Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீழ இணைகின்றார்களாம் - பிரதமர் ஜயரட்னா

Featured Replies

தலைமறைவாகத் திரியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரையும், ஆயுதக் குழுவினரையும் ஒன்று திரட்டி நாட்டில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் திட்டமிடப்பட் டுள்ளது என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதற்கு சர்வதேச அமைப்புகளிடம் உதவிகளைப் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமான தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். புலிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்த பிரதமர் இதற்கான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான எம்.சுமந்திரன் அப்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்குவதாயின் குழு நிலையில் பரிசீலிக்கப்படும் நிலையில் அவசரகாலச் சட்டம் பற்றி விவாதிக்க முடியாது என்று அவர் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அவசரகாலச் சட்டம் சபை நிலையில்தான் விவாதிக்கப்படவேண்டும். எனினும், கட்சித் தலைவர்கள் இணங்கினால் இரண்டையும் ஒரே சமயத்தில் விவாதிக்கலாம். ஆனால், மாலை 7 மணிக்கு மீண்டும் சபை நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறினார்.

எதிர்க்கட்சி கொரடாவான ஜோன் அமரதுங்க இரண்டையும் ஒரே நேரத்தில் விவாதிப்பது என்றால் அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான அஷீக்கையை பிரதமர் சமர்ப்பித்தால் நாம் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டியதற்கான காரணங்களை விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உள்நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டாலும் சர்வதேச மட்டத்தில் மாற்றம் ஏற்படவில்லை. எமது ஜனாதிபதி லண்டன் சென்றபோது புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து ஜனாதிபதிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்.

லண்டனில் சவுத்போல் என்ற இடம் முற்றும் முழுதாக தமிழர்கள் வாழும் இடம். இவர்கள் புலிகளின் அனுதாபிகள். ஜனாதிபதி முதலாவது பதவிக் காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். இதனை சர்வதேசமும் பாராட்டின. இரண்டாவது பதவிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்காகப் போராடவேண்டி உள்ளது. இப்போராட்டத்தில் நாம் வெற்றிபெறுவோம் என்பதும் உறுதி.

சரண் அடைந்து விடுதலையான புலி உறுப்பினர்கள் மீண்டும் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைக்கமாட்டோம் என்று உறுதியாக இருக்கின்றனர். முன்பு புலிகளால் மரண அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், இப்பொழுது அந்த பயமும், பீதியும் இல்லை. அரசின் நடவடிக்கைகளை வரவேற்கின்றனர்.

சரண் அடைந்துள்ள புலி உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட நான்கு பேரின் மூலம் கிடைத்த தகவலின்படி கிளிநொச்சியில் புலிகளின் சித்திரவதைக் கூடம் ஒன்று தோண்டிப் பார்க்கப்பட்டுள்ளது. அங்கே 60 வீரர்களின் எழும்புக்கூடுகள் காணப்பட்டன. இந்த அறுபது பேரும் எவ்வாறு வெட்டியும், கொத்தியும், சுட்டும் கொல்லப்பட்டனர் என்ற விவரத்தையும் இவர்கள் கூறி உள்ளனர். இது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

ஆனால், இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களை நாம் இன்று மனிதாபிமானத்துடன் நடத்துகின்றோம். அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்கின்றோம். இவர்கள் ஒருபோதும் மீண்டும் புலிகளுடன் இணையமாட்டார்கள்.

இப்பொழுது நாம் மேற்கொண்டுவரும் புலனாய்வு நடவடிக்கைகளின் மூலம் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, கொழும்பு நகரை அண்டிய பகுதிகளிலும் பலர் கைதுயச்யயப்பட்டுள்ளனர். ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாலும், புலிகளின் புலனாய்வு பிரிவினரும், ஆயுதக் குழுவினரும் இரகசியமாக நடமாடுகின்றனர். இவர்களை ஒன்று திரட்டி மீண்டும் ஓர் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பிக்க சர்வதேச மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் புலிகளின் மாவீரர் தினம் கொண்டாடப்படவில்லை என்றாலும் சர்வதேச அளவில் மாவீரர் தினம் அதற்குச் சமான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.

எனவே, இதனை முறியடிக்கவும், நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நாட்டின் நலன் கருதி எதிர்க்கட்சியும் இதற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.