Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனி செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெதர்லாந்தில் ஒரு வயோதிபருக்கு கண்ணில் சந்திரசிகிச்சை செய்யப்பட்டது மற்றக்கண்ணில் செய்வதற்காக திகதியை எதிர்பார்த்து கொண்டிருந்தார் ஆனால் அவரைப்பிடித்து நமது நாட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்? இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் மனிதாபத்தை மதிப்பதில்லை ஆனால் தங்களுக்கு எதிரான நாடுகளில் மனித உரிமை மீளப்படுகின்றது என்று கூச்சலிடப்படுகின்றது

  • Replies 172
  • Views 24.8k
  • Created
  • Last Reply

என்னொடு பழகிய ஜேர்மன் நண்பர்கள் சிலர் ஜேர்மனி ப்பொருடகள் பற்றியோ அல்லது ஜேர்மனி பற்றியோ உயர்வாய் சொல்வதை மறுதலிப்பதை அவதானித்துள்ளேன். ஏன் அவ்வாறு, ஓரு சிலர் தான் அப்படியா அல்லது எல்லா ஜேர்மனியரும் அப்படியா?

இது சின்ன சம்பவம் தான் ஆனால் அவர்களது தொனி

தமது நாட்டின் மீது குறை சொல்லும் பாணியில் இருந்தது.

சமையலின் போது எதொ கதையில் எமது நாட்டில் ஜேர்மன் கத்திகள் நல்லது என்பார்கள் என்றேன். உடனடியாக கிடைத்த பதில் சும்மா பேர் தான் அப்படி ஏதுமில்லை என்றார்கள்.

பின் வேறொருவருடன் கதைக்கும் போது இணைய பக்கங்கள் பற்றி கதை வரும் போது தமது இணைய தளங்கள் ஒன்றும் அவ்வளவு நல்லவை அல்ல என்றார்கள்.

குளக்காட்டன் அவர்களே உங்கள் நண்பர்கள் என நீங்கள் கூறியவர்கள் ஜேர்மானியரா...... அல்லது இலங்கையரா......? :roll: :roll:

தமிழீழம் கிடைத்தால் தமிழீழத்தில் வாழ கசக்குமா?

ஏற்றுக்கொள்கிறோம் பிருந்தன் யாருக்கு தான் கசக்கும் தாயகம்..... என்னைப்பொறுத்த மட்டில் நான் ஜேர்மனிக்கு உழைக்கவே வந்தேன். என்னைப் போய் தமிழீழத்தில் இரு என்றால் நான் அங்கு போய் என்ன பிச்சையா எடுப்பது? ஒவ்வொரு தடவையும் நான் இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு கிளம்பும் போது எனது மனம் மிக வேதனையடையும் ஆனாலும்........ இங்கு வந்தால் தானே பணம் அதனால் மனதை இறுக்கிக் கொண்டு விமானத்தில் ஏறுவேன்.

பென்ஸ் காரை யாரவது கூடாது என்று சொன்னவையா

பி.எம்.டபிள்யு வை கூடாது என்று சொன்னவையா?

கூடாதவையத் தான் கூடாது என்று சொல்லியிருப்பினம்..

ஒரு வேளை கூடாது என்று அவர்கள் நினைப்பதால் அது

கூடாதவையாக போயிருக்கும்.. உண்மையான கூடாதவையையும்

இதில் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுவதால் இனிமேல்

யாரும் கூடாததை கூடாதென்று சொல்லக்கூடாது...

(கூடாது கூடாது என்று 3 தடவைகளுக்கு மேல் கூறியதால்

நான் நிகழ்ச்சியில் இருந்து நீங்கிக் கொள்கிறேன்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பகம் ஐயாவிடம் பயிற்சி எடுத்தியளா வசி. :roll: :roll:

ஆகா வந்தேளா என்ன கன நாள் காணலை.

குளக்காட்டன் அவர்களே உங்கள் நண்பர்கள் என நீங்கள் கூறியவர்கள் ஜேர்மானியரா...... அல்லது இலங்கையரா......? :roll: :roll:

ஜேர்மனியர். இலங்கையரை நான் ஜேர்மனியர் என்று குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

எற்கனவே கடந்த 3-4 வருடங்களாய் உள்ள பொருளாதார மந்த நிலையால் வந்தேறுகுடிகள் மீது கருணைப்பார்வை குறைந்திருந்தது. தமது சொந்த நாட்டில் வேலை இன்றி அவதிப்படும் போது அபயம் கேட்டு வந்தவர்கள் நல்ல நிலையில் இருபதைபாக்கும் போது வரும் சில எண்ணங்கள் தவிர்க்கமுடியாதவை தான்.

