போட்டுக் கொள்ளலாம்

போட்ட தொப்பிக்குள் மிளகாய் தூள் இருக்கிறது என்று பின்னர் கூக்குரல் இடுவதில் பயனில்லை.

உங்களை நீங்களே எமது சமூகத்துக்கு அடையாளம் காட்டிக் கொள்கிறீர்கள்.

முதுகிலே காயத்தை வைத்துக் கொண்டு பற்றைக்குள் புக வேண்டாம்.

எமது தமிழ் சமூகத்தை பற்றி அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் நீங்கள் அப்போதே போராடப் புறப்பட்டு இப்போ மாவீரனாக இருந்திருத்தல் வேண்டும்.

அங்கயக்கன்னி குண்டுடன் எதிரி மீது பாய நீங்கள் எந்த பங்கருக்குள் புகுந்து இருந்தீர்கள்?

யாழ்ப்பாணத்து பெண்களை பற்றிக் கவலைப்பட உங்களுக்க என்ன அருகதை இருக்கிறது?

கிருசாந்தி குமாரசாமியை எதிரி கற்பழித்த பின்னராவது உங்களது ஆண்மை வெளியே வரவில்லையே?

அந்த நேரத்தில் 10 வயதில் எமக்கு கொதித்த இரத்தம் ந்நேரத்து 26 வயது வாலிபர்களுக்கு கொதிக்காமல் போனது ஏன்?

எத்தனையோ செய்திகள் போட்டிருக்கின்றோம். அதில் உங்களுக்கு தெரிந்த செய்தி இதுதானா?

பனங்கள்ளை விட்டு விட்டு பதர்களை வடிகட்டி பார்க்கும் பன்னாடை நீங்கள் தானா?

இன்று உங்கள் முன் பாலியல் துன்புறுத்தலால் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் கனவான்களே?

எங்களை வரச் சொல்லுகின்றீர் யாழ்ப்பாணம். ஏதோ இங்கு நிற்காமல் பயந்து ஓடி விட்டோம் என்று கொக்கரிக்கிறீர். சரி நாங்கள் பயந்து யாழ்ப்பாணம் இப்போ வரவில்லை. நீங்கள் ஓடிப் போய் வைத்தியசாலையில் பார்த்து நிலமையை புரிய மனசு வரவில்லையா?

பெண்களின் மானத்தை காப்பாற்ற பிறந்துவிட்ட பெருமக்கள் போல பேசுகின்றீர்கள். கோணிப் பைக்குள் குழந்தையை போட்டு விட்டு ஓடிய தாயைக் கூப்பிட்டு குழந்தையை ஒப்படைத்திருப்பீர்களா??

இன்னுமொரு கர்ணன் உருவாகி எங்கள் இனத்தில் இருக்கப் போகின்றானாஅநாதையாக?

அதை வைத்துக் காப்பாற்ற இப்போது காவலர்களும் இல்லாது போய்விட்டார்களே.

ஏதோ ஒன்று இரண்டுதான் நடக்குது என்று இருந்துவிட்டால் அந்த ஒன்று இரண்டு நடப்பது சரி அப்படி நடக்கலாம் தொகையாக நடக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா?

அப்படி நினைப்பதற்கு யார் உங்களுக்கு உரிமை தந்தது.

அந்நியன் படம் இதற்காகவாவது பாருங்கள் கனவான்களே

அதைத் தடுத்து நிறுத்த வல்லைமை உங்களிடத்தில் இல்லைத்தானே?

பாலியல் ரீதியில் பிழை விட்டவர்களுக்கு எம்மவர்கள் வெடி வைத்தது ஞாபகத்திற்கு வரவில்லையா கனவாங்களே?

உலகத்தில வேறு எங்கும் நடக்காத விசயம் இங்கு மட்டும்தான் நடக்குறது என்று ஏன் இவ்வாறு செய்தியை போடுகின்றீர்கள் என்று எங்களை கேட்கின்றீர்களே????? உண்மையில் உங்களுக்கு ------------இருக்கிறதா? நீங்களாகவே எங்கள் செய்தியின் உண்மைத் தன்மையை உலகிற்கு காட்டுகின்றீர்கள்.

நீங்கள் கேட்கும் ஆதாரங்களை நாங்கள் போடுவதற்கு யாழ்ப்பாணத்தவர்கள் சிலரின் தவறான நடவடிக்கைகளை படுக்கை அறைக் காட்சிகளாக அப்பட்டமாக காட்டச் சொல்கின்றீர்களா?

அதைக் கண்டு களிக்க அவ்வளவு ஆர்வமாக இருக்கின்றதா உங்களுக்கு?

வேறு இணையத்தளங்கள் இருக்கின்றது கனவான்களே நீங்கள் பார்ப்பதற்கு.

சிலவேளை நீங்களே இவ்வாறான இணையத்தளத்தை உருவாக்கியும் இருக்கலாம்.

