Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஊடக உலகின் கரிநாளாக ஒக்டோபர் 19

Featured Replies

தமிழுலகை எவ்வாறு 2009ம் ஆண்டு மே 18ம் திகதி புரட்டிப் போட்டதோ அதே போன்று தமிழ் ஊடக உலகைப் புரட்டிப் போட்ட நாளாக 2009 ஒக்டோபர் 19ம் திகதி வரலாற்றில் இடம்பெறுகிறது. தமிழ்த் தேசியத்திற்கான புனித பணியாக செயற்பட்டு வந்த புதினம் இணையத்தளம் நிறுத்தப்பட்ட நாள் இதுவேயாகும்.

புதினம், தமிழ்நாதம் என இரண்டு இணையத்தளங்கள் போராட்டத்தின் நியாயத்தை வெளியுலகிற்குக் கொண்டு வருவதற்கான ஊடகங்களாக தமிழீழ வரலாற்றில் மாத்திரமல்ல அதையும் தாண்டி உலகளாவிய தமிழர்களின் வரலாற்றில் சேவையாற்றிக் கொண்டிருந்தன.

மேற்குலக ஊடகங்களே மேற்கோள் காட்டும் ஒரு தளமாக பரிணமித்த புதினம் செய்தித் தளம் தமிழீழ மக்களுடன், போராட்ட சக்தியுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டதன் மூலம் உடணடிச் செய்திகளை உலகிற்குக் கொண்டு வரும் தளமாக விளங்கியது.

எமது மக்கள் தொகைதொகையாக கொண்று குவிக்கப்பட்ட காலப்பகுதியில் அதனை அப்படியே உலகின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், புலிகளின் வீரதீரச் செயல்களையும், வேண்டுகோள்களையும் உடணடியாகக் கொண்டு வந்தது.

தொண்டார்வ அடிப்படையில் பல தேசிய நாட்டம் கொண்டவர்களால் சமூகநலத்தை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வந்த இந்தத் தளமே போராட்ட களத்தின் இறுதி அத்தியாயத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் செய்தியை மக்களிற்கு எடுத்து வந்தது. அதற்கு அடுத்தபடியாக “இறுதிக் கணத்தின்” பிரதிநிதிகளாக வெளிநாட்டுப் பணிப்பிரிவைச் சேர்ந்த திலீபனின் செய்தியையும், “இறுதி மூச்சு” வேண்டுகோளாக கடற்புலிகளின் தளபதி சூசையின் வேண்டுகோளையும் எடுத்து வந்தது.

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் விடுதலைப் போராட்டம் சந்பந்தமான “உண்மைகளை மறைக்கும் படியான” அழுத்தங்களை புதினமும், தமிழ்நாதமும் தவிர்த்து மக்களிற்கு உண்மைகளை விளம்பும் இணையத்தளங்களாகவே செயற்பட்டு வந்தன. தாங்கள் சொல்லும்படி செயற்படாவிட்டால் அவலங்களைச் சந்திக்க வேண்டும் என்ற மிரட்டல்கள் மத்தியிலும் அது உண்மைகளை மக்களிற்குக் கொண்டு வந்தது.

இருந்த போதும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் தனிப்பட்ட முறையிலான அநாகரிக மிரட்டல்கள், பெண்பாலார் என்று கூடப் பாராமல் இணையத்தை நடத்தியவர்களின் குடும்பத்தினரைக் கூட தொடர்ச்சியாக தொலைபேசியூடாக மிரட்டியது என்ற காரணங்களால் இந்த இணையத்தளங்கள் மூடப்படுவதைத் தவிர வேறு எந்த வழியையும் இந்த வன்முறை இணையத் தளத்தைத் நடத்தியவர்களிற்கு விட்டு வைக்கவில்லை.

தேசியத் தலைவரின் விடுதலை நோக்கிய வீச்சையும், தமிழீழம் என்ற தேசத்தின் விடிவையும் மாத்திரமே நோக்கமாக கொண்டிருந்த இத் தளங்கள் இரண்டும் மிரட்டப்பட்ட போது சகோதர ஆங்கிலத் தளம் மௌனமாக அதை ஆமோதித்துக் கொண்டேயிருந்தது. இன்று ஒருவருடம் கடந்து விட்டது. அனைவருமே எது உண்மை எது பொய் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இனிவரும் ஒவ்வொரு வருடமும் தமிழ் ஊடக உலகின் கரிநாளாக ஒக்டோபர் 19ம் திகதி கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதுவே நாம் சுதந்திரமான கருத்துக்கூறலுக்கு எம்மைப் பழக்கிக் கொள்ள வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் மற்றும் தமிழ்நாதம் இணையத்தளங்கள் அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளால் மிரட்டி நிறுத்தப்பட்டது பலருக்குத் தெரிந்தபோதும் அதனைக் கண்டித்து புலம்பெயர் தமிழ் இணையத்தளங்கள், ஒலி மற்றும் ஒளி ஊடகங்கள் அறிக்கைகளோ அல்லது கண்டனங்களையோ வெளியிடவில்லை.

