Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்தில் உள்ள விதவைகளுக்கு எவ்வாறு உதவலாம்?

Featured Replies

இன்று தாயகத்தில் எவ்வளவு விதவைப்பெண்கள் உள்ளார்கள்?

இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு?

இதை ஆராய்ந்தால், யதார்த்த ரீதியாக கருத்துறவாடினால் பயனாக இருக்கும்.

எனது தகவல் படி எண்பதினாயிரம் ஆண்கள் / பெண்கள் விதவைகள் உள்ளார்கள். இது ஒரு சமுதாய, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனை.

இதை இலகுவில் தீர்க்க முடியாது. ஒரு பரந்த திட்டமும் திறந்த சமூக நல நோக்கும் தேவை.

1. பிள்ளைகள் உள்ள பல விதவைகள், அவர்களுக்காகவே வாழ எண்ணுகிறார்கள். அவர்களின் வாழ்வு ஊடாக வாழ விரும்புகின்ர்ரர்கள். அதை எவ்வாறு வளம்படுத்த நாம் உதவலாம்?

2. பிள்ளைகள் இல்லாத விதவைகளுக்கு எவ்வாறு மறுவாழ்வுக்கு உதவலாம்?

3. பொருளாதார ரீதியாக எவ்வாறு இவர்கள் வாழ்வை வளப்படுத்தலாம் ?

4. வெளிநாட்டில் உள்ளவர்கள் "மறுவாழ்வு" என்ற பெயரில் அவர்களை "ஏமாற்றுவதை" எப்படி தடுக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்க எழுதினா.. இங்க உள்ளவை தங்கட சுய மூடநம்பிக்கைகளின் படி தான் அவர்கள் எல்லாம் வாழ வேண்டும் என்று கட்டளை இட்டாலும் இடுவார்கள்.

இந்தப் பிரச்சனையை நாடு கடந்த அரசு... மற்றும் சர்வதேச மகளிர் அமைப்புக்களின்.. தொண்டு அமைப்புக்களின் உதவியோடு சட்ட வரைபுகளுக்கும்.. தனிமனித உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் மதிப்பளித்து அணுகுவதுதான் சிறப்பானதும் நீடித்ததுமான தீர்வுகளை வழங்க உதவும். :lol:

  • தொடங்கியவர்

முதல் மூன்று கேள்விகளுக்கும் என்னிடம் தெளிவான பதில் இல்லை.

ஆனால் கேள்வி இலக்கம் 4 க்கு கீழ்வரும் பதில்களை முன்வழிகின்றேன் :

4. வெளிநாட்டில் உள்ளவர்கள் "மறுவாழ்வு" என்ற பெயரில் அவர்களை "ஏமாற்றுவதை" எப்படி தடுக்கலாம்?

4.1. வெளிநாட்டில் இருந்து மனம் முடிக்க வரும் ஒவ்வொருவரும் தான் பிரம்மச்சாரி என்ற சட்ட உறுதிப்பத்திரம் கொண்டுவர வேண்டும்.

4.2. தனக்கு எந்த பாலியல் ரீதியான சுகயீனமும் கிடையாது என்ற வைத்தியர் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

4.3. சீதனம் கேட்க கூடாது.

  • தொடங்கியவர்

-- There are no official estimates but it is thought at least 100,000 war widows are in the war-ravaged north and the east.

-- We can’t do everything at once, first we need to educate these people to encourage them face new challenges - Vidyani Hettigoda

-- Ms Hettigoda stressed that the war affected women including widows do not need money but guidance and assistance to rebuild their lives is the need of the moment.

http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/11/101114_widows_training.shtml

  • தொடங்கியவர்

எனது பயணம் நெடுகிலும் நான் மிக அதிகமாகப் பார்த்தது விதவைகளை. நான் பார்த்தவரையில் போரில் கணவரை இழந்த பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு வயது 20-களில்தான் இருக்கும். அதற்குள் மூன்று, நான்கு பிள்ளைகளையும் பெற்றிருந்தார்கள். 'சிலர் மறுமணம்பற்றி இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெரிய சவால். குறிப்பாக, காணாமல் போனவர்களின் மனைவிகள் என்ன செய்வார்கள்?' என்று கேட்டார் பாதிக்கப்பட்டவர் களுக்கான அமைப்பு ஒன்றில் பணிபுரியும் நந்தினி.