அவர்களின் படுக்கை அறைக்குள் வைக்கும் கமராக்கள் சில வேளை உங்களது முகத்தையும் காட்டும் என்பது அப்பட்டமான உண்மை

அதனால்தான் அடியில் நெருப்பு வைத்ததுபோல் ஆர்ப்பரிக்கின்றீர்கள்

யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் தமிழன் இருக்கின்றானா? உலகின் எல்லா இடமும் பரவி இருக்கும் தமிழர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

சன் ரீவியில் நித்தியானந்தா பற்றி படுக்கை அறைக் காட்சிகள் போடும் போது பார்த்து பல் இளித்து விட்டு உங்கள் முற்றத்தில் நடப்பதை போடும் போதுதான் உங்கள் அடி வயிற்றில் நெருப்பு எரிகின்றதா?

ஊடக தர்மம் பற்றி சொல்லவதற்கு நீங்கள் ஊடகத்துறையில் படித்து பட்டம் பெற்றனீர்களா?

செய்தி என்றால் என்ன என்று உங்களுக்கு புரியுமா?

எந்த செய்தியாலும் அது தொடர்பானவர்கள்தான் பாதிக்கப்படுவது உண்மை. மற்றவர்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.

நீங்கள் எப்படி பாதிக்கப்படீர்கள் என்பது தான் எமக்கு விளங்கவில்லை

எங்கள் செய்தி மீதான உங்களது கொக்கரிப்பு பிழை விடுபவர்களை ஊக்குவிக்குமே தவிர அவர்களின் அட்டகாசங்களை தடுத்து நிறுத்தாது.

பசுத்தோல் போர்த்திய ஓநாய்கள் போல் இருப்பவர்களுக்கு உதவி புரிய நினைக்கும் உங்களை நாம் எவ்வாறு கூப்பிடுவது?

எங்களுக்கு பயங்காட்டி பணிய வைக்க நாங்கள் ஒன்றும் முள்ளந்தண்டு இல்லாத கோழைகள் அல்ல என்பதை புரிய வைக்கின்றோம்.

எவரும் எந்தக் கருத்தும் கூறக்கூடிய சுதந்திரம் இப்போ இந் நாட்டில் இருக்கும் போது சும்மா எங்களுக்கு பூச்சாண்டி காட்டி பலனில்லை.

உங்களது இவ்வாறான நடவடிக்கைகள் எமது ஊடக இளையோருக்கு இன்னும் ஆர்வத்தை தூண்டி எமக்கு செய்திகளை அனுப்பிய வண்ணம் இருப்பது நீங்கள் எமக்கு செய்த நன்மை என்பதை தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

இணையத்தள ஆசிரியர் குழு

http://www.newjaffna.com/fullview.php?id=NzAz

  • கருத்துக்கள உறவுகள்

diwali_crackers_fireworks.jpg

நீங்க பட்டாசு தோழர்... இப்படித்தான் இருக்கணும் :D

8801.gif

ஓமோம் நீங்கள் முள்ளிவாய்க்காலில மாவீரராகிப்போட்டு இப்போது மீண்டும் புதியபிறப்பு எடுத்து பீதாம்பரம் பேசுகின்றீர்கள். :D கனதியான செய்தியை குறிப்பாக வெளிநாடுகளில் வாழக்கூடிய நம்மவருக்கு உசுப்பேத்தும் விதத்தில் எழுதாமல் கொஞ்சம் பக்குவத்துடன் எழுதுங்கள் என்று கூறுவதே உங்களுக்கு பிடிக்கவில்லை. "யாழ் பிரபல பாடசாலை பெண்கள் கர்ப்பம்" என்று எழுதும் உங்கள் கைவண்ணத்தை பார்க்கும்போதே தெரிகின்றது நீங்கள் நிச்சயம் மிகுந்த பொறுப்புணர்வுகொண்ட ஊடகக்காரர்தான் என்று. :D

diwali_crackers_fireworks.jpg

நீங்க பட்டாசு தோழர்... இப்படித்தான் இருக்கணும் :lol:

8801.gif

ஓமோம் பட்டாசை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்கள் சகோதரிகளின், சகோதரங்களின் உள்ளாடைகளினுள் அல்லவா கொளுத்திபோடுகின்றார்கள். இவர்கள் வெறும் பட்டாசு என்பதே உண்மை.

