Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் தமிழன் - மாவீரர் நிகழ்வுக்கு கனடா தமிழ் மாணவர் அமைப்புக்கள் அழைப்பு

Featured Replies

நோர்த்யோக், , கனடா, தமிழ் மாணவர் சமூகம் நடாத்தும் "மாவீரர் எழுச்சி நாள் 2010 "

காலம் : ஞாயிறு மாலை, கார்த்திகை 21.

நேரம் : 18:00

இடம் : விமிக்கா பான்கேர் மண்டபம்

1959 Finch Av West, Downsview, Toronto.

( Jane and Finch )

http://www.tamilthai.com/wp-content/uploads/2010/11/149522_10150319089190392_829950391_15815848_1433792_n.jpg

கனடா நோர்த்யோர்க் பாடசாலை தமிழ் மாணவர்கள் நடாத்திய மாவீரர் நாள் நிகழ்வு

நோர்த்யோர்க் தமிழ் இளையோர் நடாத்திய மாவீரர் தின நிகழ்வு 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜேன் மற்றும் பிஞ்சு சந்திப்பில் உள்ள விமிக்கா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாவீரர் கல்லறைக்கு மலர் வைத்து மற்றும் மெழுகுதிரி ஏற்றி அங்குவந்த மக்கள் அஞ்சலி செய்தனர். அதன்பின்னர் நோர்த்யோர்க் வாழ் இளையோர்கள் பங்குகொண்ட எழுச்சி நடனங்கள் பேச்சுக்கள் கவிதைகள் பாடல்கள் போன்றவை இடம்பெற்றன. குறிப்பாக அங்கு பேசிய இளையோர்களின் பேச்சின் கருப்பொருள் இனி புலம்பெயர்வாழ் தமிழ் இளைஞர்களின் கையிலேயே அடுத்தகட்ட தமிழீழப்போர் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதாக இருந்தது.

இந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க அம்சமாக அதிகமான இளைஞர்களின் பங்களிப்பு அமைந்திருந்தது. தலைவரின் சிந்தனைகளை நினைவில் நிறுத்தி மாவீரர் தியாகங்களை நெஞ்சில் இருத்தி ஒற்றுமையாக ஓரணியில் தமிழீழ விடுதலைப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.

அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் நடனங்கள், பேச்சுக்கள், மற்றும் நாடகங்கள் போன்றவை இடம்பெற்றன. குறிப்பாக “எழுவோம்” என்னும் நாடகம் ஈழத்தமிழினம் அழிவுகளில் இருந்து மீண்டு ஒற்றுமையுடன் எழவேண்டும் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டிருந்த்து.

இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களின் உணர்வுகள் அவர்கள் தாயகவிடுதலையில் கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றி நின்றன. இறுதியில் மாவீர்ர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராவோம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

http://www.eelampress.com/2010/11/6919/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.