Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பினாயக் சென்னுக்கு ஆயுட் தண்டனை

Featured Replies

இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் தேச துரோகம் செய்ததாகத் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு ஆயுட் தண்டனை விதித்துள்ளது.

மாவோயிய கிளர்ச்சிக்காரர்களின் வலயமைப்பு உருவாக பினாயக் சென் உதவினார் என்று கீழ் நீதிமன்றத்தால் குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவரான பினாயக் சென் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின ஏழை மக்களுக்காக மருத்துவ உதவி மையங்களை நடத்திக்கொண்டிருந்தார்.

அவருடைய சேவைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. கைதாகி வழக்கு நடத்தப்படுவதற்காக சிறையில் அவர் காத்திருந்த சமயத்தில் மருத்துவ தொண்டுக்கான கௌரவம் மிக்க சர்வதேச விருது ஒன்று அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

நாராயண் சன்யால் என்ற மாவோயிய சிந்தாந்தவாதிக்கும் தலைமறைவாக வாழ்ந்துவந்த மாவோயிய கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் செய்திகளை எடுத்துச் சென்ற தூதுவராக பினாயக் சென் செயல்பட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

நாராயண சன்யால் மற்றும் கொல்கத்தா வியாபாரி பையுஷ் குஹா ஆகியோர் மீதும் தேச துரோகக் குற்றம் உறுதிசெய்யப்பட்டு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் என்ற மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பினாயக் சென், மாவோயியவாதிகளை ஒடுக்குவதற்காக அரசாங்கத்தால் அமைக்ககப்பட்ட அமைப்பு அட்டூழியங்கள் செய்திருந்ததாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பினாயக் சென் மேன்முறையீடு செய்வார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101224_binayaksentenced.shtml

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

பினாயக் சென் வழக்கு குறித்து லேன்செட் எழுதிய தலையங்கம்:

எமது லேன்செட் இதழ் வெளிவரும் இந்த ஜனவரி 4 ம் தேதி பினாயக் சென் தனது 61 வது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, தேசத் துரோகக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார். மனிதநேயம் மிக்க ஒரு மாமனிதருக்கு வழங்கப்பட்ட இச்சிறைத் தண்டனை சிறிதும் மனிதாபிமானம் இல்லாத கொடுஞ் செயல். இந்தத் தீர்ப்புக்கு முன்னர் அவர் வாழ்நாள் முழுதும் வறுமையில் உழன்று வரும் ஏழைகள், பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காகச் செலவிட்டவர். அவருடைய தன்னலமற்ற சேவை அவருக்கு பெற்றுத்தந்தது சர்வதேச மருத்துவக் கவுன்சில் வழங்கிய 2008 ம் ஆண்டுக்கான ஜோனாதன் மான் விருது.

அரசாங்கம் செய்து வரும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து பினாயக் அம்பலப் படுத்தி வந்ததே அவர் மீது சாட்டப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட இக்குற்றச்சாட்டின் பின்னணி. அவர் சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவரான நாராயண் சன்யால் என்பவருக்கு செய்தி கொண்டு தருபவர் என்று சாட்டப்பட்ட குற்றம் நம்ப முடியாத சாட்சிகளின் அடிப்படையில் அமைந்தது. அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடந்த விசாரணை ஒரு மாயை, ஒரு மோசடி. அதன் முடிவு கேலிக்குரிய அநீதியான தீர்ப்பு.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக இந்தியப் பத்திரிகைககள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படும் சர்வதேச மன்னிப்பு நிறுவனம் பினாயக் சென் ‘ஒரு மனச் சாட்சியின் கைதி’ என்று வருணித்து இருக்கிறது. உலகின் தலை சிறந்த கல்வியாளர்கள் எண்பது பேர் இந்த அநீதியைக் கண்டித்து இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து எழுதி இருக்கிறார்கள். லேன்செட் இதழ் அவர்களோடு இணைந்து பினாயக் சென்னுக்கு ஆதரவாக இந்திய நீதியைக் கண்டித்துக் குரல் கொடுக்கிறது.

2009 ம் ஆண்டு இந்திய அரசு இந்த வழக்கில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டிருந்தோம். இந்த அநீதியான தீர்ப்பை ஒரு வேளை இந்திய உச்ச நீதிமன்றம் சரி செய்தாலும் செய்யலாம். ஒரு வேளை அது நடக்கவில்லையென்றால், ஏற்கனவே அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் மனித உரிமைக் கடப்பாடுகள் நிரந்தரமான அவமானத்திற்கு உள்ளாகும். எங்கெல்லாம், இந்திய அரசு தன்னுடைய அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறியதோ அங்கெல்லாம் சென்று பினாயக் தன்னுடைய முயற்சியில் மருத்துவ உதவிகளையும் அடிப்படை மனித உரிமைகளையும் மக்கள் பெறுவதற்காகப் பாடுபட்டார். அதற்கான பரிசாக, பிரிட்டிஷ் காலனி அரசு எப்படியெல்லாம் அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்கியதோ, காந்தியைத் தேசத் துரோகி என்று தண்டித்ததோ அதேவாறு தண்டனை வழங்கி உள்ளது. தேசத் துரோகச் சட்டங்களைப் பயன்படுத்தி தனக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது காந்தி சொன்னார் ‘சுரண்டல்காரகளைப் பாதுகாக்க அறிந்தோ அறியாமலோ இந்த அரசு வேசித்தனம் செய்கிறது’. பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை இந்தியாவின் நிலைமை காந்தி சொன்னபடியே இன்னமும் மாறாமல் இருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது.