Edited by கரும்பு

சரி உங்க ஆட்டைக்கு நான் வரல.... கர்ப்பம்.... தான் சிக்கல் என்றால் ... தமிழர்நாட்டு பாணியில் "முழுகாம உள்ளார்கள்" என மாற்றிவிடலாம் :lol:

போக வெளிநாட்டில் இருப்பவர்களை உசுப்பேத்தி எதுவுமே ஆகபோவதில்லை ... என்ன இங்க உள்ளது போல மண்ணென்னய் கேனோடா திரியபோகிறார்களா? ....அங்க உள்ளவர்களுக்குத்தான் நிலமை தெரியும்... வெளிநாட்டில் இருந்து குறைந்த பட்சம் "இன்னா நாற்பது இனியவை நாற்பது" கிடைத்தால் வாங்கி அனுப்பலாம்.... அவர்கள் வழியில் அவர்களை விடுவது நன்று.... :D

டிஸ்கி :

தங்கள் சகோதரிகளின், சகோதரங்களின் என்று விளித்தமையால் இந்த பதிவு இது எனது தனிப்பட்ட கருத்து ரைட்டு....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

நீங்கள் கேட்கும் ஆதாரங்களை நாங்கள் போடுவதற்கு யாழ்ப்பாணத்தவர்கள் சிலரின் தவறான நடவடிக்கைகளை படுக்கை அறைக்காட்சிகளாக அப்பட்டமாக காட்டச் சொல்கின்றீர்களா?

உலகம் பூராகவுமே தவறான நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டு உள்ளன. வெளிநாடுகளில் வாழக்கக்கூடிய நம்மவர் குடுபங்களில் தினமும் எத்தனையோ எத்தனையோ விதமான வாழ்வியல் போராட்டங்கள், சீர்கேடுகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் படம்பிடித்து வலைத்தளத்தில் போட்டுக்கொண்டா இருக்கின்றார்கள்? உங்கள் போன்ற கவர்ச்சிகரமாக செய்திகள் போட்டு பிரபலமாக நினைக்கும் நேற்று முளைத்த இணையங்கள் மாத்திரமே இப்படியான சீர்கேடுகளை செய்யத்துணிந்தன. உங்கள் வலைத்தளங்களின் பிரபலத்திற்காக சொந்த இனத்தையே சகோதரங்களையே துகிலுரியத் துணிந்த கனவான்கள் நீங்கள் என்று கூறிக்கொளுங்கள்.

ஊடகம் எண்ட் பேரில் உங்கட கற்பனை குதிரையை தட்டி விட்டிறுக்கிறீங்கள்..

அமெரிக்காவில் இருந்து கொண்டு யாழைச்சேர்ந்த காத்துகுட்டிகளின் மொபைல் போன் வீடியோவையும் MMSசையும் நம்பி உங்கட சேரிப்பாஷையில் போட்டுத்தாக்குகிறீர்கள்...... கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறீர்கள்..

BBCக்கு இணையான எமது பல ஊடகங்கள் இன்று.. பிச்சை எடுக்கும் போது.. உங்கள் இனையத்தை பார்த்தால் வித்தியசமா இல்ல... எரிச்சல்தான் வருது..

Edited by Panangkai

சரி உங்க ஆட்டைக்கு நான் வரல.... கர்ப்பம்.... தான் சிக்கல் என்றால் ... தமிழர்நாட்டு பாணியில் "முழுகாம உள்ளார்கள்" என மாற்றிவிடலாம் :D போக வெளிநாட்டில் இருப்பவர்களை உசுப்பேத்தி எதுவுமே ஆகபோவதில்லை ... அங்க உள்ளவர்களுக்குத்தான் நிலமை தெரியும்... வெளிநாட்டில் இருந்து குறைந்த பட்சம் "இன்னா நாற்பது இனியவை நாற்பது" கிடைத்தால் வாங்கி அனுப்பலாம்.... அவர்கள் வழியில் அவர்களை விடுவது நன்று.... :D

டிஸ்கி :

இது எனது தனிப்பட்ட கருத்து ரைட்டு....

தோழர்.. இவர்கள் தாராளமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் செய்திகளை வெளிக்கொண்டுவரட்டும். ஆனால் செய்திகளை எழுதும்போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஓர் பொறுப்பு இல்லாமல் எழுதலாமோ? யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுகின்றார்களாம். இதனால் நாங்கள் வாயை மூடிக்கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள் போல.

ஊடகம் எண்ட் பேரில் உங்கட கற்பனை குதிரையை தட்டி விட்டிறுக்கிறீங்கள்.. அமெரிக்காவில் இருந்து கொண்டு யாழைச்சேர்ந்த காத்துகுட்டிகளின் மொபைல் போன் வீடியோவையும் MMSசையும் நம்பி உங்கட சேரிப்பாஷையில் போட்டுத்தாக்குகிறீர்கள்...... கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறீர்கள்.. BBCக்கு இணையான எமது பல ஊடகங்கள் இன்று.. பிச்சை எடுக்கும் போது.. உங்கள் இனையத்தை பார்த்தால் வித்தியசமா இல்ல... எரிச்சல்தான் வருது..

