Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்ப்பு தள்ளிவைப்பு - தடை நீட்டிப்பு விவகாரம்:

Featured Replies

விடுதலைப் புலிகள் தடை நீட்டிப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டிப்பது தொடர்பான தீர்ப்பாயத்தின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் நேரில் ஆஜராகி வைகோ முன் வைத்த வாதம்:

தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடுவது தமிழ்நாட்டையும் அதில் சேர்த்துகொள்வதற்காகவே என்றும், இவர்களது போராட்டத்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், புலிகளின் தமிழ் ஈழ வரைபடத்தில் தமிழ்நாடும் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. இதற்கான ஆதாரங்களை அவர் காட்ட முடியாது.

தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகள்தான் என்பதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நார்வே அரசு இலங்கையில் அமைதியை ஏற்படுத்த பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தமிழ் ஈழத்தில் இந்தியப் பகுதியையும் சேர்க்கும் திட்டம் புலிகளுக்கு இருந்திருக்குமானால், அது நார்வே அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் நார்வே இந்தப் பிரச்னையில் தலையிட்டிருக்காது.

தமிழ் ஈழத்தை காரணம் காட்டியே விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்று மொத்த வழக்கையும் அரசு எழுப்பியுள்ளது. அதில் உண்மையில்லை என்பதால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க எந்த நியாயமும் இல்லை.

விடுதலைப் புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி ஒருவர் மீது கூட தமிழ்நாட்டில் வழக்கு எதுவும் போடப்படவில்லை என்று காவல்துறை அதிகாரியே தீர்ப்பாய குறுக்கு விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகளால் இந்தியத் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் ஒரு வாதத்தை அரசு முன்வைக்கிறது. இதை சட்ட விரோதச் செயல் என்ற விளக்கத்துக்குள் கொண்டு வர முடியாது.

புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதன் மூலம் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு வந்தால், அவர்களை புலிகள் என்று கூறி அரசு சிறையில் அடைக்கிறது. ஈழத் தமிழர்கள் சர்வதேச அகதிகளாகிவிட்டனர்.

இந்திய அரசு புலிகள் இயக்கத்தை தடை செய்ததால்தான், பல நாடுகளும் அந்த இயக்கத்தை தடை செய்துவிட்டன. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வாதாடினார் வைகோ.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்செயன், "விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் இன்னமும் செயல்படுகின்றனர். அவர்கள் மீதான தடையை நீக்கினால் அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும். எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டிக்க வேண்டும்' என்றும் வாதிட்டார்.

தீர்ப்பாயத்தில் இரு தரப்பு வாதங்களும் முடிவுற்றன. தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மதிமுக சட்டத் துறைச் செயலாளர் ஜி. தேவதாஸ், பழ. நெடுமாறன் தரப்பில் வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராயினர்.

http://www.dinamani.com/edition/

=================================

தொடர்பு பட்ட செய்தி

விடுதலைப்புலி போட்ட அதிரடி மனு!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77092

  • தொடங்கியவர்

ராஜபட்ச பாதையில் இந்திய அரச நீதி

  • 1992-ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது.
  • கடந்த 18 ஆண்டுகளாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தடைக்கு கீழ்க்கண்ட முக்கியமான காரணங்களை இந்திய அரசு கூறிவருகிறது.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக ஒரு தாயகத்தை அமைக்க வேண்டுமென்பதே விடுதலைப் புலிகளின் குறிக்கோள் ஆகும். அதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் ஒருங்குகூடி தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் புகுந்துள்ள விடுதலைப் புலிகள் துரோகிகளைப் (இந்திய அரசு) பழிவாங்கவும் எதிரிகளை (இலங்கை அரசு) ஒழிக்கவும் முயற்சி செய்வார்கள் என நம்பப்படுகிறது.

மேற்கண்ட காரணங்களுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட விரோதமான அமைப்பு எனத் தடை விதிக்கப்படுகிறது.

மேற்கண்ட காரணங்கள் தவிர, ஒவ்வொரு முறையும் தடை நீட்டிக்கப்படும்போது, புதிய காரணங்களை இந்திய, தமிழக அரசுகள் முன்வைக்கின்றன.

1. 1992-ம் ஆண்டில் முதல்முறை தடைவிதிக்கப்பட்டபோது, அதை நீக்க வேண்டும் என நான் விண்ணப்பித்தேன். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் யாராவது மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறி என்னுடைய மனுவைத் தள்ளுபடி செய்தார்கள்.

