Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுக்கப்படும் நீதி........

Featured Replies

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 17 பிக்கு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டமைக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த 29 பேர் கைதுசெய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக உபவேந்தரின் சதிமுயற்சியினாலேயே 17 பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு முயற்சித்ததாகவும் ஆனால், அவர் அங்கு இல்லாததால் உயர் கல்வி அமைச்சின் செயலாளரை இன்று தாம் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமென நாம் நினைக்கின்றோம்.; இவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்போம் என அவர் கூறினார்.

அத்துடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன உட்பட பல்கலைக்கழக மாணவர்களையும் விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி வோர்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவைச் சென்றடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிக்கு மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாகச் சென்று தங்களது பிரச்சினைகள் தொடர்பில் உயர்க்கல்வி அமைச்சருடன் கலந்துரையாட முயற்சிப்பதை படங்களில் காணலாம்.

http://www.tamil.dailymirror.lk/index.php/component/content/article/87---main/10390-2010-11-02-11-29-20.html

ஜனாதிபதியைத் தலையிடக் கோருகிறது பல்கலை மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம்

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு உதவ வேண்டுமென பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியதை தாம் எதிர்ப்பதாகவும் மேற்படி சங்கம் கூறியுள்ளது.

பெற்றோர்கள் எனக் கூறிக்கொண்ட மேற்படி நபர்களால் பல்லைக்கழத்தில் ஏற்படுத்தப்பட்ட இடையூறு தொடர்பாக எவருடனும் பகிரங்க விவாதத்திற்குத் தயார் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/10398-2010-11-02-12-33-29.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.