கையில ஒரு கமரா கிடைத்துவிட்டால் கிளம்பிவிடவேண்டியது யார் சீலையை தூக்கிக்கொண்டு திரிகின்றார் என்று வீணீர் வடித்துக்கொண்டு. இவர்களின் ஊடகவியல் என்பது துகிலுரிவதற்கு யாராவது மாட்டுபடமாட்டானா என தினமும் ஏங்குவது என்பது போல் தெரிகின்றது. இவர்கள் தளத்திற்கு சென்று பார்த்தேன். இப்படி ஓர் செய்தி உள்ளது:

பல்கலைக்கழக பேராசிரியர்களின் காதல், காம களியாட்டங்கள் ( வெகு விரைவில் உங்கள் முன் )‏ பல்கலைக்கழக பேராசிரியர்கள் என சொல்லிக் கொள்பவர்களின் அட்டகாச காம அட்டூழியங்கள் பற்றி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களால் வெளிப்படுத்தப்படும் சகிக்க முடியாத மிகப் பெரும் உண்மைச் சம்பவங்கள் ....காத்திருங்கள் சில நாட்கள்..

Edited by கரும்பு

diwali_crackers_fireworks.jpg

நீங்க பட்டாசு தோழர்... இப்படித்தான் இருக்கணும் :D

வழக்கம் போல சம்பந்தாசம்பந்தமில்லாமல் கருத்துக்கள்..

நீங்கள்.. பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதை நிருபிக்கிறீர்கள்..

மன்னிக்கவும்.. எதோ சொல்லனும் போல இருந்திச்சா.. சொல்லிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்.. இவர்கள் தாராளமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் செய்திகளை வெளிக்கொண்டுவரட்டும். ஆனால் செய்திகளை எழுதும்போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஓர் பொறுப்பு இல்லாமல் எழுதலாமோ? யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுகின்றார்களாம். இதனால் நாங்கள் வாயை மூடிக்கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள் போல.

அட விடுங்க தோழர் தினதந்தி பேப்பர்ல இங்க இதல்லாம் ஜகஜம்... அண்ணிய டாவடிக்கும் மைத்துனர் ... மாமனாரை காதலிக்கும் மருமகள்... எல்லாம் திரைபடமாவே வருகுது... போக நாங்கள் எல்லாம் தமிழ்பண்பாடு என்றால் யாழ்பாணம் என்போம்...

http://www.youtube.com/watch?v=VUkwM6yAgu8

இப்போ நடப்பவைகள் வருத்தமாக உள்ளது...

பல்கலைக்கழக பேராசிரியர்களின் காதல், காம களியாட்டங்கள் ( வெகு விரைவில் உங்கள் முன் )‏ பல்கலைக்கழக பேராசிரியர்கள் என சொல்லிக் கொள்பவர்களின் அட்டகாச காம அட்டூழியங்கள் பற்றி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களால் வெளிப்படுத்தப்படும் சகிக்க முடியாத மிகப் பெரும் உண்மைச் சம்பவங்கள் ....காத்திருங்கள் சில நாட்கள்..

இந்தியாவில் யாரையும் லொறி அடித்துவிட்டால்.. அக்கம் பக்கம் பதினெட்டுபட்டிகளில் இருக்கும் லொறிகளுக்கு தீ மூட்டுவது போல... எதாவது குண்டக்க மண்டக்க நடந்தால் இவையல்தான் பொறுப்பேக்கொனும்..

தமிழ்நாட்டை பார்த்து கெட்ட பழக்கம் பழகிக்கொண்டிருக்கும் எங்கட சனம் செஞ்சாலும் செய்யும் ,

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல சம்பந்தாசம்பந்தமில்லாமல் கருத்துக்கள்..

நீங்கள்.. பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதை நிருபிக்கிறீர்கள்..

மன்னிக்கவும்.. எதோ சொல்லனும் போல இருந்திச்சா.. சொல்லிட்டேன்

நான் புலத்திற்க்கு வந்தபோது கிடைத்த முதலாவது அட்வைஸ்..... தமிழ்ச்சனியன்களுடன் சேராதே எண்டு........

நான் கேக்கவில்லை...

15 வருசத்துக்கு பிறகு உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது..... தமிழரை கண்டால் தூர விலகு.....

யாழ் கள பனங்காய்

சிக்னேச்சருக்கும் நீங்க எழுதியதிற்கும் கூட சம்பந்தமில்லையே தோழர் நான் எதுவும் சொல்லவில்லையே...

மன்னிக்கவும்.. எதோ சொல்லனும் போல இருந்திச்சா.. சொல்லிட்டேன் :D

நானும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தெரிஞ்ச ஆக்களுக்கு வீட்டில இருக்கிற பழைய கமராக்களை அனுப்பிவச்சுப்போட்டு ஓர் செய்தித்தளம் துவங்கலாமோ என்று பார்க்கிறன். தளத்துக்கு சுடச்சுட.கொம் என்று ஏதும் பெயர் போடலாம். பிறகு என்ரை தளத்தை யாராச்சும் விமர்சித்தால்.. மாவீரர் முள்ளிவாய்க்கால் கிருசாந்தி குமாரசாமி தேசியம் என்று ஏதாவது எழுதி இஞ்சால யாழிலையும் ஒட்டி ஆதரவு தேடலாம் தானே.

mafiau.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நீங்களே எமது சமூகத்துக்கு அடையாளம் காட்டிக் கொள்கிறீர்கள்.

