Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல்களில் கனடாவை வந்தடைபவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்.

Featured Replies

கப்பல்களில் கனடாவை வந்தடையும் அகதிக் கோரிக்கையை முன்வைப்போரின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நடவடிக்கையாகப் புதிய சட்டமூலம் ஒன்றை கொன்சவேற்றிவ் (Conservertive) அரசு நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

புதிய சட்டங்களைக் கனேடிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதென நேற்று ஒட்டாவாவில் புதிய கனேடியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்தார்.

கனடாவில் குடியேறுவதற்கு ஏற்கனவே வரிசையில் காத்திருப்போரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வரிசையின் முன்பாகச் செல்வதற்கு ஏதுவாக, பெருமளவானோர், சட்டவிரோதமாகக் கனடாவுக்கு அனுப்பப்படுவது ஆழ்ந்த கரிசனை தருவதாக அவர் கூறினார்.

தனது அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், குடிவரவு தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை கணிசமாகக் குறையுமென ஹாப்பர் தெரிவித்தார். ஆனால், எத்தகைய சட்டம் அறிமுகப்படுத்தப்படுமென அவர் ஏதும் கூறவில்லை.

http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5198

==============================

தொடர்புபட்ட செய்தி

தமிழ் அகதிகள் கப்பல் கனடா வரும் செய்தித் தொகுப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74042

அகதிகளுடன் வரும் 2ஆவது படகின்மீது கனடா கண்காணிப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76569

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை தாய்லாந்து கைது செய்ததை வரவேற்றுப் பாராட்டுகின்றது கனடா!

புதன், 20 அக்டோபர் 2010 08:02 . .

சட்டவிரோதமான முறையில் தாய்லாந்தில் தங்கி இருந்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் 155 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டமையை கனேடிய அரசு வரவேற்று உள்ளது.

கனேடிய குடிவரவு அமைச்சர் Jason Kenney தாய்லாந்தின் கைது நடவடிக்கையைப் பெரிதும் பாராட்டி உள்ளார். இத்தமிழர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடாவுக்குப் புறப்பட்டு வர இருந்தனர் என்று கனடா நம்புகின்றது.

ஆரம்பத்தில் 155 பேர் கைது செய்யப்பட்டனராயினும் தாய்லாந்தில் சட்டரீதியான முறையில்தான் தங்கி இருக்கின்றனர் என்பதை ஆவணங்கள் மூலம் நிரூபித்த 27 பேர் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 128 பேரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்கள். இவர்களை தாய்லாந்து அரசு நாடு கடத்துகின்றமையையும் கனேடிய அமைச்சர் புகழ்ந்துள்ளார். ”கனடாவின் குடிவரவு கொள்கை மனிதாபிமானத்துடன் கூடியது. கனடா அரசியல் தஞ்சம் தேடி வருபவர்களுக்கு புகலிடம் கொடுக்கத் தயங்கவில்லை.

ஆனால் எமது காருண்யம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமையை அனுமதிக்கவே முடியாது.” இவ்வாறு அமைச்சர் மேலும் கூறி உள்ளார்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12507&Itemid=410

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதிலிகள் வருகையைத் தடுக்க இன்று புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது கனடா

கனடாவுக்கு அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருவதை தடுப்பதற்காக புதிய சட்டமூலத்தை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது.

கடந்த ஆகஸ்ட்டில் எம்.வி.சன்சீ கப்பலில் 492 தமிழர்கள் வருகை தந்ததையடுத்து புதிய சட்டமூலத்தை கொண்டு வருவது தொடர்பாக கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசு ஆராய்ந்தது.

ஒட்டாவாவில் பிரஜாவுரிமை தொடர்பான வைபவமொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் தனது அரசாங்கம் வலுவான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

ஆட்கடத்தல் மூலம் பெரும் எண்ணிக்கையானோர் கனடாவை வந்தடைவது மிகவும் குழப்பகரமான தன்மை என்றும் முறைமையை பாதிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

கனடாவில் வசிக்க விரும்புவோரை திரும்பிச் செல்வதற்கான வலுவான ஊக்குவிப்பை புதிய சட்டங்கள் வழங்கும் என்றும் நியாயபூர்வமான முறையில் பிரவேசிப்பதற்கான தன்மையை முன்னெடுக்கக் கூடியதாக அமையுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அரசு உரிய முறையில் செயற்படத் தவறினால் முறைமைகளில் கனடியர்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

அகதிகள் தொடர்பான ஐ.நா.சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ள கனடாவானது தனது நாட்டிற்குள் வந்து சேரும் சகல அகதிகளின் விண்ணப்பங்களையும் பரிசீலிப்பது அவசியமானதாகும் என்று ஏ.பி.சி.செய்திச் சேவை தெரிவித்தது.

http://meenakam.com/2010/10/21/%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html

  • தொடங்கியவர்

ஆட்கடத்தலுக்கு 10 வருட சிறை , அதிகப்படியான அபராதம் - கனடிய அரசின் புதிய சட்ட வரையறை

ஆட்கடத்தலை தடுத்து நிறுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என கனடிய அரசு கடந்த வாரம் அறிவித்தது முதற்கொண்டே சிலர் கனடிய அரசுக்கு ஆதரவாகவும் பலர் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும் வந்தனர்.

இதையடுத்து நேற்று அரசின் புதிய சட்டங்களின் படி ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு மிகவும் அதிக பட்ச அபராதமும் , 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்ற தகவலை மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

குடிவரவுத் துறை ஜசோன் கென்னியும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸும் இணைந்து வான்கோவேரில் இன்று இந்த சட்டத்தை அதிகார பூர்வமாக இன்று அறிவிப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அகதிகள் 492 பேரை ஏற்றிக் கொண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடைந்த சன் சீ கப்பல் சட்டபுறம்பாக ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்திய பின் கனடிய அரசு இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளதால் இது தமிழ் அகதிகளுக்கு எதிரான சட்டமாக கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12568:-10-&catid=44:2010-01-01-15-57-59&Itemid=680

http://www.theglobeandmail.com/news/politics/human-smuggling-bill-empowers-minister-to-target-irregular-groups-of-asylum-seekers/article1767173/?cmpid=rss1

http://www.thestar.com/news/canada/article/879003--tough-new-measures-target-smuggled-migrants?bn=1

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.