Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய ஹிட்லர் மகிந்த இராஜபக்சே – குமுதம் தலையங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய ஹிட்லர் மகிந்த இராஜபக்சே – குமுதம் தலையங்கம்

15122010_kumudam_ed.jpg

ஈழத்தில் போர் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியை இங்கிலாந்து தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை நிர்வாணமாக்கி பின்னால் கைகளைக் கட்டி பின்னந்தலையில் சுட்டுக் கொல்லுகிறார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படும் காட்சியும் இருக்கிறது. இவற்றை ஒரு கொடூர சிங்களவன் படம் பிடிக்கிறான். ஈவு இரக்கமில்லா அரக்க கொடுமை.

இந்தக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போன ஐ.நா. அமைப்பு, இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளமும்,‘ராஜபக்ஷேயும் அவரது சகோதரர்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களைச் செய்திருக்கிறார்கள்’ என்று அமெரிக்க அதிகாரிகள் சொல்லியிருப்பதாகத் தகவல் தருகிறது.

இந்தக் கொடூரச் செய்திகளைக் கேள்விப்படும் நேரத்தில் லேசாக ஆறுதல் தரும் செய்தியும் வந்திருக்கிறது. தமிழ் இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் ஹிட்லர் ராஜபக்ஷேவுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூக்குடைப்பு நடந்திருக்கிறது. அமைதியின் காவலன் போல் முகமூடி போட்டுக் கொண்டு அங்கு பேசப் போன ராஜபக்ஷே,ஈழத் தமிழரின் போராட்டத்தால் திருப்பி அனுப்பப்-பட்டார். விடுதலைப் புலிகளை அழித்தாலும் அது தற்காலிகமானதுதான், இலங்கைத் தமிழர்கள் அதே வீரத்துடன் தான் இருக்கிறார்கள் என்பதை ராஜபக்ஷே புரிந்திருப்பார்.

உலகம் இப்படி இருக்க,நமது மத்திய அரசு மட்டும் இன்னும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருப்பது என்ன ராஜதந்திரம் என்று புரியவில்லை. போர் முடிந்த பின்னும் தமிழர்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யாத ராஜபக்ஷேவை இன்னும் தமிழர்களுக்கு உதவச்-சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?மத்திய அரசு சிந்திக்க வேண்டும்..

நன்றி: குமுதம்

http://meenakam.com/2010/12/11/15968.html

  • கருத்துக்கள உறவுகள்

curry-samosa.jpg

ம்ம் ...நேற்றைய தலையங்கம்.. இன்றைய சமோசாவை தாங்கி பிடிக்கும்...

இந்த 21 ஆம் நூற்றாண்டு ஹிட்லருக்கு துணைபோகும் இந்திய அரசுகளின் பயங்கரவாதச் செயல்களையும் குமுதம் அம்பலப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.