முதுகிலே காயத்தை வைத்துக் கொண்டு பற்றைக்குள் புக வேண்டாம்.

எமது தமிழ் சமூகத்தை பற்றி அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் நீங்கள் அப்போதே போராடப் புறப்பட்டு இப்போ மாவீரனாக இருந்திருத்தல் வேண்டும்.

அங்கயக்கன்னி குண்டுடன் எதிரி மீது பாய நீங்கள் எந்த பங்கருக்குள் புகுந்து இருந்தீர்கள்?

யாழ்ப்பாணத்து பெண்களை பற்றிக் கவலைப்பட உங்களுக்க என்ன அருகதை இருக்கிறது?

கிருசாந்தி குமாரசாமியை எதிரி கற்பழித்த பின்னராவது உங்களது ஆண்மை வெளியே வரவில்லையே?

அந்த நேரத்தில் 10 வயதில் எமக்கு கொதித்த இரத்தம் ந்நேரத்து 26 வயது வாலிபர்களுக்கு கொதிக்காமல் போனது ஏன்?

எத்தனையோ செய்திகள் போட்டிருக்கின்றோம். அதில் உங்களுக்கு தெரிந்த செய்தி இதுதானா?

பனங்கள்ளை விட்டு விட்டு பதர்களை வடிகட்டி பார்க்கும் பன்னாடை நீங்கள் தானா?

இன்று உங்கள் முன் பாலியல் துன்புறுத்தலால் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் கனவான்களே?

எங்களை வரச் சொல்லுகின்றீர் யாழ்ப்பாணம். ஏதோ இங்கு நிற்காமல் பயந்து ஓடி விட்டோம் என்று கொக்கரிக்கிறீர். சரி நாங்கள் பயந்து யாழ்ப்பாணம் இப்போ வரவில்லை. நீங்கள் ஓடிப் போய் வைத்தியசாலையில் பார்த்து நிலமையை புரிய மனசு வரவில்லையா?

பெண்களின் மானத்தை காப்பாற்ற பிறந்துவிட்ட பெருமக்கள் போல பேசுகின்றீர்கள். கோணிப் பைக்குள் குழந்தையை போட்டு விட்டு ஓடிய தாயைக் கூப்பிட்டு குழந்தையை ஒப்படைத்திருப்பீர்களா??

இன்னுமொரு கர்ணன் உருவாகி எங்கள் இனத்தில் இருக்கப் போகின்றானாஅநாதையாக?

அதை வைத்துக் காப்பாற்ற இப்போது காவலர்களும் இல்லாது போய்விட்டார்களே.

ஏதோ ஒன்று இரண்டுதான் நடக்குது என்று இருந்துவிட்டால் அந்த ஒன்று இரண்டு நடப்பது சரி அப்படி நடக்கலாம் தொகையாக நடக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா?

அவரின் நியாயம்...... போராடும் காலத்தில் வெளி நாட்டில் இருந்து வந்து யாரும் போராடவில்லை.... இப்போ அறிவுரை என்பதே இது 101% ஏற்று கொள்ளதக்கது... அண்ணன் நடேசனும் அழைத்து பார்த்தார்... யாரும் வரவில்லை... இந்த தமிழர்நாட்டு ஆட்களும் வழக்க்கம் போல மண்ணெண்னைய் வைத்து தீக்குளித்து கொண்டார்கள்... தமிழர்நாட்டில் இருந்து 3 வக்கீல்கள்(லோயர்கள்) மட்டுமே முல்லை தீவுக்கு கிளம்பி சென்றார்கள்... அதையும் கிந்திய கடற்படை தடுத்துவிட்டது...

டிஸ்கி:

இக்கட்டுரையை எழுதியவர் முன்னாள் போராளியாகவோ அல்லது அவரின்ட குடும்பத்தில் யாராவது போராளியாகவோ இருந்தால் தலைவணங்கி ஏற்று கொள்ளவேண்டும்.. சிங்களத்தின் கட்டுபாட்டில் யாழ் நகரம் எப்படி சீரழிந்து கிடக்கிறது என சுட்டிகாட்டவும் இருக்கலாம்.. வலி அவருக்கு இருக்கலாம்

டிஸ்கிக்கு டிஸ்கி:

ஒன்று தமிழர் நாட்டுக்கும் ஈழத்திற்கு பாலம் திறக்கபடணும் அல்லது.. புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாட்டுக்கு அறிவியல் ஆயுத முழுபலத்தோடு செல்லவேணும்... இந்த மூனாவது அரசியல் தீர்வு... மற்றும் நான்காவது காசு கொடுத்துவிட்டு வேறு எவனாவது தங்கதட்டில் வைத்து ஈழத்தை தருவான் என்பதெல்லாம் வெத்து வேஸ்டு... ஐந்தாவது அனைவரும் அந்தந்த நாட்டு பிரஜைகளாக மாறிவிட்டு வழக்கம்போல தலாய்லாமா கோஸ்டி போல இன்னும் 100 வருடங்கள் "தார்மீக" குரல் எழுப்பி கொண்டே இருக்கலாம்..இதுதான் உண்மை நிதர்சனம்...

