Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு கண்ணுமில்லை 5தம்பிகளோடும் கூலிவேலை செய்யும் அம்மாதான் உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 27வயது இளைஞன் 2007ம் ஆண்டு சமரொன்றில் தன்னிரு கண்களையும் இழந்து போனான். ஏற்கனவே காயமடைந்து மாற்றுவலுவுள்ளோர் பயிற்சிக் கல்லூரியில் கணணியைக் கற்றான். களங்களிலிருந்து ஓய்வுபெற்று கணணியை தன் சக போராளிகளுக்கு கணணியைக் கற்றுக் கொடுத்தான். யுத்தம் உக்கிரமடைந்து யாவரும் களம் செல்ல வேண்டிய நேரத்தில் களத்திற்குச் சென்றவன் தனது கண்ணிரண்டையும் தான் நேசித்த மண்ணுக்காக கொடுத்துவிட்டிருந்தான். உலகம் அவனுக்கு இருண்டு போனது. கடைசிக்கள முடிவுகளோடு முகாமில் அடைந்து ஒரு வருடத்துக்கு மேலாக முகாம் வாழ்வும் முடித்து வெளியில் வந்த போது குடும்பத்தினர் யாவரும் இறந்து போய்விட்டதாக அறிந்தான். அதன் பின்னால் யாழ்மாவட்டத்திலுள்ள கட்புலனற்றோர் நிலையத்தில் கற்கச் சென்றான். தனது கற்கையை ஆரம்பித்திருந்த வேளை கிழக்கு மாகாணத்தில் அவனது அம்மாவும் 5சகோதரர்களும் உயிருடன் இருப்பதாக அறிந்து ஊருக்குப் போனான். குடும்பச் சூழல் பார்வையற்ற இவனை வைத்துப் பராமரிக்க முடியாத நிலமையில் மீண்டும் யாழ்மாவட்டத்துக்குச் சென்றான். ஆனால் அந்நிறுவனம் அவனை உள்வாங்க மறுத்துவிட திரும்பஊருக்குச் சென்றுள்ளான். கண்களை இழந்த இவனையும் இவனது மனைவியையும் இவனது 5தம்பிகளையும் கூலிவேலை செய்து தன்னால் முடிந்த வேளைகளில் இவர்களுக்கு உணவழித்துக் கொண்டிருக்கும் ஏழை அம்மாவின் உழைப்பு மட்டும் தான் இவர்களது இப்போதைய உயிர்வாழ்தலுக்கான நம்பிக்கை. அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலமையில் இயற்கைக்கடன்களைக் கழிக்கவே காடுகளுக்குச் சென்றுவர ஒரு துணையே இவனைக் கவனிக்கும் நிலமையில் இருக்கும் இந்த முன்னாள் போராளிக்கு நேசக்கரம் தாருங்கள் உறவுகளே…..உங்கள் உதவிகளை வேண்டும் இந்த 27வயது இளைஞனின் துயரிலிருந்து இதோ….

ஒலிப்பதிவினைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணணிரண்டையும் இழந்த இந்த முன்னாள் போராளியின் குடும்பம் பெரியது. 5சிறுதம்பிகளும் அம்மாவும் இவனும் இவனது மனைவியுமாக 8அங்கத்தவர்களை உள்ளடக்கிய குடும்பம். பெரிய குடும்பம் அம்மாவின் கூலித்தொழில் மூலம் கிடைக்கும் 300ரூபாவில் தான் எல்லாம். இவனுக்கான ஒரு தொழில் முயற்சிக்கான உதவியை எம்மிடம் எதிர்பார்த்திருக்கிறான். கோழி வளப்பிற்கு இலங்கை ரூபா 30ஆயிரம் இவனுக்குத் தேவைப்படுகிறது.

இவனுக்கு உதவ விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்.

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டையும் நாட்டுக்காகத் தந்தவனுக்கு உதவுங்கள்.

205,00€ இந்தக் கண்களை இழந்தவனுக்குக் கொடுத்து இவனை வாழ வையுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுக்கு வாசகன் - 156,61€ ஐ வழங்கியுள்ளார்.

பிரான்ஸ் சுவி அவர்களின் இம்மாதப்பங்களிப்பான 20,00€ இந்த உறவின் சுயதொழிலுக்காக சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

156,00€ + 20,00€ = 176,61€ இதுவரை இந்த உறவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இன்னும் 28,39€ தேவைப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.