Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பாதுகாப்பு தினம்

Featured Replies

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் கலந்து கொள்ளாத அதேநேரம் இங்கு சிங்களத்திலேயே தேசிய கீதமும் பாடப்பட்டது.

2004 ஆம் ஆண்டு கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்ட நாளை தேசிய பாதுகாப்பு தினமாக நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது. முதன் முறையாக நேற்று யாழ்ப்பாணத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் அரச தரப்பு எம்.பிக்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலரிடம் வினவிய போது, தமக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாகவும் உரிய நேரத்தில் அவை கிடைக்காமையால் தங்களால் இதில் பங்கு கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்ததுடன் வேறு எந்தப் பிரச்சினையுமில்லை எனத் தெரிவித்தனர்.

சிலருக்கு அழைப்பிதழ்கள் கொழும்பிற்குச் சென்றுள்ளதாகவும் அழைப்பிதழ்களுடன் வருமாறு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்ததால் அது இல்லாமல் போக முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் நேற்றைய நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்திலேயே பாடப்பட்டது. யாழ்.மாணவிகள் இதைப் பாடியபோதும் அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பாட அனுமதிக்கப்படவில்லை.

வடக்கு கிழக்கில் தமிழ் மொழியிலே தேசிய கீதத்தை பாட அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ள போதும் அண்மைய அமைச்சரவைத் தீர்மானத்திற்கேற்ப நேற்றைய இந்த நிகழ்வில் சிங்களத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது.

இதேநேரம் நிகழ்வு நடைபெற்ற யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பாதுகாப்பு கெடுபிடி பெருமளவிலிருந்ததால் இந் நிகழ்வுக்குச் சென்ற உள்ளூர் ஊடகவியலாளர்கள் பெரும் தொல்லைகளுக்குள்ளானார்கள் யாழ்.மாவட்ட ஐ.தே.க.எம்.பி.விஜயகலா மகேஸ்வரனும் பலத்த கெடுபிடியின் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். பொது மக்களுக்கும் இதேநிலையே ஏற்பட்டது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=4214:2010-12-27-06-45-50&catid=74:jaffna&Itemid=102

  • தொடங்கியவர்

அடுத்த தேசிய பாதுகாப்பு தினம் 2011 டிசம்பர் 26 இல் மட்டக்களப்பில்

அடுத்த வருடத்திற்கான தேசிய பாதுகாப்புதின நிகழ்வுகள் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதாக அனர்த்த நிவாரணசேவைகள் அமைச்சர் மகிந்த சமரவீர உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்புதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கடல்கோள் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன,அனர்த்த முகாமைத்துவப் பிரதியமைச்சர் சுனில் விஜேசேகர,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,அஸ்வர் எம்.பி.,ஐ.தே.க.எம்.பி. விஜயகலா,பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் உட்பட இராணுவ அதிகாரிகள்,அரச அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

சிங்கள மொழியில் தேசியகீதம் பாடப்பட்டதுடன், ஜனாதிபதியை வாழ்த்தி பாடசாலை மாணவர்களால் சிங்களமொழியில் பாடலொன்றும் இசைக்கப்பட்டது.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன இங்கு பல நிமிடங்கள் தமிழில் உரையாற்றியதுடன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=4203:----2011--26--&catid=51:local&Itemid=85

வேம்படி, இந்து, இராம நாதன் கல்லூரி மானவர்களுக்கு சிங்கள மொழி மூலம் பயிற்சி கொடுத்து பாடப்பட்டது. இதில் பல பிள்ளைகள் விலகினாலும் கூட அவர்கள் மிரட்டபப்ட்டதாகவும் கூறப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.