Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத்தமிழர்களும் ஒன்ராரியோ மாநகரசபைத் தேர்தலும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடியத்தமிழர்களும் ஒன்ராரியோ மாநகரசபைத் தேர்தலும்

ஒன்ராரியோ மாநகரத்தேர்தலில் தமிழர்கள் நான் முந்தி நீ முந்தி என்று தெர்தல் களத்தில் குதித்து போட்டி போடுகின்றார்கள். இவர்கள் மாநகரசபை அங்கத்தவர்களாக வந்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பது ஒரு புறம் இருக்க, ஏன் இவர்கள் தேர்தலில் அமோகமாக குதித்து இருக்கின்றார்கள் என்பதும் ஒரு கேள்வி. ஒரு தமிழர் போட்டியிடும் இடத்தில் இன்னோரு தமிழரும் போட்டியிடுகின்றார். இது இவர்களின் ஒற்றுமையின்மையைப் படம் பிடித்து காட்டுகின்றது. தமிழர்கள் மீண்டும் தமிழர்களால் ஓமாற்றப்படாது இருக்க தமிழர் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டுவது மட்டுமல்லாமல் செயல்படவும் வேண்டும் அப்போது தான் கனடாவில் தமிழ் சமூகம் தரமாக வாழமுடியும்.

இன்று இங்குள்ள தேர்தல் களத்தில் ஏன் தமிழர்கள் குதித்துள்ளார்கள்?

1.) தமிழர் சமூகம் சார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்

2.) புலிகள் சார்பல்லாத ஏதிர்பியக்கங்களின் பிரதிநிதிகள்

3,) இலங்கை அரசாங்கத்தால் நியமித்து பணம் வழங்கி களத்தில் இறக்கப்பட்ட தமிழர்கள்

என்று பல வகையான பிரிதிநிதிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள். இதில் யாருக்கு வாக்களிப்பது என்பது தமிழர்களின் பிரச்சனையாக இருந்தாலும், மிகவும் தெளிவாக ஆராய்ந்து வாக்களிப்பதும் தமிழர்களின் மிக முக்கயமான கடமை. பிழையான தமிழ்ப்பிரதிநிதிகளுக்கு வாக்களித்து கனடாவில் அசௌகரியத்தை சந்திக்கவேண்டாம்.

தமிழன் என்ற ரீதியில் யாருக்கும் வாக்களிக்கவேண்டாம். அவரது பின்னணிகளை வெகுவாக ஆராய்ந்து வாக்களியுங்கள் அல்லது தெளிவின்மை இருப்பின் தமிழர் அல்லாத பிரதிநிதிகளுக்கு வாக்களியுங்கள். குளிக்கப்போய் சேறுப+சும் வேலையைச் செய்யாதீர்கள். கோயில்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை வாரி இறைத்து பூசகர்களைப் பணக்காரர் ஆக்கிய தப்பைப்போல் இதிலும் தப்பைச் செய்யாதீர்கள். தமிழராகிய நாம் ஒவ்வொரும் விடும் தப்பும் பின்னர் ப+தாகராமான தமிழருக்கு எதிர் மறையான விளைவுகளைப் பின்னிற்கு கொண்டுவரும். அப்போது அது காலம் கடந்த ஞானம். இப்போதே எங்கள் வருங்கால சந்ததியினரின் இருப்பை வணமாக்க சிந்தித்துச் செயல்படுங்கள்.

ஒவ்வொரு தமிழனின் சிந்தைத் தெளிவு வருங்காலத்தமிழனின் ஆரோக்கிய வாழ்விற்கு இடமளிக்கும். கண்மூடித்தானமாகச் செயல்படாதீர்கள்.

உதாரணமாகக் கண்ணை மூடிக்கொண்டு இந்தியாவை நம்பிச் செயல்ப்ட்டதால்தான் இன்று ஈழத்தமிழினம் சிதைந்தது. மீண்டும் விழுந்து கிடக்கமால் நல்லதொரு அத்திவாரம் இடுவோம்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமே. இந்தத் தருணத்தில் சிறிலங்கா அரசால் இறக்கப்பட்டுள்ள தமிழர்கள் பற்றி அடையாளம் செய்வது நன்றே எனத் தோன்றுகின்றது.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல மக்கள் முதலாவது வாக்களிப்பதும் சரியான தகுதியனவர்களுக்கு வாக்களிப்பதும் முக்கியம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76157

நிச்சயமாக தமிழன் என்பதற்காக மட்டும் தமிழன் அல்லாதவர் வாக்களிக்க போவதில்லை தமிழருக்கு. அவரின் கடந்தகால செயல்பாடுகள் ( கனடாவில்) அவரின் கொள்கை வகுப்புகள் என்பன பார்க்கப்படும். பொதுவாக மாநகர சபை அரசியல், மாநில மற்றும் தேசிய அரசியல் போல கட்சி சார்ந்தவை அல்ல. இது அரசியல் வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாகவும் பார்க்கப்படுகின்றது.

