Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரும்பிராயில் மீண்டும் பயங்கரம் ஓர் இளைஞர் பட்டப்பகலில் கடத்தல்

Featured Replies

யாழ். உரும்பிராய் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உரும்பிராய் மூன்று கோயில் வீதிப் பகுதியில் நேற்றுக் காலை 8.15 மணியளவில் சைக்கிளில் பயணம் செய்த குறித்த இளைஞரைப் பின் தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர்கள் கடத்திச் செல்ல முற்படுகையில் சைக்கிளை விட்டு ஓட முற்பட்ட போதும் கடத்தல்காரர்கள் குறித்த நபரை கடத்திச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் நின்ற வயோதிபர் அருகில் இருந்த இராணுவத்தினருக்குத் இச் சம்பவம் தொடர்பாகத் தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் அப்பகுதியில் இருந்த சைக்கிளையும் செருப்பையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இப் பகுதியிலேயே வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்பின்னர் 4 நாட்களின் பின்னர் இச் சம்பவம் இடம்பெற்றது அப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் தேடுதலையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Eelanatham

யாழ்ப்பாணத்தில் பெண் கடத்தப்பட்டதாக புகார்

யாழ்ப்பாணத்தில் 46 வயதான பெண்ணொருவர் இன்று கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி அல்வாய் கிழக்கைச் சேர்ந்த சேர்ந்த யோகநாதன் புஷ்பாதேவி எனும் இப்பெண், இன்று மாலை 6.45 மணியளவில் வீட்டிலிருந்த வேளை வாகனமொன்றில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/14067-2010-12-31-15-57-40.html

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போவோர், கடத்தி கொலை செய்யப்படுவோர் திகதி வாரியாக ஆவணப்படுத்தப்பட்டு சர்வதேச மன்னிப்பு சபை, ஐ.நா போன்றவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.இவர்கள் தான் புலிகள் மக்களை கொல்கிறார்கள் என்று ஒரு பக்க சார்பாக அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தவர்கள்.இப்போ புலிகள் இல்லாத போது என்ன சொல்லப்போகிறார்கள் என பார்ப்போம்.

paulsath129.jpg

... சிறிலங்கா அரசுடன் நெருக்கிய உறவுகளை வைத்திருப்பவர்/ சிறிலங்கா புலனாய்வுத்துறையுனருடன் நெருங்கி செயற்படுபவர் என்று நம்பப்படும்/கூறப்படும் ... யாழ் உரும்பிராயை பிறப்பிடமாக கொண்டவருமான லண்டன் ஈஸ்ராம் கவுன்ஸிலர் போல் சத்தியநேசன் ... இக்கடத்தல் சம்பந்தமாக சிறிலங்கா அரசு/சிறிலங்கா புலனாய்வுத்துறையுனருடன் தொடர்பு கொண்டு ... இக்கடத்தப்பட்ட இளைஞனின் விடுதலைக்கு உதவ வேண்டும்?????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.