2. அதற்குப்பின் 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலைப்புலிகளின் சார்பில் அதனுடைய சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த மனோகரன் வேலும் மயிலும் என்பவர் தடையை எதிர்த்துச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தடைத் தீர்ப்பாயத்துக்கு முன் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது தேசிய விடுதலை இயக்கமாகும். இலங்கையில் இனப்படுகொலைக்கும் ஒடுக்குமுறைகளுக்கும், மனித உரிமைகள் பறிப்புக்கும் ஆளாகி வதைக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் ஓர் இயக்கமாகும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதைத் தனது கொள்கையாக விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டுள்ளது.

இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு முன் எங்களிடம் அதற்கான விளக்கம் எதையும் கேட்கவில்லை. சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படுவதற்குரிய குற்றச்சாட்டுகள் குறித்தும் எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கேட்டு நாங்கள் எங்களுடைய பதிலைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஒருதலைப்பட்சமாக எங்கள் இயக்கத்தைத் தடை செய்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும்.

தமிழ்நாட்டில் செயல்பட்டதாகக் கூறப்படும் தமிழ்த் தேசிய மீட்புப் படை, தமிழர் பாசறை ஆகிய அமைப்புகளை உருவாக்கி ஆயுதப் பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி, தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிப்பதற்கு ஏவிவிட்டோம் என்ற குற்றச்சாட்டு என்பது முற்றிலும் பொய்யானது. ஏனெனில், தமிழ்நாட்டில் மேற்கண்ட இரண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிப்பது இந்திய அரசின் உள்நோக்கத்தையே எடுத்துக்காட்டுகிறது.

1998-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஈழத் தமிழர் பலர் மீது 18 வழக்குகள் தமிழக அரசால் தொடுக்கப்பட்டன. ஆனால் 17 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஒரு வழக்கு இன்னமும் நடந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் விடுதலையான வழக்குகள் என்ற உண்மையை இந்தத் தீர்ப்பாயத்தின் முன்னால் மறைத்து புலிகள் மீது தடைவிதிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞர் வாதாடுவது நேர்மையற்றதாகும்.

சர்வதேசக் கடலில் சென்றுகொண்டிருந்த தளபதி கிட்டு வந்த எம்.வி. யகதா கப்பல் வழக்கிலும், டோங்கனோவா கப்பல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாக இந்தத் தீர்ப்பாயத்துக்கு முன்னால் வைக்கிறேன்.

புலிகளின் சார்பில் பல உண்மைகளும், அசைக்க முடியாத ஆதாரங்களும் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்கப்பட்டபோதிலும், எதையும் கருத்தில் கொள்ளாது புலிகளின் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்குத் தீர்ப்பாயம் நீடித்தது.

பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது தமிழீழம் அமைப்பதை லட்சியமாகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசினார். அவர்களுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த சிறப்புத் தூதராக ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார்.

பிரதமர் இந்திராவின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் மற்ற போராளி இயக்கங்களுக்கும் இந்திய ராணுவ முகாம்களில் ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமிழக மண்ணில் பயிற்சி பெற்று இலங்கைக்கு திரும்பிச் சென்று தங்களது போராட்டங்களைத் தொடர்ந்தார்கள்.

தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது மக்களிடம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து 4 கோடி ரூபாய்களை புலிகளுக்கு அளித்தார். மேலும், வெளியே தெரியாமல் தனது சொந்தப் பணத்திலிருந்து பலகோடி ரூபாய்களை வாரி வழங்கினார்.

தமிழக மண்ணில் புலிகளின் ராணுவப் பயிற்சி முகாம்கள் இயங்கியபோதும், பிரபாகரன் உள்பட புலித் தலைவர்கள் இங்கு தங்கியிருந்தபோதும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஒருபோதும் கெடவில்லை. இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எத்தகைய அபாயமும் நேரிட்டுவிடவில்லை.

1985-ம் ஆண்டில் திம்புவில் இந்திய அரசின் முன்முயற்சியிலும் மத்தியஸ்தத்திலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது விடுதலைப்புலிகளும் மற்றுமுள்ள போராளி அமைப்புகளும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒருங்கிணைந்து கீழ்க்கண்டவற்றைத் தங்களது அதிகாரப்பூர்வமான நோக்கமாக அறிவித்தன.

  • இலங்கையில் உள்ள தமிழர்களைத் தனித்துவம் வாய்ந்த தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.
  • இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாநிலங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
  • மலையகத் தமிழர்கள் உள்பட இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையும் மற்ற அடிப்படை உரிமைகளும் உண்டு என்பது ஏற்கப்பட வேண்டும்.

