Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ குழந்தையை கொன்ற சேலம் அரசு மருத்துவமனை!

Featured Replies

‘பிரகதி’ – குறும்பு சிரிப்பும்,மழலை மொழியுமாய் தவழ்ந்த ஒன்னரை வயது அழகு குழந்தை. இவளின் துள்ளலும்,கொள்ளையடிக்கும் குறும்புகளும் 23 நவம்பர் வரைதான் நீடித்தது.அதன்பின்….. அங்கே ஈழத்தில் குண்டுகளால் உறவுகளை கொன்றனர் எதிரிகள்.

இங்கோ ஏதிலியாய் வந்த நிர்மளானந்தன்,சஜீவினியின் பிஞ்சு குழந்தையை தவறான சிகிச்சையால் கொன்றுள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். ப்ரகதிக்கு வாய் அன்னத்தில் பிரச்சனை என்பதால் கடந்த நவம்பர் 19 அன்று நாகியம்பட்டி அகதி முகாமில் இருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அவரின் பெற்றோர்கள். அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறிய மருத்துவர்கள் அதற்கான நாளாக 23 தேதியை குறித்து வேலையை தொடங்கினர்.

அறுவை சிகிச்சை செய்யும் முன் அனஸ்தீசியா எனும் மயக்க மருந்து கொடுத்துள்ளனர்.குழந்தை மயக்கம் அடையாததால் இரண்டு முறை குடுத்து மூன்றாவது முறை அதிகமாய் குடுக்க சில நொடிகளில் வாயில் நுரை தள்ளியுள்ளது.உடனே அறுவை சிகிச்சை ரத்து செய்து விட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அதன்பின் தான் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களின் அராஜகன்களே தொடங்கின.

பெற்றோர்களை பிள்ளையை பார்க்கவே விடவில்லை ஒரே ஒரு நாள் மட்டும் இரவில் பார்க்கவிட்டு விட்டு அதன்பின் மறுத்துவிட்டனர். ‘குழந்தைக்கு சளி அதிகமாகிவிட்டது மூளை காய்ச்சல் வந்துவிட்டது ஆனாலும் உயிர்க்கு பிரச்சனையை இல்லை’ என்றே சொல்லி வந்தவர்கள் டிசெம்பர் 02 அதிகாலை ஒரு மணி அளவில் ‘உங்கள் குழந்தை இறந்துவிட்டது சீக்கிரம் பாடியை எடுத்து செல்லுங்கள் ‘என மிரட்டியுள்ளனர்.

ஏதும் செய்வதறியாத இத்தம்பதியினர் குழம்பி இருக்க காலை செய்தியாளர்களுக்கும், விடுதலை சிறுத்தை கட்சியினர்க்கும் தெரிய வர அவர்கள் அங்கு திரள தொடங்கினர்.அதற்குள் விஷயத்தை அமுக்க பார்த்த மருத்துவ கண்காணிப்பாளர் மோகன் ,தாசில்தார் சித்ரா,டி.சி பாஸ்கர் உட்பட்ட காவல்துறை,அரசு துறை நபர்களுடன் இனைந்து நிர்மளானந்தன்,சஜீவிநியிடம் ‘என்ன செய்ய தவறு நடந்துவிட்டது பிரச்சனையை பெரிதுபடுத்தாதீர்கள் நிவாரணம் தருகிறோம்’ என பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

‘பணம் தருவதால் போன உயிர் திரும்பி வந்துவிடுமா?எங்களுக்கு நியாயம் வேண்டும் தவறான சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழைகள் வரும் அரசு மருத்துவமனைகளில் இனியாவது கொஞ்சமேனும் பொறுப்புணர்வுடன் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கவேண்டும்’ என ப்ரகதியின் உடலை வாங்காமல் சாலை மறியல் உட்பட போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

காவல்துறையும்,அதிகாரபீடமும் எந்நேரமும் அவர்களை ஒடுக்க ஆயத்தமிட்டு உள்ளது. இப்பொழுதே க்யு பிரிவு போலீசார் குழந்தையின் பெற்றோரை மிரட்டி வருகிறது.. இங்கு இதை படிக்கும் தோழர்களே,தோழிகளே……நியாயம் கிடைக்க வுதவுங்கள்..

நன்றி : தமிழ் செல்வன்

2010-12-04-02.jpg

2010-12-04-01.jpg

2010-12-04-03.jpg

2010-12-04-04.jpg

  • கருத்துக்கள உறவுகள்

74881074.jpg

அகதியாக வாழ்ந்தாலும் பரவாயில்லை, உயிரோடாவது இருக்கலாமே என்று படகு மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்துக்குத் தப்பி வந்தவர்கள் நிர்மலானந்தனும் சஜீவினியும்.குழந்தையை பரிதாபமாக சாகக்கொடுத்து கண்ணீரோடு ஒரு வாழ்க்கை அவர்களுக்காக காத்திருக்கிறது என அவர்கள் அப்போது அறிந் திருக்கவில்லை.