இவ்வளவுக்கும் மேற்படி இணையத்தளங்களால் பயன் பெற்றவர்கள் புலம்பெயர் தமிழ், ஆங்கில ஊடகங்களே.

சிறிலங்கா அரசு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியபோதும் கொலை செய்தபோதும் விழுந்தடித்து கண்டனம் வெளியிட்ட ஊடகங்கள் இது விடயத்தில் மௌனமாகிப் போய்விட்டது கவலைக்குரியதே. அனைத்துலக தொடர்பாகத்தின் ஊடக அடக்குமுறையின் தொடர்ச்சியே தமிழ்நேசன் இணையத்தளம் நிறுத்தப்பட்டது. இது விடயத்திலும் அனைவரும் மௌமாகியே விட்டனர்.

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கவும் ஊடக சுதந்திரத்தினை பாதுகாக்கவும் பிபிசி தமிழோசை ஆனந்தியக்கா போன்ற ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்ட அனைத்துலக தமிழ் ஊடக ஒன்றியம் (பெயர் சரியாக குறிப்பிடுகின்றேனோ தெரியாது) என்னதான் செய்தது? வருடாந்தம் பலரை அழைத்து உரையாற்றவிட்டு விருந்துண்டு கும்மாளம் அடிப்பதுதான் இவர்களின் ஊடக சுதந்திர பாதுகாப்பு முறையோ?

எல்லாம் பசை இருக்கும் வரைதான் பிடிமானம் என்கிற உலக நடைமுறை மேற்படி இணையத்தளங்களுக்கு வந்தது புலம்பெயர் தமிழர்களின் சாபக்கேடுகளில் ஒன்றாகவே கருதவேண்டும்.

Edited by nirmalan

... 2009 மே இற்குப்பின்னம் அவுஸ்ரேலிய சிட்னியிலிருந்து லண்டனுக்கு ஒரு தெரிந்தவர் வந்திருந்தார். வந்தவர் அங்குள்ள புலிகளின் சர்வதேச செயலக முக்கியஸ்தகர்!!! ... கதைத்துக் கொண்டு போகும்போது சொன்னார் ... புதினம்/தமிழ்நாதம் நடத்துகிறவர், அங்குதான் இருக்கிறார். அவர் இப்ப சொல்வழி கேட்கிறார் இல்லை! நாலு தட்டுப்போட அடங்குவார் .... (இதனை இங்கு யாழில் முன்பும் பதிந்திருந்தேன்).

... பின்பு கேள்விப்பட்டேன் அவ்விணையங்களை நடத்தியவர் எப்பேற்பட்ட இடர்களின் மத்தியில் கடந்த காலங்களில் கொண்டிழுத்தார் என ...

... இங்கு வேறொரு திரியில் ... நெடியவனை கைது செய்ய வேண்டும் ... என்ற செய்தி!!! .... இந்த புதினம்/தமிழ்நாதம் முடக்கப்பட்டதில் நெடியவனின் பங்கு என்ன?????????? இல்லை நெடியவனுக்கு ஒன்றும் தெரியாதா???????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

:wub: நெல்லைய்யன்,

புதினம் இனையத்தளத்தை நான் வாசிக்காது விட்ட நாட்களில்லை. ஆனால் எப்போது அது தேசியத்தலமை மீதும் போராளிகள் மீதும் புழுதி வாரி அடித்து தன் போக்கில் போக ஆரம்பித்ததோ அன்றைக்கு அதைப் படிப்பதை விட்டு விட்டேன். வழுதியும் இன்னும் சில பேரும் புதினப்பலகை எனும் இணையத்தளத்தில் கொட்டித்தீர்த்த வசவுகளைப் பார்க்கும்போது உண்மையான புதினம் எங்கே மரப்புதினம் எங்கே என்று தோன்றுகிறது.

2009 மே 19 இற்கு முன்னர் இருந்த புதினத்தின் போக்கு வேறு இப்போதிருக்கும் மரப்புதினத்தின் போக்கு வேறு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன், கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனைவிடுத்து பொட்டைப் புள்ளத்தனமாக மிரட்டி தளங்களை நிறுத்துவதனை சரி என நீங்கள் கூற வருகின்றீர்களா?

இவர்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என தெளிவுபடுத்த முடியுமா?

புதினம் செய்தவர்கள்தான் புதினப்பலகை செய்கிறார்கள் எனக் குறிப்பிட வருகின்றீர்கள். பழைய புதினத்தின் செய்தி நடைகளுக்கும் அதன் தலையங்க ஸ்டைலுக்கும் பாரிய வித்தியாசம் இருப்பதனை வாசித்து அறிந்து நீங்கள் கண்டுகொள்ளலாம்.