மேலே கண்ட நோக்கங்களில் எதன் மூலமாவது இந்தியாவில் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? அப்படியிருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய அரசு நடத்திய இந்த மாநாட்டுக்கு அழைத்தது ஏன்?

பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது, பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போதும் பின்னர் தில்லிக்கு பிரபாகரனை இந்திய அரசின் விமானத்தில் வரவழைத்துப் பேசியபோதும் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகவோ அல்லது இந்தியாவைத் துண்டாடுகிற இயக்கமாகவோ மத்திய அரசுக்குத் தெரியவில்லை.

ஆனால், விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையில் உறுதியாக நின்றார்கள். இந்திய அரசின் நிர்பந்தத்துக்குப் பணிந்து அதைக் கைவிட மறுத்தார்கள் என்பதாலும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு எதிராகச் செயல்படாமல் நடந்துகொள்ள சிங்கள அரசைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, அவர்களை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டது. அப்போதுகூட இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் புலிகளால் அபாயம் என்று சொல்லி ராணுவ நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை.

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் புலிகள் தமிழீழம் அமைக்கப் போராடுகிறார்கள் என அரசு குற்றம்சாட்டியுள்ளது. புலிகள் வெளியிட்டுள்ள தமிழீழ வரைபடத்தில் இலங்கையில் உள்ள வடக்கு-கிழக்கு மாநிலங்கள் மட்டுமே குறிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியபோது, அரசுத்தரப்பில் சரியான பதில் அளிக்க முடியவில்லை.

பயங்கரவாதச் செயல்களைச் செய்த அல்லது அதைத் தூண்டிவிட்ட அல்லது வேறு வகையில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்புதான் பயங்கரவாத அமைப்பாகச் சட்டப்படி கருதப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் எதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபடவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த மிகமுக்கியமான தீர்ப்பு என்னவென்று சொன்னால் இந்தக் கொலைச் செயல் பயங்கரவாதம் அல்ல; இது சாதாரண குற்றவியல் சட்டத்தின்கீழ் வரவேண்டிய கொலையே. பயங்கரவாதத் தடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் கொலை வழக்கைத் தொடுத்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 19 பேரை விடுதலை செய்தது.

விடுதலைப் புலிகளின் இயக்கத்துக்குத் தடைவிதித்ததன் மூலம் அதற்கு ஆதரவாகவும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் பேசிய என் மீதும் வைகோ உள்ளிட்ட பலர் மீதும் 2002-ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்கள் 18 மாதங்களுக்கு மேல் சிறையில் வாடினார்கள். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டத்தின் கீழ் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இவர்கள் அனைவருக்கும் பிணை விடுதலை வழங்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகே நாங்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். பொடா மறு ஆய்வுக்குழு விசாரணை நடத்திய பிறகு இறுதியாக எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குக்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, எங்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பலவேறு மாநாடுகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவானவை என்றுகூறி அவற்றுக்குத் தமிழக அரசு பலமுறை தடைவிதித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமைக்கு இந்தத் தடை எதிரானது எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

புலிகள் மீதான தடை நீடிப்பதன் விளைவாகவே மேலே கண்ட இடர்ப்பாடுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தத் தடை தொடர்ந்து நீடிக்கப்படுவதால் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்தத் தடையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சியினரை புலி ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டி வழக்குகளைத் தொடுக்கிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள்.

இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் ஈழத் தமிழர்களையும் இந்தத் தடைச் சட்டம் பெருமளவு பாதித்துள்ளது. இலங்கைப் போரில் கண், கை, கால், போன்ற உறுப்புகளையெல்லாம் இழந்து, மருத்துவம் பார்ப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த பலர் இந்தச் சட்டத்தின் கீழ் புலிகள் எனக் குற்றம்சாட்டப்பட்டு, சிறைக்கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சித்திரவதை முகாம்கள் இவர்களுக்காகத் தனியாக அமைக்கப்பட்டன. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையும் இல்லாமல் இருட்டறைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் விடிவு எப்போது?

இலங்கையில் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தபிறகும் இந்தியாவில் இயங்காத இயக்கம் மீது தடை இன்னமும் நீடிப்பதன் மர்மம் என்ன? புலிப்பூச்சாண்டியைக் காட்டித் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்கும் நோக்கமல்லாமல் இதற்கு வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.

http://www.dinamani.com/edition/Story.aspx?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.