Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 15, நவம்பர் 2010 (8:58 IST)

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 250 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று கரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது 5 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 25 பேர் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை விரட்டினர். இதை பார்த்ததும் மீனவர்கள் படகை வேகமாக ஓட்டிக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் 240 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு பாதுகாப்பாக திரும்பி வந்து விட்டனர்.

கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த அங்கப்பன், சுந்தரமூர்த்தி, சம்பந்தமூர்த்தி, சக்திவேல், விஜயன், இளையராஜா, கந்தன், இளங்கோவன் உள்ளிட்ட 10 மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் அதில் இருந்த 50 மீனவர்களை தாக்கினர். மீனவர்களின் விசைப்படகுகளை உடைத்ததுடன் அதில் இருந்த வலைகளை அறுத்து எறிந்தனர்.

பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களை கடலுக்குள் வீசி எறிந்தனர். மீன்களை பறிகொடுத்து விட்டு கரைக்கு திரும்பிய 50 மீனவர்களும் இது பற்றி மற்ற மீனவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் இது பற்றி கோட்டைப்பட்டினம் போலீசிலும், ஜெகதாப் பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணனிடமும் புகார் செய்தனர்.

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் விஜயராஜா என்ற மீனவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

nakkheran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.