Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளுக்கு பிராந்திய புலனாய்வாளர்கள் மீண்டும் புத்துயிர் கொடுப்பதன் பின்னணி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு பிராந்திய புலனாய்வாளர்கள் மீண்டும் புத்துயிர் கொடுப்பதன் பின்னணி என்ன?

* Monday, December 27, 2010, 15:51

2009 மே 19களில் விடுதலை புலி அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதாக அல்லது வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக அல்லது துடைத்து எறியப்பட்டதாக இலங்கை அரசு வெள்ளி விழாக்களை கொண்டாடியது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாரகன் மற்றும் அவரது தளபதிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக பெரும் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் படங்களுடன் பட்டியிட்டு இருந்தது. ஆரம்பத்தில் 17000 போராளிகள் சரணடந்தார்கள் என்று தொடங்கி இப்போது 9000 புலிகள் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதாக சொல்லி வருகின்றது.

சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்று முன்னுப் பின்னான தகவல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றது.விடுலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாரகன் மற்றும் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கை இந்தியாவிடம் இலங்கை கையளித்தாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட இழுபறியின் பின் ராஐீவ்காந்தியின் கொலை வழக்கில் இருந்து இருவரது பெயர்களும் நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பபை இந்திய சிபிஐயின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொண்டதாக 2010 ஒக்டோபர் 26ம் திகதிகளில் வெளியான இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இருந்தும் இவர்கள் இருவரினதும் பெயர்கள் ஏற்கனவே உயர் நீதிமன்றம் நீங்கியிருந்தது. இப்படி இருக்க விடுதலைப்புலிகளையும் அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களையும் மீண்டும் உயிர்தெழ வைப்பதற்கு இந்திய இலங்கை புலனாய்வு மட்டங்கள் செய்திகளை அவிழ்ந்துவிட ஆரம்பித்துள்ளன.

அண்மையில் இந்திய புலனாய்வு தரப்புக்கள் அந்நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி வெளிவிவகார அமைச்சர் சிதம்பரம் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை புலிகள் அமைப்பினர் கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். இப்போது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணைய தளமும் புதிய செய்தியொன்றை அவிழ்ந்துவிட்டுள்ளது. அண்மையில் கைதான ராவுத் இப்ராகிக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரனையில் புதிய தகவல்கள் வெளி வந்தாகவும் தெரிவித்துள்ளது. அதில் இறுதி யுத்தத்தில் தப்பி சென்றவர்கள் பெரும் தொகையான ஆயுதங்களை எடுத்துக் சென்றதாகவும் ராவுத் இப்ராகிமின் முக்கிய புள்ளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசானை மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவ்விசாரணையில் பொட்டு அம்மான் பற்றிய தகவல்கள்பெறும் நோக்கில் இந்திய புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் அவற்றின் விபரங்கள் வெளிவரவில்லை எனவும் புலிகளின் வலையமைப்பு பற்றிய தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தினை பார்த்தால் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டாதாக வெளியிட்ட வீரகாவியங்கள் செய்திகள் என்பவற்றை பார்வையிட முடியும். எனினும் சுவாரிஸ்யம் என்வென்றால் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செய்திகளை விமர்சித்து வந்த நம்வர்கள் இன்று வெளியாகியிருக்கும் செய்திகளை கண்டு மகிழ்ச்சியடைவது வருத்தத்திற்குரிய விடயமாகும். அதுகும் இலங்கை அரசாங்கதின் பாதுகாப்பு அமைச்சும் புலனாய்வு ஐம்பவான்களின் உள்நோக்கம் தெரியாது யாவற்றையும் வியாபாரமாக்கும் வேதனையே. உண்மையில் இலங்கை இந்திய மட்டங்களில் விடுதலைப்புலிகளை உயிர்பிக்க வைக்கும் பின்னணியில் உள்ளக, பிராந்திய, சர்வதேச அரசியல் இலங்குகள் என்ன என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.