மேலும் அடுத்தவன் தமிழ்நாட்டுக்காரன் உனக்கென்ன வேலை என்பவர்களுக்கு... குறிப்பாக வேற்று இனத்தவர்களுக்கு... கரும்புலி செங்கண்ணன் உதாரணமாக

sengkannan4fq.jpg

தடை செய்யும் முன்பு மதுரையில் கன ஜோராக ஆட் சேர்ப்பு ந்டைபெற்றது... சினிமாக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருந்தவன் எல்லாம் ஆவலாக இயக்கத்தில் சேர லைனில் நின்றான்... அப்போது போல இப்போது இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது... வழக்கம் போல "கூவுங்கள் சேவல்களே" பாடல் டாக்ஸியில் ஒளித்திருக்கும்... அரிசி பருப்பு காய்கறிக்கு சிங்கள கைத்தடிகள் கொடுப்பதை விட அதிகமாகவே கிடைத்திருக்கும் விதி யாரை விட்டது என நொந்து கொள்ளவேண்டியதுதான் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தோழர், குருக்கள் குசு விட்டால் குற்றமில்லை என்று கூறுகின்றீர்கள்.

கீழ்க்கண்ட காணொளி இவர்கள் தளத்தின் பெயரில் யூரியூப்பில் இணைக்கப்பட்டது. பாருங்கள் சிறுவர்கள், இளைஞர்களை எப்படியான விசமத்தனமான நோக்குடன் வலைத்தளத்தில் குற்றவாளிகளாக இனம்காட்டுவதற்கு படாதபாடுபட்டு முயற்சிக்கின்றார்கள். இது இவர்களின் சொந்த தங்கை, தம்பியாக இருந்தால் இப்படி வலைத்தளத்தில் காட்டி கேலி பண்ணுவார்களா? ம்ம்.. யாரை நொந்து கொள்வது..? எங்கோ கற்காலத்தில் வாழவேண்டிய குரங்குகளுக்கு கமரா ஒன்றை வாங்கிக்கொடுத்தவனை சொல்லி அழவேணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

தோழர், குருக்கள் குசு விட்டால் குற்றமில்லை என்று கூறுகின்றீர்கள்.

தோழரே புலிகள் இயக்க தோழர்கள் அதாவது கடைசி வரை இயக்கத்தில் இருந்தவர்கள்..போராடியவர்கள்.. தவறு செய்யமாட்டார்கள் என்பதே என் கணிப்பீடு...மற்றது குருக்கள் என்பது அதைத்தான் குறிக்கும் என நினைக்கிறேன்... :D

தோழரே புலிகள் இயக்க தோழர்கள் அதாவது கடைசி வரை இயக்கத்தில் இருந்தவர்கள்..போராடியவர்கள்.. தவறு செய்யமாட்டார்கள் என்பதே என் கணிப்பீடு:D

இதின் பழக்கவழக்கங்களை பார்த்தால் இயக்கத்தில் இருந்து கடைசிவரை போராடிய போராளி மாதிரியா இருக்கு..

யாரொ ஒரு பரதேசியை.. தலைவர் ரேஞ்சுக்கு கொண்டு வந்திட்டியல் போல... :D

தோழர், இன்னுமோர் காணொளி இவர்கள் தளத்தில் இருந்து:

ஓர் பாதிக்கப்பட்ட பெண் எனப்படுபவருடன் எப்படியான பண்புடன், வார்த்தைப் பிரயோகங்களுடன் பேட்டி காண்கின்றார்கள் என்பதை பாருங்கள். காணொளியின் இறுதியில் உள்ள இவர்களின் அவசரத்தையும், பலவந்தத்தையும் பாருங்கள். இதேபாணியில் இங்கு கனடாவில் யாராவது ஊடகவியலாளர் செய்திருந்தால் கம்பி எண்ணி இருப்பார். இங்கு பாதிக்கப்பட்ட பெண் இவர்களது சொந்த சகோதரமாக இருந்தால் இப்படி காணொளியை எடுத்து வலையில் ஏற்றுவார்களா?

