Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஸ்ட்ரேலியாவிற்கு அறிவுரை வழங்கும் மனித குல எதிரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்ட்ரேலியாவிற்கு அறிவுரை வழங்கும் மனித குல எதிரி!

img1101018046_1_1.jpg

வென்றவனும், வெல்பவனும் வைத்ததுதான் சட்டமும் நியாயமும்’ என்கிற ஃபாசிஸ்ட் சிந்தாந்தம் ஆளுகிற இன்றைய பன்னாட்டு அரசியலில் மானுடத்திற்கும், மனித தன்மைகளுக்கும் மரியாதை தேடுவது பைத்தியக்காரன் செயல்தான். இல்லையென்றால், தமிழீழ அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று ஒரு சிங்கள இனவெறியன் மானுடத் தன்மை மிக்க ஆஸ்ட்ரேலிய அரசிற்கு அறிவுரை வழங்கத் துணிவானா?

“ஆஸ்ட்ரேலியாவிற்கு அடைக்கலம் தேடி வருகிறவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுங்கள்” என்று தி ஆஸ்ட்ரேலியன் என்ற நாளிதழிற்கு கோத்பய ராஜபக்ச பேட்டி கொடுத்துள்ளான்.

சி்ங்கள இனவெறிப் படைகளால் சின்னா பின்னமாக்கப்பட்டு, சொந்த மண்ணில் குந்தக் கூட இடமின்றி சிதறடிக்கப்பட்டு, இருண்டு கிடக்கும் நிகழ்காலத்தில் எதிர்காலத்தைத் தேடி, உள்ள சொத்துக்களையெல்லாம் விற்று, தாங்கள் பெற்ற பிள்ளை குட்டிகளோடு, உயிரைப் பணயமாக்கி, பசிபிக் பெருங்கடலில் மாதக் கணக்கில் பயணித்து ஆஸ்ட்ரேலிய மண்ணை மிதிக்கும் மக்களிடம் கடுமையாக நடந்துகொள் என்று ஆஸ்ட்ரேலிய அரசிற்கு கோத்பயா ராஜபக்சா அறிவுரை கூறுகிறான்.

குடும்பத்தின் உறுப்பினர்களில் பாதிப்பேரை இழந்துவிட்டு, பட்டினியால் கண்கள் இருண்டு, இதற்குமேல் உயிருக்கு ஆபத்தில்லை என்ற ஒரே ஆறுதலோடு ஆஸ்ட்ரேலிய மண்ணில் கால் பதிக்கும் தமிழீழ மக்களிடம் கடுமையாக நடந்துகொள் என்று இந்த மனிதம் அற்ற காட்டுமிராண்டி கூறுவதை கேட்டுக்கொண்டு ஆஸ்ட்ரேலிய அரசு செயல்படும் என்று எந்த எதிர்ப்பார்ப்பில் கூறினான் என்று தெரியவில்லை!

தன்னைப் போலவும், தனது சகோதரர்களைப் போலவும் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் இதயமற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து இந்த அறிவுரை கூறியிருப்பானா? அல்லது தனது அதிபர் அண்ணனை காமல்வெல்த் போட்டிகளுக்கு அழைத்துக் கெளரவித்த அண்டை நாடான இந்தியா போல் தாங்கள் செல்வதையெல்லாம் நம்பிக் கொண்டு செயல்படும் ஒரு அரசு என்று ஆஸ்ட்ரேலியாவையும் நினைத்து அறிவுரை சொல்கிறானோ தெரியவில்லை.

போரை நிறுத்து, அப்பாவி மக்களைக் காப்பாற்று என்று உலகமே குரல் கொடுத்தபோதும், சீனா, இந்தியா போன்ற தெற்காசிய வல்லாதிக்கங்களின் முழு ஆதரவையும் உறுதி செய்துக் கொண்டு, கனரக ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் பொழிந்து அப்பாவி மக்களை பல்லாயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொன்றொழித்து, போரின் இறுதிக் கட்டத்தில் சில நாட்களில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்துவிட்டு, உலகத்தின் முன்னே இனப் படுகொலையாளனாகவும், போர்க் குற்றவாளியாகவும் நிற்கிற ஒரு அரசின் பாதுகாப்புச் செயலராக நின்றுக் கொண்டு தான் பேசுவதை உலகம் மரியாதையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைத்திருப்பான் போலும். அப்படி நினைத்துப் பேசியிருப்பானாகில் இவனை விட முழுப் பைத்தியம் எவனும் இருக்க முடியாது.

img1101018046_1_2.jpg

தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களை தன் கையாலேயே கொன்றொழித்த குற்றவாளி என்ற குற்றச்சாற்றோடு சர்வதேசத்தின் முன்னால் தலை கவிழ்ந்து நிற்கிற ராஜபக்ச கூட்டம், உள்ளூர் அரசியல் தந்த வெற்றியில் எல்லாம் மறைந்துவிட்டது என்று எண்ணியே இறுமாந்து பேசிக் கொண்டிருக்கிறது.

