Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கோல மாற்றம்

Featured Replies

யாழ் கோட்டை நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வருவதுபோல், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சங்கானைக் கோட்டைகள், சங்கிலியன் தோப்பு, மந்திரி மனை, நிலாவரைக் கிணறு என்பனவும் விரைவாகப் புத்தாக்கம் செய்யப்படவேண்டும்.

யாழ்ப்பாணம் முற்றிலும் ஒரு புதினமாக இருப்பது பலரது வருகைக்குக் காரணமாயிருக்கிறது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தம் தேசத்தையும், உறவுகளையும் காண்பதற்காய் புலம்பெயர் தமிழர்கள் வந்தவண்ணமுள்ளனர். ஜுலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்கள் கோவில் திருவிழாக் காலம் என்பதும் இவர்களது வருகைக்கான மேலதிக ஊக்கியாகியது. திடீரென அதிகரித்துள்ள இந்த வருகைகள், இதனால் எமது பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் பொருளாதார முன்னேற்றம் என்பன, யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை விரிவு படுத்தவேண்டிய தேவையை அதிகரித்துள்ளது. சுற்றுலா மையங்கள்புராதன வரலாற்றுச் சின்னமாக இருக்கும் யாழ் கோட்டை நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வருவதுபோல், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சங்கானைக் கோட்டைகள், சங்கிலியன் தோப்பு, மந்திரி மனை, நிலாவரைக் கிணறு என்பனவும் விரைவாகப் புத்தாக்கம் செய்யப்படவேண்டும். எல்லா மதத்தினரையுமே ஈர்க்கும் நல்லூர் முருகன்;, நயினாதீவு அம்மன், நாக தீப விகாரை, நாக விகாரை, செல்வச்சந்நிதி, கீரிமலை நகுலேஸ்வரர், கந்தரோடை பௌத்த சின்னங்கள், சின்னமடு தேவாலயம், பெரிய பள்ளிவாசல் என நீளும் வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய வகையில் பயன்படுத்தப்படவேண்டும். நிலாவரை கிணறு, யமுனா ஏரி போன்ற புராதன நீர் மையங்களுக்குப் புறம்பாக, கசூரினா, சாட்டி, மணற்காடு, தொண்டமனாறு கடற்கரைகள், தென்னிலங்கையிலுள்ள காலி, பெந்தோட்டை கடற்கரைகளுக்கு ஈடாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து, வெளிநாட்டு வருவாயை அதிகளவில் எமக்கு ஈட்டித்தரக்கூடியவை. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பனை வளத்தை உபயோகித்துச் செய்யப்படும் பொருள்கள், உணவுவகைகள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பவை. ‘கள்ளு’ என்றழைக்கப்படும் பனஞ்சாறு இதில் ஏற்கனவே அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. கடலுணவுகள் மற்றும் யாழ்ப்பாணத்தவரின் பாரம்பரிய உணவு வகைகளும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படத்தக்கவையே. கலாசாரப் பகிர்வு சுற்றுலாப் பயணிகளின் வருகை புதிய கலாசாரப் பகிர்வுகளுக்கும், பரஸ்பர மொழி அறிமுகத்துக்கும் வழியேற்படுத்தியுள்ளது. எமது சகோதர இனத்தவரான சிங்களவர்களுடனான ஊடாட்டம் இதில் முக்கியமானது. ஏ9 பாதை திறப்பும், அதிகரித்திருக்கும் வெளியார் வருகையும், பொருளாதார, கலாசார மற்றும் அறிவுசார் மேம்பாடுகளுக்கு வழிசமைத்துள்ளபோதும், இதனை எதிர்மறை நோக்கில் பார்க்கும் மனோபாவமும் இங்கே வளர்ந்துள்ளது. அர்த்தமற்ற சந்தேகங்களின் அடிப்படையில் இதனை ஒரு ஆக்கிரமிப்பாக நோக்குவது எமது பிரதேசத்தின் எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. “எங்களை வித்தியாசமா பார்க்காம உங்களைப்போல ஒருத்தரா நினைச்சுப் பழகலாம்தானே…” என்று தென்னிலங்கையிலிருந்து வந்த ஒருவர் தனக்குத் தெரிந்த தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து என்னிடம் சொன்னபோது, பெருமை மிக்க நமது வந்தாரை வரவேற்கும் கலாசாரமும், விருந்N;தாம்பல் பாரம்பரியமும் வெட்கி நிற்பதாகவே உணர்ந்தேன். இவ்வாறான எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, எமது உற்பத்திகளையும், கைத்தொழில் துறைகளையும், வர்த்தகத்தையும் சுற்றுலாத்துறை வருமானத்தை நோக்கிக் குவித்தால், குடாநாடும், முழு வடமாகாணமும் பொருளாதார எழுச்சி காண்பது உறுதி.

யசோநிதி

http://www.newjaffna.com/fullview.php?id=NzI3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.