மற்றைய விமர்சனங்களைப் பற்றித்தெரியாது. ஆனால்..நேற்று யாழ் மாணவிகள் பற்றி ஓர் செய்தி இணைக்கப்பட்டதன் பின்னரே நான் இன்று இப்படி ஓர் விமர்சனம் வைத்தேன்:

இதில் பாதிக்கப்பட்டது உங்கள் தங்கச்சியாக இருந்தால் இப்படி தலைப்பில் செய்திபோடுவீர்களோ? அதுசரி.. 'யாழ் பிரபல பாடசாலை பெண்கள் கர்ப்பம் விடுதலை புலிகளின் வரவை யாழில் பாமர மக்கள் எதிர் பார்கின்றனர்' என்று எழுதி இருக்கிறீங்கள். யாழ் பிரபல பாடசாலை பெண்கள் பாமர மக்களோ? யாழ்ப்பாணத்தில் இருந்து செய்தி தருகின்றோம் என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உசுப்பேத்தி கவர்ச்சியான செய்திகள் தரவேண்டும் என்பதற்காக உங்கள் சகோதரங்களையே துகிலுரியாதீர்கள். இப்படியான செய்திகளை கொஞ்சம் நிதானமாக சிந்தித்து எழுதுங்கள்.

அதேசமயம் முன்பு இவர்கள் தளத்தில் இணைக்கப்பட்ட ஓர் முக்கிய காணொளியை நான் இங்கு இணைத்து இருந்தேன். குறிப்பிட்ட காணொளியை தரவேற்றியமைக்காக இவர்களுக்கு பாராட்டு கூறலாம்.

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

நாம் – யாழ் உறவுகள் யாழ் இணையம் மூலம் நம்மவர் படைப்புக்களிற்கு ஆக்கபூர்வமான விடயங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுத்து வருகின்றோம். வடலி வலைத்தளம் தொடக்கம் நேசக்கரம் வரை பல்வேறு பங்களிப்புக்கள் உள்ளன. அவசரப்பட்டு ஆரவாரத்திற்காக செய்திகளை வெளிவிடாமல் சற்று பொறுப்பான முறையில் செய்திகளை வெளிவிட்டு குறிப்பிட்ட வலைத்தளம் வளர்ச்சி அடைந்தால் நமக்கும் மகிழ்ச்சியே.

  • கருத்துக்கள உறவுகள்

இதின் பழக்கவழக்கங்களை பார்த்தால் இயக்கத்தில் இருந்து கடைசிவரை போராடிய போராளி மாதிரியா இருக்கு..

யாரொ ஒரு பரதேசியை.. தலைவர் ரேஞ்சுக்கு கொண்டு வந்திட்டியல் போல... :D

உங்கட அக்கபோருக்கு வரவில்லை தோழர் பனங்காய்... அவர் முன்னாள் போராளியாக இருந்தால் கொஞ்சம் காரசாரமாக எழுதியிருப்பார்... அல்லது முள்ளிவாய்க்கால் துயரத்தினை அனுபவித்து இருந்தால் அவரது எழுத்துகள் என்பதனைவிட கோபம் என்பது நியாமானது... மற்றது யாழ்பாணம் உங்களுக்கு சென்று பல நாள் ஆகி இருக்கும் எனக்கு மேப்பில் பார்த்ததோடு சரி... :D

  • கருத்துக்கள உறவுகள்

8xspcx.jpg

அவரின்ட வீடியோ இணைப்ப பார்த்தேன் தோழர் மொத்தத்தில் பூரா யாழாகவே இருக்கு... இது ஏதோ உங்கட கிழக்கு vs யாழ்பாணத்தான் பிரச்சனைபோல கிடக்கு... போக நல்ல செய்தியையும் யாழ்பாணத்த்தில் இருந்தே வெளியிடுறார்... கெட்ட செய்தியும் வெளியிடுறார்... ஒரு வேளை நடு நிலையோ... அல்லது உள்குத்தா ...உங்க சிக்கலை நீங்களே பைசல் பண்னுங்கள் ... ஒற்றுமையாக இருந்தால் ரைட்டு நன்றி...

டிஸ்கி:

இணைப்பை வெளிட்டமைக்காக தோழர் நியுஜாவ்னா அவர்கள் கோவித்து கொள்ளவேண்டாம்... :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

உங்களின் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது.... உங்களது தெளிவின், நீதியின், ஊடக தர்மத்தின், சமுதாய அக்கறையின் இலட்சணங்கள்!

நீங்கள் சொல்லியிருந்த.... ஊரில் நடந்த தவறுகளை நான் நியாயப்படுத்த முனையவில்லை!

ஊடகம் என்ற விடயத்தினை கையிலெடுத்தபின் அதை எவ்வாறு கையாளவேண்டுமோ.. அதை அவ்வாறுதான் கையாளவேண்டும். என்னைப் பொறுத்தவரையில், ஊடகத்திற்கு நடுநிலை என்பதே இருக்கக் கூடாது. அது, யார் பாதிக்கப்படுகின்றார்களோ அவர்களின் பக்கமாகவே அது சாய வேண்டும். அவர்களுக்காகவே அது வாய்திறக்கும்;சில சமயங்களில் அவர்களுக்காகவே அது மெளனமாயிருக்கும்.