இங்கிருந்து (இலங்கையிலிருந்து) படகில் வெளியேற எவரையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. அவர்கள் இங்கிருந்து விமானம் மூலம் வெளியேறி, அயல் நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து இப்படி படகில் சென்று உங்கள் நாட்டை அடைகின்றனர்” என்று ரூட் மேப்பை படிக்கிறான். அட முட்டாளே, நீ கூறுவதுபோல் உனது(?) நாட்டில் வாழ்வதற்கு வழியிருந்தால் அவர்கள் ஏன் இவ்வளவு சிரம்ப்பட்டு உலகெங்கிலும் அகதிகளாக அடைக்கலம் நாடுகிறார்கள்? நீ அறிவுரை கூறும் ஆஸ்ட்ரேலியாவிற்கு இந்தக் கேள்வி எழாதா?

ஹிட்லருக்கு ஒரு கோயபல்ஸ் போல், இந்த இனவெறி சிறிலங்க அரசிற்கு ஒரு பேராசிரியர் கிடைத்துள்ளார். பெயர்: ரோஹன் குணவர்த்தனே. சிங்கப்பூர் பல்கலையில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணராம் இவர். இந்த ‘நிபுணர்’ உண்மையானவராக இருந்தால், பயங்கரவாதம் என்பதன் இன்றைய முகம் ராஜபக்ச சகோதரர்கள் என்பது பளிச்சென்று தெரிந்திருக்கும், ராஜபக்ச சகோதரர்கள் கட்டவிழ்த்துவிட்டதுதான் அரச பயங்கரவாதத்திற்கு அச்சரம் பிசகாத உதாரணம் என்று கூறியிருப்பார். ஆனால் இவரும் சிங்கள இனவெறியில் அங்கமாகத் திகழ்வதால், விடுதலைக்காக போராடும் இயக்கத்தை பயங்கரவாதம் என்று கூறி, பொய்யை உண்மையாக்கி விற்றுக் கொண்டிருக்கிறார்.

“ஆஸ்ட்ரேலியாவில் அடைக்கலம் புகும் தமிழர்கள் ஓராண்டிற்குப் பிறகு அவர்கள் மீண்டும் இலங்கைக்கு (ஈழத்திற்கு) வந்து தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர்” என்று ஒத்து ஊதியுள்ளார் ரோஹன் குணவர்த்தனே. அவர்கள் வாழ்ந்த இடங்களை வந்துப் பார்த்துவிட்டுச் சென்றால் என்ன? அது அவர்களின் பூமி, இன்றைக்கு அகதிகளாக உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், ஒரு நாள் முழுச் சுதந்திரத்துடன் வாழ அவர்கள் அங்கு வந்துதானே ஆக வேண்டும்? அவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? அதற்கு பதிலென்ன?

அதுசரி, அப்படி வந்துக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? அவர்களை அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு அனுமதிக்கிறீர்களா? அங்கு அவர்கள் இடம் இன்னமும் அவர்களுடைய இடமாகவே இருக்கிறதா? இல்லை, சிங்களருக்கு பங்கு போட்டு வழங்கப்பட்டுவிட்டதா? தமிழர்களின் நகரங்களையெல்லாம் இராணுவப் பகுதிகள் (Military Cantonment) என்று கூறி, அங்கெல்லாம் உனது படைகளை நிறுத்தியுள்ளாய். அவர்களின் காணிகளை அபகரித்து சிங்கள சிப்பாய்களுக்கும், புதிதாக குடியேற்றப்படும் சிங்களர்களுக்கும் அளித்துக் கொண்டிருக்கிறாய். இந்த உண்மைகள் யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தி ஆஸ்ட்ரேலியன் நாளிதழிடம் பேட்டி என்ற பெயரில் உளறிக்கொ்ண்டிருக்கிறாய். நல்ல இராஜதந்திரி!

“அவர்கள் சிறிலங்காவை விட்டு ஏன் வெளியேற என்ன காரணம் இருக்கிறது? எதற்காக பயப்பட வேண்டும்? அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரத்துடன் வாழலாமே?” கோத்தபயாவின் அற்புத வார்த்தைகள் இவை!

அவ்வளவு சுதந்திரம் நிலவுகிறதா அங்கு? அப்படியானால் பன்னாட்டு ஊடகங்களை தமிழர்கள் வாழும் பகுதிக்கு ஏன் அனுமதிக்க மறுக்கிறாய்? உனது பாசத்திற்குரிய சகோதரன் அதிபர் ராஜபக்ச நியமித்த ‘கற்ற பாடங்களும் தேச நல்லிணக்கமும்’ என்கிற ஆணையத்தில் சாட்சியமளிக்க வந்தவர்கள் உண்மையைக் கூறத் தலைப்பட்டவுடன் அடித்து துரத்திய கதை உலகிற்கு தெரியாது என்று நினைத்து உளறுகிறாய்!

தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போர் நடந்துக் கொண்டிருந்தபோது கோத்தபய உச்சரித்த வார்த்தைகள் இன்றுவரை இலங்கையில் பிரசித்தம். அப்போது கோத்தபய கூறினான்: “அவர்களுடைய (தமிழர்களுடைய) சொத்துக்கள் உங்களுடையது, நீங்கள் வெல்லும் இடம் உங்களுக்குச் சொந்தம். எதிரில் வரும் ஆண்களைக் கொன்று சமுத்திரத்தி்ற்கு இறையாக்குங்கள், அவர்களின் பெண்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று இனவெறியுடன் பேசி, சிங்கள இராணுவத்தை உசுப்பேற்றியவன், இன்றைக்கு சுதந்திரம் பற்றிப் பேசுகிறான். தமிழனின் மறதியில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளான் போல்.

சுதந்திரம் என்றால் என்னவென்று இன்றைய உலகில் வேறு எந்த இனத்தையும் விட தமிழனுக்கு அதிகம் தெரியும், அதிகம் புரியும். குறிப்பாக ஈழத் தமிழனுக்கு நன்றாக புரிந்த உயர்ந்த பொருள் கொண்டது சுதந்திரம். சில இலட்சம் மக்களையும், பல்லாயிரக்கணக்கான மாவீரர், வீராங்கனைகளை கொடுத்து அவர்கள் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்துள்ளார்கள். அவர்கள் இரத்தம் சிந்திய ஈழத் தமிழ் மண் இன்றைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தாலும் ஒரு நாள் விடியலைப் பெற்றெடுக்கும். அந்த விடுதலையை உறுதி செய்வதற்கே அவர்கள் இன்று உலகெங்கிலும் சென்று அகதிகளாக தஞ்சமடைகிறார்கள்.

இந்தக் கடைசி இரகசியம் கோத்தபயாவிற்கு புரிந்துள்ளது! “வெறொரு வடிவில் தங்கள் போராட்டத்தைத் தொடர அவர்களில் சில குழுக்கள் முயன்று வருகின்றன என்பது எங்களுக்குத் தெரியும்”. இன்னுமும் பயம் உள்ளது.

இலங்கையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்தத் தீவின் மூன்றில் ஒரு பகுதியில் தமிழர்களின் அரசு இருந்தது. ஒரு இனவெறி அரசின் ஒடுக்குமுறையை பலம் கொண்ட மட்டும் எதிர்த்து அது 15 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துள்ளது. அந்த நாட்டை, தங்களுக்கு வசதியான சர்வதேச அரசியல் கண்கொண்டு பார்த்த இன்றைய உலகத்தின் பலசாலி நாடுகள், தவறாக புரிந்துகொண்டன. அதன் விளைவு இன்றைக்கு அந்த நாடு இல்லை. அது சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன் அடிமைத் தளையில் சிக்கி, குந்த இடமின்றி, கழிவறைக்குக் கூட வழியின்றி, தமிழர் வரலாற்றில் முன்னெப்போதும் காணாத அவலத்தில் ஈழத் தமிழினம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.

img1101018046_2_1.jpg

அன்றாட பிழைப்பிற்கு கண்ணி வெடி அகற்றலில் ஈடுபடும் அளவிற்கு அதன் துயரத்தின் எல்லை விரிவடைந்துள்ளது. ஆயினும் அது தனது சுதந்திர உணர்வை இழந்துவிடவில்லை. எப்படி மாவீரன் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகும் விடுதலைத் தீ இந்தியாவின் ஆழ் மனதில் கனன்றுகொண்டிருந்து, அரை நூற்றாண்டிற்குப் பிறகு சிப்பாய்க் கலகமாக வெடித்ததோ, எப்படி அதனைத் தொடர்ந்து அந்தப்பொறி எரிமலைச் சீற்றத்துடன் இளைஞர் மனதில் இருந்து குமுறி எழுந்ததோ, அதேபோல், குறுகிய எதிர்காலத்தில் சுதந்திர நாடு சமைக்க அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேல் அரும்பாடு பட்டு போராடினார்களோ, அந்தத் தனி ஈழத் தீ மீண்டும் பற்றும். அதன் வீச்சு கோத்பய போன்ற மானுட எதிரிகை மிகச் சாதாரணமாக விழுங்கிவிடும்.

அதுவரை ராஜபக்சாக்கள் உதிர்க்கும் பொய்கள் ஊடகங்களில் உலாவரும்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1010/18/1101018046_1.htm

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.