அதற்கும் மேலாக சாதாரண மக்கள் மத்தியில் வெறுப்பேற்றும் வகையில் வெட்டுக் கொத்து, சுடு, கள்ளமட்டை, சுகாதரம், வேலை அற்றோர் உதவிப்பண துஸ்பிரயோகம் போன்ற செய்திகள் நிலமையை இன்னும் மோசமக்கும்.

போதாக்குறைக்கு தாடிக்காரர் கடவுளின்ற பெயரில குண்டுவைக்கிறான்கள்.

நீங்கள் அவர்களின் நிலமையில் இருந்தால் இந்தளவு பொறுமையாவதுகாப்பீர்களா?

போதாக்குறைக்கு தாடிக்காரர் கடவுளின்ற பெயரில குண்டுவைக்கிறான்கள்.

நீங்கள் அவர்களின் நிலமையில் இருந்தால் இந்தளவு பொறுமையாவதுகாப்பீர்களா?

யாரய்யா அந்த தாடிக்காரர்? ஓசாமாவா? அவரின் ஒசிலியா?

தமிழர்கள் நாடு கடத்தலைக் கண்டித்து ஜேர்மனியில் 30 ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்

நன்றி=புதினம்

ஜேர்மனிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை (30.08.05) மாலை 6.15 மணிக்கு பிறேமன் மார்க்பிளட்சில் (Markt Platz) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

சிறிலங்கா அரசால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வேளையிலும் அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களில் 150-க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பியதைக் கண்டித்தும்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு சிறிலங்கா அரசுக்கு ஜேர்மனிய அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியும்

சிறிலங்கா அரச படைகளால் அப்பாவித் தமிழ் மக்கள் கைதுசெய்வதை நிறுத்த அழுத்தம் கொடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தேர்தல் பரப்புரைக்கு பிறேமன் நகரத்திற்கு வருகை தரும் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சரிடம் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்.

இப்போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களும் அணிதிரளுமாறு பிறேமன் நகர அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

:arrow: :arrow: :arrow: இங்கு Bremen நகருக்குரிய வரை படத்தினை நீங்கள் பார்வையிடலாம் அல்லது இங்கு Mrktplatz ஐ பார்வையிடலாம்

இங்கே சொடுக்குங்கள் :arrow: :arrow: :arrow: **********

ஜேர்மனியின் வரைபடம்

d3ig.jpg

இப்படி முன்பும் ஒருதடவை ஆர்ப்பாட்டம்

செய்தார்கள் தானே??

இப்படி முன்பும் ஒருதடவை ஆர்ப்பாட்டம்

செய்தார்கள் தானே??

அடாது மழை பெய்தாலும் விடாது படிப்பு நடக்கும் என்ற மாதிரித்தான் இவர்களின் செயல். நாம் என்ன...... இங்கு நாடுகடத்தலுக்காக சிறைவைக்கப்பட்ட எத்தனை தமிழர்கள் தற்கொலை செய்திருப்பார்கள். அதன் பின்பும் இவர்கள் மிருகத்தனமாக நாடு கடத்தியவண்னம் உள்ளனர்.

இதனால் தான் சென்ற கிழமை நாடுகடத்தும் போது 50 பச்சை உடை அணிந்த, ஆயுதம் தரித்த காவல்த்துறை எல்லைக்காப்பு படையினர் ( Bundesgerenzschuetzt ) காவல் கடமைக்காக விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனராம். ஏனெனில் தமிழர்கள் விமானத்தில் ஏதும் கலகத்தில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம் தானாம் காரணம். :oops: :oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற வாரம் ஜேர்மணியின் புளுடா என்ற இடத்தில் பெண் ஒருவரை சகஊழியரால் உடுப்பு காயப்பண்ணும் மெசினுக்குள் தள்ளி இயந்திரத்தை இயக்கிவிட்டார் என்றாலும் சமயோசதமாய் அப்பெண் முழங்கையால் கதவைத்திறந்து வெளியேவந்துவிட்டார்

1.50 மீற்றர் உயரமான அப்பெண் இச்சம்பவத்தின்பின் தொடர்ந்து வேலைசெய்தார் ஆனால் அவரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவதைக்கண்டு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுசோதனை செய்த பொழுது அவரின் ஒரு எலும்பு முறிவடைந்துள்ளதையும் மூளையில் சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் அறியமுடிந்தது

முந்தி அனுப்பபோறான்கள் என்று துடிச்ச கனபோ் குடி யும் குடித்தனமா நஸனலிற்றியுமே செட்டிலாய் போட்டினம்.. மற்ற சனங்களைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கினம். ஒருக்கா பேச்சு்கு சொல்லிப்பாருங்கோ நஸனிலிற்றி்காரற்ரை பாஸ்போர்ட்டையும் பறிச்சுப்போட்டு ஏத்தப்போறங்களென்று...அப்ப தான் சுடு தண்ணி குடிச்ச நாய் மாதிரி திரிவினை..