Binayak Sen's conviction: a mockery of justice

On Jan 4, the day this issue of The Lancet went to press, Binayak Sen should have been celebrating his 61st birthday. Instead, found guilty of treason and sedition by a court in the central Indian state of Chhattisgarh, Sen is facing the bleak prospect of a life behind bars. It is an inhumane sentence for a committed humanitarian, whose life before his imprisonment was devoted to improving the health and welfare of some of the most marginalised and poverty-stricken people in India—the Adivasi. This work led to Sen becoming the first Indian recipient of the Jonathan Mann award for Global Health and Human Rights in 2008.

From the outset the charges against Sen reeked of political motivation—a reaction to Sen's tireless documentation of human rights abuse at the hands of the state. He was accused, on the flimsiest of evidence, of acting as a courier for the imprisoned Maoist leader Narayan Sanyal. The subsequent trial, spanning more than 3 years, was Kafkaesque. Its conclusion is a travesty.

Reaction to the ruling was swift, with the Indian press unanimous in their criticism of the court's decision. Amnesty International described Sen as a prisoner of conscience, while a statement signed by over 80 prominent academics worldwide decried the sentence as savagery. The Lancet adds its voice to this chorus of condemnation.

In April, 2009, we called for the Indian Government to intervene in the case, and ensure that justice be done. An injustice can still be overturned by India's supreme court. If it is not, the already profound damage done to India's credentials as an upholder of human rights will be damaged for years to come. Where the state failed to provide for its poorest citizens, Sen stepped in to give them health care and to champion their rights. His reward: to be convicted under a section of the penal code first introduced by the British to quell political dissent, and later used to convict Mahatma Ghandi. On his conviction, Ghandi argued that the administration of the law had been “prostituted consciously or unconsciously for the benefit of the exploiter”. The conviction of Binayak Sen shows that, in parts of modern India, precious little has changed.

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736%2811%2960003-2/fulltext

  • கருத்துக்கள உறவுகள்
  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மருத்துவர் பினாயக் சென்னை விடுவிக்க நோபல் பரிசு பெற்ற 40 அறிவியலாளர்கள் வேண்டுகோள்

தேசத் துரோகம் செய்ததாகவும், மார்க்சிய கொள்கையாளர் நாராயண் சன்யாலுக்கு உதவியதாகவும் குற்றம்சாற்றப்பட்டு, சட்டீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைப் போராளி பினாயக் சென்னை உடனடியாக பிணையில் விடுவிக்கக் கோரி நோபல் பரிசு பெற்ற 40 அறிவியலாளர்கள் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“தங்களுக்கு உதவிக்கொள்ள இயலாத மக்களுக்கு உதவ தன்னையே அர்பணித்துக்கொண்ட நிகரற்ற, துணிச்சல் மிகுந்த, சுயநலமற்ற மருத்துவர் பினாயக் சென்னை விடுவிக்கக் கோருகிறோம்” என்று 1965ஆம் ஆண்டு நோபர் பரிசு பெற்ற ஃபிரான்சின் பிரான்சுவா ஜாக்கப் முதல் 2009ஆம் ஆண்டு நோபர் விருது பெற்ற இந்தியரான முனைவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் வரை உலகின் 12 நாடுகளைச் சேர்ந்த 40 நோபல் பரிசு பெற்றவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“எங்களைப் போன்ற அறிவியலாளரான 61 வயதாகும் மருத்துவரும், மனித உரிமை போராளியுமான பினாயக் சென் கடந்த மாதம் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை அறிந்து ஏமாற்றும், ஆச்சரியமும் அடைந்தோம்.

இந்த வழக்கின் அடிப்படையில் 2008ஆம் ஆண்டு பினாயக் சென் சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது நாங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்காக நாங்கள் கூறியிருந்த நியாயத்தை பிறகு இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அவரை விடுவிக்க உத்தரவிட்டது. அவரை விடுவிக்கக் கோரி அப்போது நாங்கள் கோரிக்கை விடுத்த பல மாதங்களுக்குப் பிறகு எங்களின் சகாக்கள் சிலர், சட்டீஸ்கரில் அவர் பணியாற்றிய இடங்களுக்குச் சென்று அவர் ஆற்றிய சுயநலமற்ற அரும் பணிகளை கண்டு வியந்தனர். அந்த உண்மைகளை நேரில் அறிந்த பின்னரே, ராய்ப்பூர் சிறைச்சாலைக்குச் சென்று அவரை நாங்கள் சந்தித்து பேசினோம்.

இந்த நாட்டில் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள வகையற்ற மக்களுக்கு உதவ தன்னைத் தானே அர்பணித்துக்கொண்ட நிகரற்ற, துணிச்சலான, சுயலமற்ற மனிதர் பினாயக் சென். இதற்காக அவர் இரண்டு ஆண்டுக் காலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார், வேகமான நீதிமன்றம் அவர் வழக்கை விசாரிக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, அவர் தேசத் துரோகம் செய்துள்ளதாகக் கூறி, நியாயமற்ற முறையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1102/09/1110209050_1.htm

இந்தியாவுக்காக இலங்கை விடயத்தில் செயற்ப்பட்ட சர்வதேசம், முடிந்தால் இவரை விடுதலைசெய்யட்டும் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.