21aj.jpg

சேலம் தம்மம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் நிர்மலானந்தன் சஜீவினி தம்பதியர்.உறவுகளை இழந்த துக்கத்தில் இருந்து தங்களுக்கு ஆறுதல் தந்த தன் ஒரே மகளை மருத்துவர்களின் அலட்சியத்தால் இழந்து இப்போது கலங்கி நிற்கிறார்கள்.

இவர்களது ஒன்றரை வயதுக் குழந்தை பிரகதி அன்னப்பிளவு நோய் (உதடுகள் பிளவுற்றிருப்பது) அறுவை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி சேர்க்கப்பட்டாள். ஆரோக்கியமாக அறுவை சிகிச்சை அரங்கிற்குள் கொண்டு செல்லப்பட்ட பிரகதி சிறிது நேரத்தில் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்-பட்டிருக்கிறாள்.

மூளைக்காய்ச்சல், உடல்பலவீனம், தொண்டையில் புண் என மருத்துவர்களால் ஏதேதோ காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.பத்து நாட்களுக்கும் மேல் கோமாவில் இருந்த பிரகதி கடந்த வாரம் இறந்தே போனாள்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து போனதாகக் கூறி உடலை வாங்க மறுத்து கொட்டும் மழையில் மருத்துவமனை முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள் குழந்தையின் பெற்றோர்.

‘‘என் குழந்தையை நல்லபடியாகத்தானே கொடுத்தேன். இப்படி பிணமாக் குடுத்துட்டாங்களே’’ எனக் கதறி அழுதபடியே, நடந்ததைப் பகிர்ந்து கொண்டார் நிர்மலானந்தன்.

“குழந்தை பிறந்தப்பவே அதுக்கு அன்னப்பிளவு இருந்தது தெரிஞ்சது. ஒன்றரை வருஷம் கழிச்சுத்தான் ஆபரேஷன் பண்ண முடியும்னு டாக்டர்கள் சொன் னாங்க.மாசந்தோறும் சேலம் அரசு மருத்துவ-மனைக்குக் கொண்டு வந்து காட்டினோம். போன 19-ம் தேதி செக்கப்புக்கு வரும்போது குழந்தையை அட்மிட் பண்ணச் சொன்னாங்க. 23-ம் தேதி ஆபரேஷன் பண்ணப்போறதா சொன்னாங்க.

ஆரோக்கியமான நிலையில் பிரகதி 23-ம் தேதி ஆபரேஷன் தியேட்டருக்கு அவங்க அம்மாவோட நடந்துதான் போனா. அவளுக்கு இரண்டு முறை மயக்க மருந்து கொடுத்தும் அவ மயக்கமாகலை. அப்புறம் உள்ள கூட்டிட்டுப் போய் ஊசி போட்டாங்க.

இரண்டரை மணிநேரம் கழிச்சு இன்னைக்கு பாப்பாவுக்கு உடம்பு வீக்கா இருக்கிறதால ஆபரேஷன் இல்லை.இன்னொரு நாள் பண்ணிக்கிடலாம்னு சொல்லி பாப்பாவை வெளியே கூட்டி வந்து எங்ககிட்ட ஒப்படைச்சாங்க.

அப்போ பாப்பா வாயில் இருந்து ரத்தம் ஒழுகிட்டு இருந்தது. கழுத்து வீங்கி இருந்தது. ‘ஆபரேஷன் பண்ணலைங்கிறீங்க, வாயில் ரத்தம் ஏன் வருது’ன்னு கேட்டேன். ஆபரேஷனுக்கு மூக்கில் டியூப் செருகினதால தொண்டையில புண் வந்து ரத்தம் கசியுதுன்னு சொன்னாங்க.

அளவுக்கதிகமான அனஸ்தீஸியா (மயக்க மருந்து) கொடுத்தது பாப்பாவுக்கு ஒத்துக்கலைன்னு உண்மையைச் சொல்லி-யிருக்கலாம்.மயக்க மருந்து கொடுக்கலை. தூக்க மருந்து தான் கொடுத்தோம்னு சொன்னாங்க. மயக்க மருந்துக்கும் தூக்க மருந்துக்கும் வித்தியாசம் என்னன்னு கேட்டேன். அவங்க அதைச் சொல்லவேயில்லை.

