Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நாடாளுமன்றம் சமல் இராஜபக்‌ஷவிற்கு அழைப்பு

Featured Replies

இந்தியப் பாராளுமன்றம், மக்கள் அவையிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவிற்கு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதற்கான அழைப்பிதழ் நேற்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவால் சமல் ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அழைப்பிதழானது சட்ட சபைத் தலைவர் மொஹமட் ஹமீட் அன்சாரி மற்றும் சபாநாயகர் மீரா குமாரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ அழைப்பிதழை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் விரைவில் அவரது விஜயத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் தெரிவிக்கின்றது.

இந்தியா இவ்வாறு உருகி உருகி காதலாகி கசிந்து இனப்படுகொலை அதிகாரிகளை வரவளைப்பதற்கு என்ன காரணம்?

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனப்படுகொலை ஆட்சியாளர்களை இந்தியா காதலாகிக்கசிந்து கொள்ளவில்லை. இந்தியர்கள் நடிப்பில் சிறந்தவர்கள் தானே. அவர்கள் தமிழ் மக்களில் காதல் கொண்டது போல் நடித்துத்தான் தமிழ் மக்களைச் சிதைத்தார்கள் இன்று சிங்களவன் மேல் காதல் அல்ல. நேரு எழுதி வைத்த வெளிநாட்டுக் கொள்கை(ள)யில் இலங்கைளை இந்தியாவின் மாநிலமாக்கினால் தான் தெற்கில் இந்தியாவின் பதுகாப்பு நிரந்தரம் என்ற கொள்கை கொண்டு இன்றும் செயற்படும் இந்திய அரசு தமிழ மக்கள் மூலம் நிறைவேற்றப்பார்த்தது. அது பிரபாகரனுடன் முடியாது போயிற்று என்பதால் புலிகளை அழித்து இன்று சிங்களவனுடள் கைகோர்த்தது போல் நடித்து ஒட்டுமொத்த ஸ்ரீலங்காவையும் இந்தியமாநிலமாக்கும் முனைப்பில் செயல்படுகின்றது. சீனா அங்கு காலூன்றிதால் அது இந்தியாவிற்குப் புதிய பிரச்சனையாகிவிட்டது. இருந்தும் இதற்கு அமெரிக்காவும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழ்மக்களின் பிரச்சனைக்குத்தீர்வு என்பது பற்றி போர் முடிந்து இதுவரை யாரும் இக்கறை கொள்ளவில்லை. சீனாவின் காலூன்றல் அமெரிக்காவிற்கும் விருப்பம் இல்லை.

nhத்தத்தில் இந்தியா இலங்கையைத்தனது மாநிலமாக்கும் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. இலங்கையில் சிங்கவரோ, தமிழரோ இறந்தாலும் இந்தியா கவலை கொள்ளப்போவதில்லை. மொத்தத்தில் சிங்களவன் ஒரு முட்டாள் என்பது வருங்காலம் உணர்த்தும். தமிழர்கள் இந்தியாவுடன் இளைய விரும்பமாட்டார்கள் என்பது இந்தியா நன்யாகப்புரிந்து கொண்டுதான் தமிழர்களின் ப+ர்விக இடங்களில் சிங்களக்குடியேற்றம் என்ற சிஙகளவனின் பசப்புக்கு இந்தியா சைகை காட்டியுள்ளது. இந்திய நரியின் குள்ளச் செயற்பாட்டில் இன்று மொத்த இலங்கையும் வீழ்ந்துள்ளது என்பது தான் யதார்த்தம். வருங்காலம் 5-7 வருடங்களில் இதன் பலாபலன் தெரியவரும். சீனாவின் காலூன்றல் பதியபிரச்சனையாகி இந்தியாவின் குறிக்கோளுக்கு முடடுக்கட்டையாகிவிட்டது. இது ஒரு புலிகளைவிட பாரிய பிரச்சனை ஆகியது இந்தியாவிற்கு. இலங்கையில் இந்தியாவின் இரகசியப்பிரிவால் அரசியலாளர்கள் படுகொலை இனிவரும் காலத்தில் நிகழலாம். இதனால் சிங்களவரிடையே பிரச்சனையைக்கிழப்பி அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்பலாம்.

இலங்கை என்பது முதலைவாயில் (இந்தியா) அகப்பட்ட ஒரு நாடாக இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.