இலங்கை அரசினால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தொடரப்பட்ட இறுதி யுத்தத்தில் 40000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் குற்றச்சாட்டுங்கள் வலுப்பெற்று வருகின்றன. இறுதியுத்தத்தில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட புலிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் போராளிகள் ஆதரவாளர்கள் என்று கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவதாகவும் சொல்லப்படுகின்றன. படையினரிடம் அகப்பட்ட பெண் போராளிகள் உட்பட பல பெண்கள் பாலியல் கொடுமைகளுக்குட்படுத்தி படுகொலை செய்யபட்டுள்ளனர். சனல் 4 உட்பட பல சர்வதேச ஊடகங்கள் காணொளிகளாவும், காட்சி படங்களாகவும் இலங்கை படையினர் யுத்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றன. இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினர் மேற்கொண்ட யுத்த குற்றங்களுக்கு சர்வதேச அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளினால் மீண்டும் மீண்டும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஏற்கனவே ஐ.நா செயலாளர் நாயகத்தினால் இலங்கையின் யுத்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவை இலங்கைக்குள் விடுவதில்லை என்ற அரசின் கொள்கையி் இருந்து விடுபட்டு உண்மையை கண்டறியும் குழுவை சந்திக்கலாம் என்ற சமிஞ்யை காட்டப்பட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் இராஐதந்திரத்தில் அடைந்த பெரும் தோல்வி என்று பங்காளி கட்சிகள் உடபட எதிர்கட்சிகள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன. தவிரவும் மஹிந்த ராஐபக்ஷவின் பிரித்தானிய பயணத்தின்போது அவருக்கு ஏற்பட்ட அதிஉச்ச நெருக்கடிகள் அவமதிப்புக்கள் நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்நோக்க கூடாத கரிபூசல்கள் என்பன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டு வரும் பாரிய அழுத்தங்களின் எதிரொலிகள் இந்தியாவிலும் கேட்கத் தொடங்கியுள்ளன. பெங்களூர் சென்ற அமைசர்கள் பெரும் நெருக்கடிகளை சந்திந்தி நாடு திரும்பு வேண்டி ஏற்பட்டது. பிரித்தானியாவில் உள்ள தமிழர்களால் இலங்கை ஐனாதிபதியை திருப்பி அனுப்ப முடியுமானால் தமிழகத்தின் 6 கோடி தமிழர்களால் ஏன் எதனை செய்ய முடியாது என்ற கேள்விகள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இவை பெருமெடுப்பில் இந்திய அரசியலில் தாக்கத்தினை ஏற்படுத்தாவிட்டாலும் சில சலசலப்புக்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை ஒருபுறமிருக்க உள்நாட்டில் புலி புச்சாண்டி காட்டி வந்த சிங்களத்தின் முகங்கள் கிழியத் தொடங்கியுள்ளன. போர் வெற்றி மூலம் தன்னை ஓர் அரசனாக காட்டி கொண்டு இருந்த மஹிந்த இன்று ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றது. அதன் ஒரு வெளிப்பாடு ஐனாதிபதியின் மூத்த சகோரர் சாமல் ராஐபக்ஸ அண்மையில் ஆற்றிய ஒன்றில் நாடு முன்னரை விட அழகாகவும் அமைதியாவும் இருப்பதாக தெரிவித்த அவர் மக்கள் வறுமையிலும் பொருட்களின் விலையேற்றத்தினால் தீண்டாடுவதாக மறைமுகமாக குத்தி காட்டியிருந்தார். இதன் மூலம் முதலாவது ஐனாதிபதி பதவியை பொறுப்பேற்ற போது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற மஹிந்தவின் சகோதரனே இன்று அவருக்கு எதிரான குற்றச்சாட்டை முன் வைக்கும் அளவுக்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது.

மஹிந்தவின் வாக்கு வங்கியின் முக்கிய நகரங்களில் இம்முறை வரவு செலவு திட்ட யோசனை படு தோல்யியடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் சரத் பொன்சேகாவை சிறையில் தள்ளி அனைத்து பதங்கங்களையும் பறிமுதல் செய்து அரசியல் பழி வாங்கும் மஹிந்த சகோதரர்களின் நடவடிக்கை தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. யுத்த மகா வீரனாக போற்றப்பட்டு இலங்கை வரலாற்றில் முதலாவது ரெனரலாக தாமே பதவியுயர்வு அளித்த சரத் பொன்சேக தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இராணுவ நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பு அரசியல் யாப்புக்கு உட்பட்டதா என்பதில் ஏற்கனவே முரண்பட்ட நீதியரசர்கள் சில தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கில் இருந்து விலகியுள்ளனர்.

இதனால் இப்போது ஐ.தே.கட்சியின் ஊடாக சரத் பொன்சேகாவுடன் ஒரு உடன்பாட்டுக்கு சென்று அவரை விடுவிக்கலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகின்றது.

