Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைப்பிரியாவின் படுகொலையும் தமிழ் ஊடகங்களின் வக்கிர அணுகு முறைகளும்

Featured Replies

சிறிலங்கா படையினரால் இரக்கமற்ற முறையில் போர் விதிகளை மீறி அப்பாவித் தமிழ் மக்களும் ஆயுதம் தரித்திராத போராளிகளும் படுகொலை செய்யப்பட்ட காணொளிக் காட்சியை “சணல் 4” ஒளிபரப்பியதோடு மட்டுமல்லாமல் சிறிலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்வதற்கான வழிவகைகளையும் மிகவும் பொறுப்புடன் ஏற்படுத்தி வருகிறது. மற்றைய பன்னாட்டு ஊடகங்களையும் சிறிலங்கா அரசின் போர்குற்றத்திற்கு எதிரான குரல் கொடுக்க வைத்திருக்கிறது.

சணல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தப் போர்குற்ற ஆதார காணொளி வெளியாகுவதற்கு முன்னரேயே இந்த படுகொலை தொடர்பான ஒளிப்படங்கள் உலகத் தமிழ் பேரவையினால் வெளியிடப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டவர்களில் போராளி ஊடகவியலாளரான இசைப்பிரியாவும் உள்ளாரென அடையாளம் காணப்பட்டிருந்தது.

சணல் 4 தொலைக்காட்சி இந்த காணொளிக் காட்சியை வெளியிட்ட பின்னர் தமிழ்நெட் ஊடகம் பொறுப்பாகச் செயற்பட்டு, இசைப்பிரியா தொடர்பான சரியான தகவல்களை வெளியிட்டது. அவர் ஒரு ஊடகவியலாளர் என்பதையும், போரின் இறுதிக் கட்டத்தில் தனது 4 மாதக்குழந்தையையும் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் பறிகொடுத்தவர் என்பதையும் அதற்கு மேலாக அவர் போரில் பங்கெடுங்காதவர் என்பதையும் வெளிப்படுத்தியது.

தமிழ்நெட்டின் இந்தப் பணி சிறிலங்கா படையினரின் வெறியாட்டத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ”இந்திய ருடே” ஊடக குழுமத்தினால் நடாத்தப்படுகின்ற பிரபல ஹெட் லைன்ஸ் தொலைக்காட்சி தமிழ்நெட்டின் செய்தியை அடிப்படையாக வைத்தே இந்தப் போர்க்குற்ற ஆதார காணொளி தொடர்பான செய்தியை வெளியிட்டது.

தமிழ் நெட் ஊடகம் இப்படிப் பொறுப்புடன் செயற்பட மறுபுறத்தே தமிழ் மொழியில் வெளிவரும் இணையத் தளங்கள் மிக மிக கீழ்த்தரமான செயலைச் செய்துள்ளன. சிறிலங்காப் படைகளின் போர்குற்றத்தை, இசைப்பிரியாவின் படுகொலையை நியாப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. பெண் போராளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை ரசித்து ரசித்து எழுதியுள்ளன. அனைத்துலக தொடர்பகத்தினால் இயக்கப்படும் தேசிய ஊடகங்களும் இதில் விதிவிலக்கல்ல.

அனைத்துலக தொடர்பகத்தினால் இயக்கப்படும் தேசிய ஊடகம் என்று பறைசாற்றப்படும் சங்கதியின் செய்தி சிறிலங்கா படையினர் செய்தது போர்க்குற்றமல்ல, தமது சக படைவீரனைக் கொன்றமைக்காக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் என்று எழுதப்பட்டுள்ளது.

இசைப்பிரியாவின் ஸ்னைபர் தாக்குதலால் வெறியடைந்த படையினர்

இறுதிக்கட்டப் போரின் போது சிறீலங்கா இராணுவத்தின் ஸ்னைபர் வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டுள்ளான். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே கொல்லப்பட்ட சிறீலங்கா படைவீரனின் சகாக்களால் அவர் சிதைக்கப்பட்டதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

தம்மிடம் சரணடைந்திருந்த பெண்ணொருவரை மிரட்டி காயம் பட்ட நிலையில் தவிப்பது போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையில் இருந்த இசைப்பிரியாவை தந்திரமாக தமது எல்லைக்குள் படைத்தரப்பு வரவழைத்துள்ளது. அதன் பின் சற்றும் எதிர்பார்த்திராத முறையில் அவர் படையினரின் கையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளும் கேணல் ரவிப்பிரிய தலைமையில் வழிநடாத்தப்பட்ட படையணியொன்றின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் செவியுற்றதாக கூறப்படுகின்றது. அதன் பின்பே அவர் வாயில் துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட கேணல் ரவிப்பிரியாவின் டயலொக் இலக்க தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கண் கண்ட சாட்சிகள் மூலம் தெரிய வருகின்றது.

அத்துடன் அன்றைய கட்டத்தில் இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த படையணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் மாதக்கணக்கில் விடுமுறை கிடைத்திருக்காத நிலையில் தங்களது உணர்ச்சிகளை தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியின் மீதே தீர்த்துக் கொண்டதாக களமுனையில் செயற்பட்ட சிலரின் தகவல்கள் உறுதி செய்கின்றன.

