Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு 3 நாள் உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த தெற்காசியாவுக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் திடீரென இரத்து‐

Featured Replies

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த தெற்காசியாவுக்கு பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலிஸ்டேயார் பேர்ட் தனது விஜயத்தை திடீரென இரத்துச் செய்துள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி பேர்ட் பங்களாதேஷ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவிருந்தார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் தனது இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் நோக்கில் கடந்த 29 ஆம் திகதி இங்கிலாந்து சென்றிருந்தார்.

அவரது இங்கிலாந்து விஜயத்தில் மாணவர் சங்க கூட்டத்தில் உரையாற்றுவதே முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. ஜனாதிபதி ஹீத்ரு விமான நிலையத்திற்கு சென்ற போது பிரித்தானிய தமிழ் மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால், ஜனாதிபதி உரையாற்றவிருந்த நாளில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம் என லண்டன் காவற்துறையினர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு எச்சரித்திருந்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதியின் உரையை இரத்துச் செய்ய மாணவர் சங்கம் தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை அடுத்து மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் விமல் வீரவங்ச தனது பரிவாரங்களுடன் சென்று பிரித்தானிய தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும், அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரின் இந்த செயற்பாடு தொடர்பாக இலங்கை அரசாங்கம் பதில் எதனையும் வெளியிடாததே, பிரித்தானிய அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் இரத்துச் செய்யப்பட காரணம் என கூறப்படுகிறது.

பிரித்தானிய அமைச்சரின் விஜயம் காரணங்கள் எதுவும் கூறப்படாது இரத்துச் செய்யப்பட்டமை இலங்கை அரசாங்கத்தின் மீது மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட அடியென அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

globaltamilnews

அங்கு போனால் விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பப்படலாம் என்று பயந்துவிட்டார். :rolleyes::D

"டபிள் கேம்" ஆட முடியாத சூழ்நிலை - பாவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.