Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவு சாத்தியமானால் மட்டுமே தீர்வு ஜனாதிபதி திட்டவட்டம்

Featured Replies

கொழும்பு, ஒக்ரோபர் 20

தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமைஒருமித்த கருத்துஏற்பட்டாலேயே இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வை யும் முன்னெடுக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று முன்தினம் தன்னைச் சந்தித்த பொதுநலவாய நாடாளுமன்றச் சம்மேளனம் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளிடமே அவர் இதனைத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் "சில தமிழ்க் கட்சிகள் சாதகமாகப் பதிலளித்துள்ளன. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவற்றுக்கு இடையே ஒற்றுமைஒன்றிணைவு ஒருமித்த கருத்து ஏற்படுவதற்காக நாம் காத்திருக்கின்றோம். குறிப்பாக அபிவிருத்தி தொடர்பான விடயத்தில் இந்த ஒன்றிணைவு அவசியம்'' எனத் தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ஷ.

அதேசமயத்தில் இந்த விடயம் குறித்துத் தமிழ்க் கட்சிகளுடன் தான் பேச்சுக்களை நடத்த உள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடாளுமன்றச் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி இக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார்.

இந்தக் குழுவினர் நேற்றுமுன்தினம் மாலை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போது வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்டமையை மேர்பி வரவேற்றார்.

""பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உங்களுடன் இருக்கின்றன. இலங்கைக்கு உதவுவதற்கும் தயாராக உள்ளன'' என்று மேர்பி ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

சந்திப்புத் தொடர்பில் அவர் விடுக்கப்பட்ட அறிக்கையில் இப்படித் தெரிவிக்கப்பட்டுள்ளது. ""இந்தத் தீவில் இருந்து பயங்கரவாதம் அகன்றமை எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இப்போது புனர்நிர்மாணம், மீளப் பொலிவு பெறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் வரிசையாக மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளன'' எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர், மின்சாரம், பாடசாலை, சுகாதர சேவைகள், கல்வி போன்றனவே வடக்கு மக்களின் இன்றைய உடனடித் தேவைகள் என்று வெளிநாட்டுத் தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார் எனவும் அறிக்கை குறிப்பிட்டது

http://www.newlankasri.com/ta/link.php?33e6C332RS

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவு சாத்தியமானால் மட்டுமே தீர்வு ஜனாதிபதி திட்டவட்டம்

பலே பலே.. இதான் ஒட்டல் மோரில் வெண்னையெடுப்பது என்பதா...?

டிஸ்கி:

ஒட்டல் மோரில் சுத்தமாக வெண்ணைய பிழிந்து எடுத்துவிட்டே சப்ளை செய்வார்கள்... ஆக அந்த மோரில் திரும்ப உக்கார்ந்து வெண்னையெடுப்பது என்பது ரொம்ப கஸ்டம்.. ஈழதோழர்கள் இந்த "கல்லில் நார் உரிப்பது" போன்ற பழைய பழமொழிகளை கடாசிவிட்டு .. புதிய .....அன்றாட வாழ்கை பழ மொழிகளை இது போல எடுத்துவிடவேண்டும் என கேட்டு கொள்கிறேன்.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.