கீழே உள்ள செய்தி தனியாரால் நடத்தப்படும் தமிழ்வின் இணையத் தளச் செய்தி - முன்னர் மேற்கண்டாறு செய்தி வெளியிட்டு பின்னர் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான பரப்புரை என்பதை உணர்ந்து தெளிவுபடுத்தி எழுதியிருக்கிறார்கள்.

[quote

]ஊடகவியலாளராகவும், நடனக் கலைஞராகவும் செயற்பட்ட இசைப்பிரியா இராணுவத்திடம் சிக்கி, கேணல் ரவிப்பிரியவின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் உதவிபுரிந்தது கேணல் ரவிப்பிரிய தலைமையில் வழிநடாத்தப்பட்ட படையணியொன்றின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் செவியுற்றதாக கூறப்படுகின்றது. அதன் பின்பே அவர் வாயில் துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட கேணல் ரவிப்பிரியாவின் டயலொக் இலக்க தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கண் கண்ட சாட்சிகள் மூலம் தெரிய வருகின்றது.

அத்துடன் அன்றைய கட்டத்தில் இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த படையணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் மாதக்கணக்கில் விடுமுறை கிடைத்திருக்காத நிலையில் தங்களது உணர்ச்சிகளை தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியின் மீதே தீர்த்துக் கொண்டதாக களமுனையில் செயற்பட்ட சிலரின் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் எமது தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே

“ இறுதிக்கட்டப் போரின் போது சிறீலங்கா இராணுவத்தின் ஸ்னைபர் வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டுள்ளான். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே கொல்லப்பட்ட சிறீலங்கா படைவீரனின் சகாக்களால் அவர் சிதைக்கப்பட்டதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

தம்மிடம் சரணடைந்திருந்த பெண்ணொருவரை மிரட்டி காயம் பட்ட நிலையில் தவிப்பது போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையில் இருந்த இசைப்பிரியாவை தந்திரமாக தமது எல்லைக்குள் படைத்தரப்பு வரவழைத்துள்ளது. அதன் பின் சற்றும் எதிர்பார்த்திராத முறையில் அவர் படையினரின் கையில் சிக்கிக் கொண்டுள்ளார்”

என்ற விடயம் அடங்கிய செய்தி உடனடியாக ஊடகங்களுக்கு பரப்பப்பட்டது.

இச்செய்தி நிராயுதபாணியாக நின்ற ஊடகவியலாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்க அவரை ஒரு ஆயுததாரியாக்க எதிரியால் திட்டமிடப்பட்ட பரப்புரை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக அவதானித்தால் அவர் ஒரு நிராயுதபாணி என்பதை உறுதிப்படுத்த முடியும்.

அதனாலேயே இந்தச்செய்தியில் திருத்தத்தைக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனைய ஊடகங்களையும் எதிரியின் திட்டமிட்ட சதித்திட்டத்தை கவனத்தில் கொண்டு வெளிவிடப்படும் ஒவ்வொரு செய்திகளையும் முழுமையான செய்திப்பகுப்பாய்வு செய்து கொள்ளுமாறு ஏனைய இணையத்தளங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

Edited by மின்னல்
தலைப்பு திருத்தப்பட்டது

ஒருவர் ஒரு கடிதம் தான் ஐ. நா.க்கு யுத்த குற்றங்கள் பற்றி எழுதலாம்.

என்னிடம் சில கடிதங்கள் ( பொதுவானவை) உள்ளன, யாரவது எழுத விரும்பினால் எனது தனிப்பட்ட முகவரிக்கு அறியத்தரவும்.

நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: மின்னல் உங்கள் செய்தி சரியானதுதான்.

பல ஊடகங்கள் ஷோபாவை ஒரு ஆயுதம் ஏந்தாத ஊடகப் போராளி என்று மேற்கோள் காட்டும்போது சங்கதி மட்டும் அவர் ஒரு ராணுவ வீரனைக் கொன்றதற்காகப் பழிவாங்கப்பட்டார் என்று எழுதிகிறது. ஆக இங்கே நடந்தது பழிக்குப் பழி வாங்கல் நடவடிக்கை மட்டும்தான், அத்துடன் சரி, அப்படித்தானே??

இதில் என்ன நண்மை என்று எனக்குத் தெரியவில்லை. கொல்லப்பட்டவர் ஆயுதம் தரிக்காதவர் என்றால் எதற்காக இந்தப் புனைக் கதை??

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு கதை எழுதுவதன் மூலம் பாதிக்கப்படப்போவது தமிழ் தேசிய ஊடகத்துறையின் நம்பகத்தன்மை தான். அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானவை. இறுதியில் எமக்கான kuralai இவை முற்றாக அடைத்துவிடவும் கூடும்.

Edited by ragunathan

மின்னலின் அலசல் மூலம் போக்கிரி ஊடகங்களின் முகமூடிகள் நன்கு கிழிக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி மட்டும் அவர் ஒரு ராணுவ வீரனைக் கொன்றதற்காகப் பழிவாங்கப்பட்டார் என்று எழுதிகிறது.

இசை பிரியா அவர்களின் தூய தமிழ் உச்சரிப்புக்கு ரசிகன் நான்.. அவன் யார் சங்கதி??.. தமிழ்நாட்டில் அவன் ஆபீஸ் எங்குள்ளது...அட்ரஸ் பிளீஸ்.. ?? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.