Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தி திணிப்பை எதிர்த்த கருணாநிதி, அந்நிய மொழிகளை திணிக்கும் துரோகியாக மாறியது ஏன்? சிறுபான்மையர் சீற்றம்

Featured Replies

சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப் பெண்கள் இடம்பெறும்’’ என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

‘சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ மாநாட்டுக் கோரிக்கைகளை ஏற்று, இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

‘‘தேர்தல் நெருங்கி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை யார் பறிப்பது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே போட்டி. இதன் அடிப்படையிலேயே இப்படியொரு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்’’ என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளது தமிழர் களம் அமைப்பு.

அதன் மாநில அமைப்பாளர் அரிமா வளவனிடம் பேசினோம்.

‘‘தமிழ்நாட்டை திராவிட நாடாக மாற்றிய கருணாநிதி தலைமையிலான தி.மு.க., தமிழ் மொழி அழிப்பில் ஈடுபட்டுள்ளது. அன்னிய மொழிகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதன் வாயிலாக தமிழ்மொழி மேலும் புறக்கணிக்கப்பட்டு அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்படும். கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் 2 கோடித் தமிழர்கள் இருக்கின்றனர்.

ஆனால், படிப்படியாக அங்கிருந்த தமிழ்ப் பள்ளிகளை மூடிவிட்டனர். அங்கெல்லாம் தமிழர்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு முற்றாக அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், தமிழ்நாட்டின் நிலையோ தலைகீழ். இங்கு தமிழில் படிக்காமலேயே ஒருவர் பட்டம் பெற்றுவிடலாம். உச்ச நீதிமன்றப் பரிந்துரையான தொடக்கக் க ல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பது தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.

திராவிடம் என்ற பெயரில் தமிழர்களின் நலனை கருணாநிதி குழி தோண்டிப் புதைக்கிறார். அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளி ட்ட திராவிடக் கட்சிகளில் தமிழர்கள் அல்லாதவர்கள் நிறையப் பேர் இருப்பதால் கருணாநிதியின் இந்த அறிவிப்பை எதிர்க்கத் தயங்குகின்றனர்’’ என்றார் அவர்.

கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு எதிராகப் போராடி வரும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் பேத்தியும், ஆய்வாளருமான தி.பரமேஸ்வரியிடம் பேசினோம்.

‘‘முதல்வரின் இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையினர் இனி ஒரு பாடமாகக் கூடத் தமிழைப் படிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இ ருந்துகொண்டு, தமிழகத்தின் வளங்களில் வாழ்ந்துகொண்டு அவரவர் தாய்மொழியில் படிக்கலாம். பாகுபாடின்றிப் பழகும் மாணவப் பருவத்திலேயே அவர்களுக்குள் மொழி, இனப் பிரிவினைகளைத் தூண்டி, பிரிவினைச் சக்திகள் குளிர் காய்வதற்கும் இத்திட்டம் மறைமுகமாக வழியேற்படுத்திக் கொடுக்கிறது.

தமிழகத்தில் இன்று தனியார் பள்ளிகள் தமிழர்களைச் சுரண்டுமளவுக்கு வளம் கொழிக்கச் செய்ததுடன், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் புற்றீசல் போல, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ் இன உணர்வை, மொழி உணர்வை மழுங்கச் செய்து விட்டார்கள். தமிழை, தாங்கள் ஆட்சிக்கு வரு வதற்கான பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திராவிடக் கட்சிகளின் தந்திரங்களில் இதுவும் ஒன்று’’ என்றார், சற்று ஆவேசமாக.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வரும் எழுத்தாளர் யுவபாரதியிடம் பேசினோம்.

‘‘தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் ஆகியோருக்கு இன்றும் அவரவர் தாய்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தொடரும் என்று கருணாநிதி அறிவித்திருப்பது தமிழுக்குச் செய்யும் துரோகம். தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற பலரும் வேலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

மேனிலை வகுப்புகளில் தமிழ் மொழிப் பாடமே வாரத்தில் நான்கு பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இனி, அதே அளவில் பிற மொழிப்பாடமும் கற்பிக்கப்படப் போகிறது. தமிழகத்தில் உள்ள தெலுங்கர்களும், கன்னடர்களும் வீட்டில் தங்கள் தாய்மொழியிலும், வெளியிடங்களில் மட்டும் தமிழிலும் பேசுகி ன்றனர். திராவிட இயக்கங்கள் தங்கள் அரசியலுக்காக வேற்று மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்தால் தமிழ்நாட்டில் தமிழின ஒற்றுமை குறையும்’’ என்று எச்சரிக்கிறார், இவர்.

இதுகுறித்து, நாம் தமிழர் இயக்கத் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானிடம் கேட்டபோது,

‘‘சமச்சீர் கல்வி முறையால் தமிழ் வழிக் கல்வி அமலுக்கு வரும் என்ற மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டுவிட்டார் கலைஞர். தமிழ் மொழிக்கும, தமிழினத் துக்கும் அவர் செய்யும் துரோகம் இது. இவர்கள் திராவிடர்கள் என்று சுட்டிக் காட்டும் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தமிழ் பாடமொழியாகக் கூட கற்றுத் தரப்படுவதில்லை. நீலகிரியில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மலையாளத்திலேயே பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், அன்னிய மொழியை தமிழ்நாட்டில் புகுத்துவது திராவிட அரசியலின் சூழ்ச்சி. தமிழர்களிடம் இழந்துவிட்ட தம் செல்வாக்கை, பிற மொழியாளர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் ஈடுகட்ட முயல்கிறார். இந்த அறிவிப்பை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் போராட்டங்கள் நடத்தும்’’ என்றார் அவர்.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறையின் கருத்தறிய முயன்றோம். அங்குள்ள அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=22782#

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

அரியணையிலிருக்கும் ஈனம் ஈழத்தையும், தமிழையும் இறக்கவிட்டுதான் இறங்(க்)குமோ..? கொடுமை..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.