மன்னார் மாவட்டம் சகுந்தலாவுக்கு 20 வயது தான். 14 வயதில் திருமணம். இப்போது மூன்று வயதில் மகன். கணவர் காணாமல்போய் ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. 'என்ன செய்வது என்றே புரியவில்லை' என்று கவலைப்படுகிறார். ஏதாவது அமைப்பு வந்து, ஏதாவது தொழில் கற்றுக்கொடுத்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும், தனது மகனை வளர்த்துவிடலாம் என்கிற நம்பிக்கை அவரிடம் சிறு கீற்றாக இருக்கிறது. 'அவர் இருந்தவரை நான் வேலை செய்வதை விரும்ப மாட்டார். ஆனா, இப்போ வேறு வழி இல்லை. அவர் வருவாருங்கிற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சிட்டே இருக்கு' - பட்டெனத் தெறிக்கிறது ஒரு துளிக் கண்ணீர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சரோஜா சிவச்சந்திரன் சொன்ன விஷயம் முக்கியமானது. 'சிங்கிள் வுமன் என்றால் உங்களுக்கு வேற அர்த்தம். எங்களுக்கு வேற அர்த்தம். போரில் எல்லாச் சொந்தங்களையும் இழந்து சிங்கிள் வுமனா இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கே இருக்காங்க' என்றார். கிழக்கில் மட்டும் கிட்டத்தட்ட 40,000 விதவைகள் இருப்பதாக கடைசிப் போருக்கு முன்பு எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வடக்கில் 29,000 விதவைகள் இருக்கலாம் என்று சொல்கிறார் சரோஜா. "1983-க்குப் பிறகு நாடு தழுவிய மக்கள் கணக்கெடுப்பு 2011-ல் நடக்கவிருக்கிறது. அப்போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவரலாம்" என்கிறார்.

பல்லாயிரக்கணக்கான விதவைகளுக்கு எதாவது தொழில் கற்றுத்தர இந்தியாவில் அமைப்புகள் எதுவும் இருக்குமா என்று அடைக்கலநாதனும் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

http://www.penniyam.com/2010/07/blog-post_05.html

  • தொடங்கியவர்

யாருக்கு விதவை ?

விதவை!

பெண்ணுக்கு சூட்டிய

பெயர் இது.

மாலை சூடிய

மணமகன் இறந்தால்

பெண் விதவை !

சீர்திருத்தம் பேசும்

வாதிகளே சொலுங்கள்

என் கேள்விக்கு ?

மறுமணம் வந்தது

சீர்திருத்தம் பேசியதில்.

திரும்பவும் கணவன்

இறந்தால் ,நான் யாருக்கு

விதவை இப்போது!

மாற்றம் என்பது

வாழ்கையில் இல்லை.

வார்த்தைகளில்.

thanks : eegarai.net

  • தொடங்கியவர்

மேலைத்தேய நாடுகளில் பல விடயங்களை தனிப்பட்ட ஒருவர் அதை எப்படி செய்வது இல்லை திருத்துவது என படித்து தானே செய்யும் நிலை உள்ளது. அதை ஆங்கிலத்தில் "டூ இர் யுவர் செல்ப்" ( Do it yourself ) என சொல்வார்கள்.

இப்படியான தவல்கள் பல ஒளிப்படங்களாக சன சமூக நிலையங்களில் உள்ளன.

இப்பொழுது பல விடயங்கள் இணையத்தளங்களிலும் உள்ளன ( Youtube) .

புலம்பெயர் தமிழ் மக்கள் கூட பல விடயங்களை ( வீட்டுக்கு மர நிலம் போடுவது, யன்னலை மாற்றுவது) கற்று தாமாகவே செய்கின்றனர். இப்படி ஒரு விடயத்தை செய்ய இங்கு அதற்குரிய மூலப்பொருட்களும் (materials) செய்வதற்குரிய கருவிகள் (tools) வாடகைக்கும் பெறலாம்.

பலரும் இதன் மூலம் திறமைகளை வளர்க்கவும் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் வழி சமைக்கின்றது. பொருளாதாரமும் சமூகமும் பலம் பெரும்.

இப்படியான செயல்திட்டங்கள் தாயகத்திலும் சாத்தியமா என ஆராய்ந்து, முக்கியமாக பெண்களுக்கு என்ன விதமான தொழில்வசதிகளை உருவாக்கலாம் என பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.