இங்கு ஒன்ராறியோ மாநிலத்தில் போட்டியிடும் ஒருவர் தனது தேர்தல் செலவுகளுக்கு ஒரு தொகை பணத்தை சேர்க்கலாம். அதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது. உதரணத்துக்கு தொகுதி ஆலோசகராக போட்டியிடுபவர் 45000 டாலர்கள் வரை சேர்க்கலாம்.

இதற்கு பணம் கொடுப்பவர்களுக்கும் வரி விலக்கு உள்ளது. உதரணத்துக்கு 300 டாலர் கொடுக்கும் ஒருவர் 275டாலர்களை திருப்பி பெறலாம்.

ஒன்ராரோயோ மாநில வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிப்பது கடமை. எமது வருங்கால சந்ததியினருக்கு தேர்தலில் முக்கியத்தை நிச்சயமாக இள வயதில் இருந்தே சொல்லிகொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் முக்கியமான ஸ்ரீ லங்கா கைத்தடி நம்மு பொன்னம்பலத்தை தவிர்க்க வேண்டும்.

இவரது தந்தையார் முன்பு கம்யுனிச அமைச்சராக ஸ்ரீ லங்கா அரசில் இருந்தவர். இவரது காசு சுரட்டல்களால் பதவி இழந்து நாட்டை விட்டு குடும்பம் வெளியேறியது. இவரது குடும்பந்த்திற்கும் சந்திரிக்கா குடும்பத்திற்கும் நல்ல உறவு இருக்கிறது.

இந்த நம்மு பின் ஈ. பி. டி. பீ யின் கனடா கைத்தடியாக செயல்பட்டவர்.

இந்த நம்மு பொன்னம்பலம் தமிழருக்கு செய்த "சேவைகளில்" சில இங்கு:

- ஈ. பி. டி. பி சார்பாக போட்ட கூட்டத்தில் கேள்வி கேட்டவரை அடித்து துவைத்து ஜனநாயகத்தை நிலை நாட்டியவர்.

- இவரின் மேல் கனடா காவல்துறை வழக்கு போட்டது

- புலிகளை தடை பண்ண வைக்க தன்னை புலிகள் காசு கேட்டு வற்புறுத்துகிறார்கள் என்று புளுகியது.

- டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் நிழலில் தன படத்தை போட்டு தமிழர் எல்லோரும் பயத்தில் வாழ்வதாக புரளி கிளப்பியது.

- பின் தன அண்ணனிடம் பணம் கேட்கிறார்கள் என்று செய்தி கிழப்பிவிட்டு தமிழ் ஈழத்திற்கு எதிராக பரப்புரை செய்தது.

-யாழில் அப்பாவி மாணவர்களை கொலை செய்துவிட்டு காசை சுருட்டிக்கொண்டு ஓடிவந்த பேரவை டேவிட்சனின் கூட்டாளி

இப்போது இவர், மிகவும் அதிகமாக தமிழர் வாழும் பகுதியில் வாக்கு பிரிப்பு செய்து தமிழர்களை வீழ்த்த களத்தில் இறங்கியிருக்கிறார். இவர் பெரிய வேலை செய்யாவிட்டாலும் எங்கேயோ இருந்து பணம் பொழிகிறது.

தமிழர் இவரை தவிர்ப்பது கனடாவிற்கு செய்யும் பாக்கியமாக இருக்கும்!

நீதன் சானின் வெற்றி ரொறொன்ரோவின் மாநகரசபைக்குள் முதல் தமிழர் என்று ஆகவேண்டும். இதற்கு இந்த வட்டாரத்துக்குள் வாழும் எல்லா தமிழர்களும் வாக்களிக்க வேண்டும்.

ரொறொண்டோவின் முன்னணி பத்திரிகையான டொராண்ரோ ஸ்டாரும் கனடாவின் தேசிய பத்திரிகையான க்ளோப் அண்ட் மெயிலும் இவரின் தகுதியையும் ஒரு இளமையானவர் தேவை ( இவரின் முக்கிய போட்டியாளர் தற்போதைய ஆலோசகருக்கு இன்றைய கால பிரச்சனைகளை யதார்த்தமாக புரியும் காலம் கடந்துவிட்டதாக இவை தெரிவித்தன) என சொல்லி இவரை தெரிவு செய்யும்படி கூறியுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.