ஐனாதிபதியின் இராண்டாம் தவணை பதவி ஏற்பின் பின்னர் இவ்வாறான தொடர் தோல்விகளை சந்திக்கும் மஹிந்த கட்சியின் உள் முரண்பாடுகளினாலும் குடும்ப முரண்பாடுகளாலும் சிக்கித் தவிக்கின்றார். மஹிந்தவின் அரசியல் முகம் என்று வர்ணிக்கப்பட்ட இளைய சகோதரர் பசில் ராஐபக்ஸவுக்கும் மகன் நாமல் ராஐபக்ஸவுக்கும் தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடு அதிகரித்துச் செல்கின்றது. கடந்த வரவு செலவு திட்டத்தின் போதும் துறைமுக திறப்புவிழாவின் போது ஹம்பாந்தோட்டைக்கும் பசில் ராஐபக்ஸ சமூகம் அளித்திருக்கவில்லை. கேட்டால் அமெரிக்கா சென்றதாக கூறினார்களாம். ஆனால் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் அனைவரும் சமூகம் அளித்திருக்க வேண்டும் என்று ஐனாதிபதி தனது கட்சிக்கு உத்தரவு இட்டு இருந்தார். அதுமட்டுமன்றி பசில் ராஐபக்ஸவின் அமைச்சிலும் அவரது திணைக்களங்களிலும் நாமலின் நீலப்படையனியினர் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இலங்கையின் அரச. தனியார் ஊடகங்கள் யாவும் நாமலின் உத்தரவுக்கு கட்டுப்படுகின்றன. இதனால் பசில் கடும் கோபம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் ஆளும் கட்சியின் சில முக்கிய அமைச்சர்களுடன் இணைந்து பசில் ரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார் எனவும் சிறீலங்கா சுகந்திர கட்சியின் தலைமை பதவியில் இருந்து மஹிந்தவை தூக்குவதுமே இவர்களது குறிக்கோளாக உள்ளது. இன்னொரு பக்கம் மஹிந்தவுக்கும் நாமலுக்கும் நெருக்கமான துமித்த சில்வா மற்றும் முன்னாள் சபாநாயகரின் மகன் ஆகியோர் கோத்தபாயவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து திணைக்களங்களையும் மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் விமல் வீரவன்சவின் அமைச்சும் விதிவிலக்கல்ல. இதனாலும் விமல் வீரவன்சவும் ஆத்திரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தொடரும் குடும்ப நெருக்கடிகளுடன் ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சர்கள் சிலர் ஐனாதிபதி மீது அவநம்பிக்கை கொண்டுள்ளமை இன்னும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் பிரச்சினைக்கு முகம் வேண்டிய நிலமைக்குள்ளாகிய மஹிந்தவுக்கு ஐ.தே.கட்சியின் உடக்கட்சி பூசல் முடிவுக்கு வந்தமை பேரடியாக அமைந்துள்ளது. கட்சியின் யாப்பு நிறைவேற்றப்பட்டமை, மக்களின் ஆதரவு பெற்று வரும் சயித் பிரேமதாச பெடும் தலையிடாக உள்ளன. இதனால் தனது மகனை நாட்டு தலைவராக்கும் கனவு தகர்த்துவிடுமோ என்ற அவரின் அச்சம் அவரை தொடர்கின்றது.

தன்னை ஒரு அரசன் போல் காட்டிக்கொண்டு திரித் மஹிந்தருக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் எதிர்பலைகள் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. இதனால் தான் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டதாக கொக்கரித்த மஹிந்த மீண்டும் புத்துயிர் கொடுத்து அதுவும் மேற்குலகின் பரம எதிரியான இஸ்லாமிய அடிப்படையவாதிகள் இயக்கங்கள் பாதாள உலக குழுக்கள் என்பவற்றுடன் தொடர்புடுத்து மீண்டும் ஒரு அரசியல் கபட நாடகத்தை நடத்த இலங்கையின் புலனாய்வு தரப்பு பிராந்திய ரீதியான கூட்டு சதி முயற்சிகளை எடுத்துள்ளது என்பதே இன்றை உண்மை நிலவரமாகும்.

http://www.tamilthai.com/?p=7557

தம் மீது திரும்பக் கூடிய போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப இந்திய பயங்கரவாதிகள் செய்யும் தந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.