Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவும் ஓர் அரசியல் விசித்திரம்!

Featured Replies

அரச நிர்வாக சேவைக்கான எழுத்துப் பரீட்சை யில் தமிழ்மொழிமூலம் தோற்றியோரில் ஒருவரேனும் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்படவில்லை. நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவான மொத்தம் 257 பேரும் சிங்கள மொழி மூலம் தோற்றியவர்களே.

2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட் சையின் எழுத்துப் பரீட்சையில் பெறப்பட்ட புள்ளி களின் அடிப்படையிலேயே இந்த 257 பேர்களின் விவரமும் அறிவிக்கப்பட்டிருக் கிறது. பரீட்சைத் திணைக்களமே இந்த எழுத்துப் பரீட்சையை நடத் தியது.

பரீட்சை முடிவுப்படி, சிங்கள மொழி மூலம் தோற் றிய 257 பேர் மட்டுமே இலங்கை நிர்வாக சேவைக் கான நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டி ருப்பது தமிழ்மொழி மூலம் தோற்றிய தமிழ், முஸ்லிம் பரீட்சார்த்திகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் விசனத்தை யும் உண்டாக்கியுள்ளன.

இந்த வருடத்தில் மட்டும் இந்தப் பாரபட்சமான பரீட்சை முடிவும், நியமனம் பெறுவதற்கான தகு தியும் தமிழ் முஸ்லிம் பரீட்சார்த்திகளிடமிருந்து தட்டிப் பறிக்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டுக் குரிய பரீட்சையிலும் இதே பல்லவிதான் பாடப்பட் டிருக்கிறது.

அடுத்தடுத்த வருடங்களில் அரச நிர்வாக சேவை யில் தமிழ்மொழி மூலம் பணியாற்று வதற்கு எவரும் சேர்க்கப்படவில்லை என்பதை இது உள்வீட்டுச் சமா சாரம், திட்டமிட்ட வஞ்சகத்தனம் அல்லது சூழ்ச்சி என்று வரைவிலக் கணம் வகுப்பதில் தவறு எதுவும் இல்லை.

இதன் விளைவு, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அரச அதிகார அலுவல்களை மேற்கொள்ள சிங்களம் தெரிந்தவர்கள் என்ற பெயரில் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பெயரில் அதிக சிங்கள அதிகாரி களை நிர்வாகத்தில் இருத்துவதற்கான சதி என்றும் கொள்ளலாம்.

எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய சகல தமிழ், முஸ்லிம் பரீட்சார்த்திகளும் சிங்கள மொழியில் தேர்ச்சி குன்றியவர்கள் என்று மதிப்பீடு செய்யவும், அந்த மதிப்பீடு சரியானதே என்றும் நிலைநாட்டவும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் முயல்வர் என் பதில் சந்தே கம் இல்லை.

இதனை உன்னிப்பாக, உள்ளார்ந்த ரீதியாக நோக் குமிடத்து தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழர் களோ, முஸ்லிம்களோ நிர்வாக அதிகாரிகளாகக் கடமை புரிவதை இயன்ற மட்டும் குறைத்துக் கொள் வதற்கான திட்டமே இது என்பதனை எவரும் இலகு வில் உணர்ந்துகொள்ளலாம்.

இது, 1956 ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப் பட்ட தனிச்சிங்களச் சட்டத்தையே ஞாபகப்படுத் துகின்றது. மீண்டும் அந்தச் சகாப்தத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு மறைமுக ஏற்பாடு, முயற்சி என்பதில் வாதப் பிரதிவாதங்களுக்கு இடமிருக்க முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி யில் அரச நிர்வாக அலுவல்கள் நடை பெறும் என்ற அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடு களை வேறு வடிவத்தில் சிதைக்கும் முயற்சி இது.

13 ஆவது திருத்தத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த காணி மற்றும் பொது நிர்வாக அதிகாரங்கள் சென்ற மாதம் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புக்கான 18 ஆவது திருத் தத்தின் மூலம் பிடுங்கி எறியப்பட்டு விட்டன. அதே திசை சென்று உள்ளூராட்சிச் சபைகள் திருத் தச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழ், முஸ்லிம் மக் களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கத் திட்டமிடப் பட்டிருக்கிறது. குறிப்பிட்ட திருத்தச் சட்ட மூலம் மிகக் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

வடக்கு, கிழக்கில் அரச நிர்வாகப் பதவிகளில், தமிழர்கள், முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைத்து சிங்கள அதிகாரிகளை மேலதிகமாகக் குவிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியே, முன்னோ டியான சூழ்ச்சியே அரசாங்க நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகளின் விசித்திரம்.

இதுகுறித்து பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றுக்கு அரசு ஏற்பாடு செய்யுமா? அவ்வாறு நடத்தப்படாலும் கூட, அது உதைபந்தாட்டப் போடடியில் தம்பக்கம் தாமே "கோல்' அடிப்பதாகவே முடியும்.

Courtesy: உதயன்

தொடர்புபட்ட செய்தி

நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை: சிங்களமொழி மூலம் 257 பேர் தெரிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77107

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.