Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே. கூட்டமைப்பு சரணாகதி அரசியல் நடத்தக்கூடாது: சிவாஜிலிங்கம்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்ய முற்படாமல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக தமிழ் மிரருக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்காக இதில் கலந்துகொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு போன்றவற்றில் எந்த தீர்வையும், திட்டவட்டமான நிலைப்பாட்டையும் இந்த வரவுசெலவுத்திட்டம் வழங்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து பேச்சுவார்தையை ஆரம்பிக்காமலும் வடக்கு கிழக்கு மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பை பெறாமலும் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதன் மூலம் தமிழ் மக்களை அரசாங்கம் அவமதித்து வருகிறது.

இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.

1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், 3 ஆண்டுகள் மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என்ற ஜே.ஆர். ஜெயவர்தனவின் வாக்குறுதியை நம்பி தமிழர் விடுதலைக் கூட்டணி அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஆனால், 31 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமலுள்ளது.

அதனால் பல்லாயிரக்கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பதையும் நாடு அறியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்ய முற்படாமல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவும் மேற்கு நாடுகளும் அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு இடையூறாக நடந்துகொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் கூறுகையில் என்றார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கே வழக்கு கிழக்கு மக்கள் அதிக வாக்குகளை அளித்தார்கள். அக்கட்சிக்கு 14 நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. அதனால் தமிழ் மக்கள் சார்பாக அவர்களுடன் அரசாங்கம் பேச வேண்டியுள்ளது எனவும் சிவாஜிலிங்கம் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது கூறினார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12140-2010-11-30-12-37-33.html

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்ய முற்படாமல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சரணாகதி அரசியல் செய்பவர்களுடன் இணைத்துக்கொண்டு கூறிய அவசியமான கருத்து.

  • தொடங்கியவர்

இப்படியான "சரணாகதி அரசியல்" வன்முறைக்கே வழி கோலும்.

எனவே கூட்டணியினர் இதை உணர்ந்து காலம் தாழ்த்தாமல், மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் ஒரு அரசியல் தீர்வை காலம் தாழ்த்தாமல் முன்னெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

ஹ்ம்ம்...... கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு, ஏதாவது செய்யும் என்னும் நம்பிக்கை எப்பவோ போய்விட்டது.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.