Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும்!

Featured Replies

அரச வைபவங்களில் சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரை காலமும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது சட்டவிரோதமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய கீதம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கருத்து வெளியிட்டிருப்பது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ஒரு செயற்பாடாகும் எனவும் கண்டித்துள்ளது.

அரச வைபவங்களில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதில்லை. எனவே, இதுவரை காலமும் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தை மீறிய செயலாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பாக இன்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் இசைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து எமது நாட்டில் தலையிடுவது அநாகரீகமான செயலாகுமென்றும் அவர் கூறினார்.

வண எல்லாவெல மேதானந்த தேரர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒரு நாட்டின் பெரும்பான்மை தேசிய இனத்தின் மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதற்கமைய எமது நாட்டில் சிங்களத்திலேயே இசைக்கப்பட வேண்டும். தமிழில் இசைப்பதை அனுமதிக்க முடியாது.

அவ்வாறெனில் எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் இசைக்கப்பட வேண்டுமென கேட்பார்கள். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர்களது தேசிய மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

அரச வைபவங்களில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படும் போது தமிழ் பாடசாலைகளில் இதுவரை காலமும் தமிழில் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமாகும். இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாம் இந்தியாவின் காலனித்துவ நாடல்ல. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும். அதைவிடுத்து எமது தேசிய கீதம் தொடர்பில் கருத்து கூறியிருப்பது அநாகரீகமான செயலாகும்" என அவர் தெரிவித்திருக்கின்றார்.

http://www.ponguthamil.net/news/contentnews.asp?sectionid=1&contentid={8CD4DA7E-50A6-482B-A039-5BE12BC09B01}

''தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியாவின் தேசிய கீதம் ஹிந்தியில் இசைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து எமது நாட்டில் தலையிடுவது அநாகரீகமான செயலாகுமென்றும் அவர் கூறினார்''

இந்தியா ஒரே நாடு ஒரே மொழியில தான் தேசியகீதம் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனா சிறி லங்காவில இன்னுமொரு நாடும் எல்லோ இருக்கிறது அந்த நாட்டில வேற்று மொழியில தேசியகீதம் பாடுவது சட்டத்த மீறின செயல்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேலையை பார்க்க வேண்டும். அதைவிடுத்து எமது தேசிய கீதம் தொடர்பில் கருத்து கூறியிருப்பது அநாகரீகமான செயலாகும்" என அவர் தெரிவித்திருக்கின்றார்.

கரண்ட தொட்டா சாக்கடிக்கர மாதிரி எபெக்ட் ஓக்கே.... ஆனா காமெடி பீஸாகி போச்சுது...இது வடிவேலு - விவேக்கு சேர்ந்து நடித்த காமெடி சீன்ஸ் போல கிடக்கு...

264aac9167470612ecf56020d5dc5b75%5B1%5D.gif

கரண்ட தொட்டா சாக்கடிக்கர மாதிரி எபெக்ட் ஓக்கே.... ஆனா காமெடி பீஸாகி போச்சுது...இது வடிவேலு - விவேக்கு சேர்ந்து நடித்த காமெடி சீன்ஸ் போல கிடக்கு...

264aac9167470612ecf56020d5dc5b75%5B1%5D.gif

அந்த ஆள் தன்னுடைய வேலையைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.. சிங்களவனுக்குத்தான் தெரிய இல்ல போலும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.