யாவற்றையும் மேன்போக்காக அறிந்துகொண்டு பிழை பிடிப்பதனை தவிர்த்து யாவற்றையும் தீர விசாரித்து அறிவதே மேல்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்,

கருத்தினைக் கருத்தினால் எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதுவரை காலமும் இருந்துவந்த புதினத்தின் போக்கு திடீரென்று மே 19, 2009 இற்குப்பின்னர் மாறியது ஏனென்றுதான் புரியவில்லை. புதினத்தாரும், புதினப்பலகையும் ஒன்றா என்றுகூடத் தெரியவில்லை. ஆனால் அவைகளின் போக்கு மட்டும் நேர் எதிரானவை என்பதுமட்டும் புரிகிறது.

அதுமட்டுமல்லாமல், தேசியத் தலமையையும், போராளிகளையும், போராட்டத்தையும் விமர்சிப்பதுதான் கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன செய்வது? இந்தக் கருத்துச் சுதந்திரம் ஏன் புலிகள் இருக்கும்போது, இன்னும் சொல்லப்போனால் மே 19 இற்கு முன்னர் புதினம் இணையத்தளத்தில் இருக்கவில்லை?? அப்போதுகூட அது மிரட்டப்பட்டுத்தான் இயங்கிக்கொண்டிருந்ததா??

மே 19 ஈர்குமுன்னர் இருந்த புதினத்தை நான் மறக்கவில்லை, நான் விரும்பிப் படிக்கும் ஒரே தமிழ் இணையம். ஆனால் இன்று, அந்த இனையத்துக்கு இறுதியாக எப்போது போனேன் என்றுகூட நினைவில்லை.

இன்றைக்குப் புதினப்பலகை விமர்சனங்கள் என்கிற கோதாவில் செய்வது போராட்டத்தின்மீது கரி பூசுவது மட்டும்தான். மே 19 இற்குப்பின்னரான புலம்பெயர் தமிழரிடையே ஏற்பட்ட பிளவு இணையங்களுக்கும் பிடித்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடுகடந்த அரசு, உலகத் தமிழர் பேரவை என்று பிரிந்து கிடக்கும் சமூகத்துடன் இணையங்களும் பிரிந்து போய்க் கிடக்கின்றன. இந்தப் பிளவுதான் ஒன்றின் மீது இன்னொன்று கரிபூசவும், வசைபாடவும் தூண்டுகின்றன. இந்த வசைபாடல்கள் சிலவேளை சில தனிமனிதர்களால் தமது சொந்தக் காழ்ப்புணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன, உதாரணம் வழுதி எனும் புழுதிகள்.

இணையங்கள் ஒன்றுசேரவேண்டும், அப்போதுதான் பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒன்றாக்க முடியும். இதைச் செய்யவேண்டியது இன்று தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களிடம் இருக்கிறது. ஆனால் அவர்களே பிளவுகளை ஆளப்படுத்துவது எமக்கு இன்னும் அழிவுகளையே விட்டுச் செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவை பலர் (அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகளும் தமிழ்நெட்டும்) தமது சுயலாபங்களுக்காக இருட்டடிப்புச் செய்தவேளை புதினமும் அவர்களுடன் சேர்ந்து அந்தச் செய்தியினை முதலில் இருட்டடிப்புச் செய்தது.

நான் அறிந்தவரையில் அவர்கள் பின்னர் சுதாகரித்துக்கொண்டு பிரபாகரனின் வீரச்சாவினை இருட்டடிப்புச் செய்வதால் தமிழினத்துக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை என்று கருதி வழுதியின் கட்டுரை வாயிலாக பிரபாகரன் வீரச்சாவடைந்ததனை வெளி உலகுக்கு வெளிக்கொணர்ந்தனர்.

வழுதியின் கருத்தோடு மோதாது தமிழ்நாட்டில் உள்ள உணர்வாளர்கள் உட்பட வெளிநாட்டு ஆய்வாளர்கள் வழுதி யார், அவர் பின்னணி என அறிய முற்பட்டதோடு, அவரின் கருத்தோடு மோதாது அவருடன் மோதியதுதான் சோகம்.

விடுதலைப் புலிகளுக்கும் உண்மையில் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள்தான். அதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. விடுததலைப் புலிகளின் அடாவடிகளை 'முறிந்த பனைகள்' ஊடாக வெளிக்கொணர்ந்த றஜனி திரணகம உள்ளிட்ட பலரை படுகொலை செய்துவிட்டு மாற்றுக்குழுக்கள் மீதும் சிறிலங்கா புலனாய்வுத்துறை மீதும் போட்டிருந்தனர். இதனை தமிழ்ச் சமூகமும் நம்பியிருந்தது என்னவோ உண்மை.

மே-18-க்கு முன்னைய காலம் வரை தமிழ் மக்களை மாய உலகுக்குள் வைத்திருந்ததில் புதினமும் உடந்தையாக இருந்துள்ளது. அதனை நான் உட்பட யாரும் மறுப்பதற்கு இல்லை. அதற்காக அந்தத் தளம் நடத்துபவர்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கவேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பது தவறு.

இன்று உள்ள இணையத்தளங்கள் மக்களை மாய உலகுக்குள் வைத்துக்கொண்டு தனிநபர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் புதினம் எவ்வளவோ பரவாயில்லை என்றே கூறவேண்டும்.

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.