ஒரு பாதிக்கப்பட்ட இனத்திடம்... அழிந்து நொய்ந்து போயிருக்கும் இனத்திடம்... எஞ்சியிருக்கும் மானத்தின் கடைசித் துகிலையும் உரியும் துச்சாதனர்களாய்... தமிழரின் தன்மானம் காக்க புறப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு கிளம்பும் நீங்கள் மாறிவிடாதீர்கள்!

அவரின்ட வீடியோ இணைப்ப பார்த்தேன் தோழர் மொத்தத்தில் பூரா யாழாகவே இருக்கு...

இது ஏதோ உங்கட கிழக்கு vs யாழ்பாணத்தான் பிரச்சனைபோல கிடக்கு...

போக நல்ல செய்தியையும் யாழ்பாணத்த்தில் இருந்தே வெளியிடுறார்... கெட்ட செய்தியும் வெளியிடுறார்... ஒரு வேளை நடு நிலையோ... அல்லது உள்குத்தா

தோழரே நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பவேண்டாம்....

இந்த இணையத்தின்.... சொல்லாடல், கருத்துநயம், பழக்கவழக்கம், பொய் கதைகள், எமாற்றுத்தனம்.. திருகுதாளம்.... அதன் மூலம்... பல அப்பவிகளை மன / உடல் உளைச்சலுக்கு உள்ளாக்கும் போக்கிரித்தனம்.. இவற்றையே விமர்சிக்குறோம்.. இவர்களை போன்றவர்களுக்கு பச்சை மட்டையில்லை, லைட் போஸ்ட்தான் சரி...

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பவேண்டாம்....

போஸ்டுமரம் எதாவது உங்க சாய்ஸ் ... தோழரே ஆனா குழம்பி போயிள்ளேன் என்று மட்டும் கூறவேண்டாம் ... கொக்குவில்... இரணுவில்... என தனித்தனியே ஈழத்தில் உள்ள ஊர்களுக்கு என்று ஆளாளுக்கு வெப்சைட்டுகளை ஆரம்பித்து இணைப்புகளை நான் தமிழ்நாதத்தில் பாக்கலியா?அல்லது அலைகள் எனறு பிள்ளையான் கிழக்குக்கு தனியாக தொடங்கியது எனக்கு தெரியவில்லையா? :Dஇன்னும் தீப்பொறி... அதிரடி... இலக்கு ...இலக்கியா... ஈழ நாசம்... நிதர்சனம்....இன்பினிட்டி..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

யாரப்பா இது? ஒரு பொறுப்புள்ள இணையதள ஆசிரியர் தனது வாசகர்களுக்கு எழுதுறது மாதிரியா வார்த்தைகளைப் பயன்படுத்தி இருகிறார்? வார்த்தைப் பிரயோகங்கள் பச்சைப் படுபாந்திர பிழைகளா இருக்கு!! :D

இந்த இணையத் தளத்திற்கு ஆசிரியர் குழுவேறையோ? அதில இருக்கிற ஒருத்தருக்காவது மரியாதையாக வாசகர்களின் கருத்தைமதிக்கத் தெரியவும் இல்லைஎழுதவும் தெரிய இல்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

முதுகிலே காயத்தை வைத்துக் கொண்டு பற்றைக்குள் புக வேண்டாம்.

எமது தமிழ் சமூகத்தை பற்றி அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால் நீங்கள் அப்போதே போராடப் புறப்பட்டு இப்போ மாவீரனாக இருந்திருத்தல் வேண்டும்.

அங்கயக்கன்னி குண்டுடன் எதிரி மீது பாய நீங்கள் எந்த பங்கருக்குள் புகுந்து இருந்தீர்கள்?

யாழ்ப்பாணத்து பெண்களை பற்றிக் கவலைப்பட உங்களுக்க என்ன அருகதை இருக்கிறது?

கிருசாந்தி குமாரசாமியை எதிரி கற்பழித்த பின்னராவது உங்களது ஆண்மை வெளியே வரவில்லையே?

அவர் மற்றதை அவரின்ட களத்தில் இணைத்தார்.... இது ஏதோ டி.ஆர்.பி ரெட்டிங்க் போல அவரது தளத்தினை உயர்த்து வதற்கு செய்தார் ......இது நடுநிலையோ... அல்லது வேறு எதுவோ ... அல்லது நேரத்திற்கு இனத்தினை வாய் பம்மாத்துக்களால் இனத்தினை இழுக்கு கருநாவினை போல இருந்தா இவர் கண்டிக்கபடவேண்டியவர் இவர் ஒரு உண்மையான் புலி போராளியாக இருக்கும் பட்சத்தில் இந்த கருத்துகள் உண்மையானவை ... சிவகாசி பாட்டாசானவை....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.