அப்புறம் திடீர்னு மூச்சுக்குழல் வீக்கம்னு சொன்னாங்க. மூச்சுக் குழல்ல கட்டி இருக்குன்னு சொன்னாங்க. அப்புறமா மூளைக்காய்ச்சல்னு சொன்னாங்க. இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி நல்லா இருந்த குழந்தைக்கு திடீர்னு எப்படி மூளைக்காய்ச்சல் வரும்னு கேட்டா பதிலே சொல்லலை.

எங்ககிட்ட குழந்தையைக் குடுத்ததும் அதுக்கு மூச்சுத்திணறல் வந்து பிறகு கோமாவுக்குப் போயிடுச்சு.அவசரமாக ஐ.சி.யூ.ல சேர்த்து வென்டிலேட்டர்ல வைச்சாங்க. பத்து நாளுக்கு மேல ஐ.சி.யூ.ல வைச்சிட்டு கடைசியா பாப்பா இறந்து போயிட்டான்னு சொன்னாங்க’’ என்று அழுகையை அடக்க முடியாமல் கதறினார்.

குழந்தை கோமாவில உயிருக்குப் போராடிட்டு இருக்கறப்போ,சிறப்பு மருத்துவர் குழுவைப் போட்டு காப்பாத்துறதா சொன்னவங்க அதைச் செய்யலை. பாப்பா இறந்ததுக்குப் பிறகு ஐந்து டாக்டருங்க வந்து பாப்பாவை அங்கயிருந்து எடுத்துட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தினாங்க. எங்க மனசு எவ்வளவு வேதனைப்ப ட்டிருக்கும்னு நினைச்சுப் பாருங்க.

மயக்க மருந்து தந்தப்ப கவனக்குறைவா இருந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுத்தாத்தான் நான் பாப்பாவை அங்கேயிருந்து எடுப்பேன்னு சொல்லி கையெழு த்துப் போடாம வந்துட்டேன். அதுக்கப்புறம் எங்ககிட்ட சொல்லாமலேயே குழந்தையோட உடலை ராத்திரியோட ராத்திரியா மார்ச்சுவரியில கொண்டு போய் வச்சுட்டாங்க.

அப்புறமா நாங்க சாலை மறியல்ல இறங்கிப் போராடினோம்.அதுக்குப் பிறகுதான் போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். போட்டாங்க. பிரகதி போல வேறு யாரும் பாதிக்கப்பட்டுறக் கூடாது. எங்க பொண்ணோட சாவு கடைசியா இருக்கட்டும்.அதுக்குத்தான் போராட்டம் பண்றோம்’’என்று கலங்கியவாறே பேசினார் நிர்மலானந்தன்.

“உதடு நல்லா இல்லாட்டியும் என் குழந்தை உயிரோடவாவது இருந்திருக்குமே. ஆபரேஷன் தியேட்டருக்கு சிரிச்சுக்கிட்டே எங்கிட்ட பை சொல்லிட்டுப் போன என் குழந்தையை பிணமாக் குடுப்பாங்கன்னு நான் நினைச்சே பார்க்கலை. பாப்பா இறந்ததுக்குப் பிறகு ஆஸ்பத்திரில இருந்து எங்ககிட்ட சமாதானம் பேச வந்தவங்க பணம் தர்றோம் வாங்கிட்டு அமைதியாப் போங்கன்னு சொன்னாங்க.

என் குழந்தை மருத்துவச் செலவுக்கு பத்தாயிரம் ரூபாயைக் கடனா வாங்கிட்டு வந்திருந்த என் மாமியார், அந்தப் பணத்தைத் தூக்கிப் போட்டு இந்தப் பணத்தை எடுத்துக்கிட்டு என் பேத்திய உசிரோட தந்திருங்கன்னு சொன்னாங்க. அவங்களால கொடுக்க முடியுமா?’’ என்கிற சஜீவினியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

சேலம் கலெக்டரிடம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மறியல்,அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இணைந்து கொண்டது என எல்லாம் நடந்த பிறகுதான் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.அதிலும் மருத்துவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக மட்டுமே எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் பெற முயற்சித்தோம். பலரைத் தொடர்பு கொண்டும் யாரும் பேச முன்வரவில்லை.

இந்த சம்பவத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, “இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் என்னிடம் புகார் தரவில்லை. குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும்’’என்ற பதிலைத் தந்தார்.

அரசு மருத்துவர்களின் அலட்சியம் தொடராமல் பிரகதியின் மரணமே கடைசியாய் இருக்க வேண்டும் என்ற அவளது பெற்றோரின் எண்ணம் பலிக்கட்டும்!

படங்கள்: ஆகாஷ்

- வை.கதிரவன்

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.