Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மை: சீனா கொந்தளிப்பு

Featured Replies

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி லியூ ஜியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கியிருப்பது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக சீனா கூறியுள்ளது.

சீனாவில் ஜனநாயக ஆதரவாளர் லியூ ஜியாபோவிற்கு இந்தாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது சீனாவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. பரிசு வழங்கும் விழாவை புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்த சீனா, அந்த விழா, சீனாவில் ஒளிபரப்பப்படுவதை தடுத்து விட்டது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் லியூவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, இது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக கூறியுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143163

இலங்கை பரிசளிப்பில் பங்கேற்கவில்லை

இதனிடையே ஆஸ்லோவில் வெள்ளிக்கிழமை சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் நிகழ்வில் இலங்கை கலந்து கொள்ளாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதர் இந்த பரிசிளப்பு விழாவுக்கான அழைப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும், அது உறுதியான முடிவு என்றும் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101208_confucious_rivalnobel.shtml

நோபல் சமாதானப் பரிசு வைபவத்தில் பங்கேற்பதிலும் இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் உலக நாடுகள்

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு நோர்வே 58 நாடுகளுக்கு அழைப்புவிடுத்திருந்தது. ஒஸ்லோவில் தூதரகங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டன. உக்ரைன், சவூதிஅரேபியா, சூடான், வெனிசூலா, கியூபா, கொலம்பியா, துனீஸியா, ஈராக், ஈரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், கஸகஸ்தான், சேர்பியா, பாகிஸ்தான், எகிப்து, மொறோக்கோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளன.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2922:2010-12-09-04-21-29&catid=51:local&Itemid=85

Edited by akootha

  • தொடங்கியவர்

கடைசியாக நடந்த பனிப்போரில், அமெரிக்கவும் அதன் நேசநாடுகளும் சோவியத் யூனியனுக்கும் அதன் பொதுவுடைமை கொள்கை உள்ள நாடுகளுக்கும் எதிராக மேற்கொண்டது. இறுதியில் அமெரிக்கவும் அதன் நேசநாடுகளும் வெற்றி கண்டன என கொள்ளலாம். பல நாடுகள் தனி நாடாகின.

இன்று சோவியத் யூனியன் என்ற பலமான நாடு இல்லை. உலகில் இன்று கார்ல் மார்க்ஸ் - எங்கில்ஸ் - லெனின் இவர்கள் கொள்கைகள் ஓரிரு நாடுகளால் மட்டுமே கடைப்பிடிக்கப்ப டுகின்றன.

இன்று, ஏற்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" எனபதற்கு மேலாக பொருளாதார நலன்களும் அதற்கான அரசியல் நகர்வுகளும் முக்கியமடைய தொடங்கியுள்ளன. அதிலும், சீனாவின் அதீத பொருளாதார வளர்ச்சியே மேலை நாடுகளை அச்சுறித்தியவண்ணம் உள்ளது.

நடக்கும் சீனாவுக்கு எதிரான பனிப்போரில், சிங்களம் சீனாவின் பக்கம் சாருவது வெளிப்படை. அதற்காக அது இந்தியாவை எதிர்க்கவும் தயாராகி உள்ளது.

இந்த பனிப்போரில் தமிழர் தரப்பு சாதுரியமாக அரசியல் காய்களை நகர்த்துமையின், இந்த பனிப்போரின் பயனாக எனது தேசமும் விடுதலை பெறும்.

இந்திய தமிழினப் படுகொலையாளர்களை பலவீனப்படுத்துதலும் அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.