சரியாய்ச் சொன்னீர்கள் சோலியன்

அண்மையில் 35 குடும்பங்களை சேர்ந்த சுமார் 150 பேர் வரையில் ஜேர்மன் அரசால் விஷேட விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு நாடுகடத்தப்பட்டதை நாங்கள் முதலிலே உங்களுக்கு தந்திருந்தோம். மேலதிக செய்தியொன்று அந்த விமானத்திலே தமிழ் பெண்ணொருவர் குழந்தை பெற்றெடுத்த அடுத்த நாட்களிலேயே மனிதாபிமானமற்ற முறையிலே நாடுகடத்தப்பட்டுள்ளார். இவர்களை பண்டார நாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கிவிட்டு ஒவ்வொருவருக்கும் தலா 100 யூரோக்களை கொடுத்துவிட்டு நன்றி வணக்கம் சொல்லிவிட்டு பின்னர் விமானத்திலே நோய் மிக மோசமடைந்த தமிழர்கள் சிலரை மீண்டும் ஜேர்மனிக்கு திருப்பி கொண்டுவந்துள்ளனர்.

தகவலுக்கு நன்றி.

ம்.. ஆர்ப்பாட்டத்திலே என்னால் கலந்துகொள்ள இயலாவிட்டாலும், எனது மனைவியும் பிள்ளைகளும் கலந்துகொண்டார்கள். அவர்களது கருத்துப்படி, அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இருபதிற்குள்தான் என்பதை அறியக்கூடியதாக இருந்தது. பங்குபற்றியவர்களில் பதினைந்திற்கும் மேற்பட்டோர் இந்த நாட்டு பிரஜைகளாகவும்.. காலவரையற்ற விசா வைத்திருப்போருமே என்பது குறிப்பிடத்தக்கது.

பிறேமன் நகரிலேயே ஆகக் குறைந்தது நூறு தமிழராவது 'டுல்டுங்' எனப்படும் தற்காலிக விசாக்களுடன், சட்டப்படி வேலை செய்யவும் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களோ ஐந்திற்கும் குறைவானவர்களே.. ஏனெனில் அதிலேயும் இருவர் சிங்கள இனத்தவர்கள்.

ஆக, இப்படி திருப்பி அனுப்புதலை எதிர்பார்ப்போரும், அவர்களுக்காக மனமுருகி உணர்ச்சிவசப்படுபவர்களும்.. நல்ல விசாக்களுடனும் இந்நாட்டுப் புத்தகங்களுடனும் உள்ள தமிழரைக் குற்றஞ் சொல்லியவாறே.. தமது இருப்புகளுக்கான வழிகளை இருட்டாக்குவதிலேயே கவனமாக இருக்கப் போகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது!! :P :idea:

தற்காலிமான நிரந்தரமற்ற விசாவுடன் உள்ளவர்களே ஒரு நாள் சம்பளத்திற்காகவோ அல்லது வேறு பல காரணங்களுக்காகவோ ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தால் அதன் பின்பு மற்றவர்களை குறை சொல்லி பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிய புதுதமிழர்கள் இப்படியான கூட்டங்களுக்கு எல்லாம் வரமாட்டார்கள்.. கோயில் தேர், திருமணவீடு, எண்டல் வருவார்கள்.. இப்ப அவர்களின் குறிக்கோள் என்ன தெரியுமா, பிள்ளைகளுக்கு 18,19 வயதிலேயே நல்ல காட், வீடு, பணம் உள்ள பையனா கட்டிகொடுத்துட்டு தாங்கள் நிம்மதியா வாழுவம், மற்றயவர்களை பற்றிய கவலை எதுக்கு எண்டு வாழுகிறார்கள்.. :evil: :evil:

புது தமிழர் என்றால் என்ன டன் அண்ணா? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புது தமிழர் என்றால் என்ன டன் அண்ணா? :roll:

அதுவா மைடியர் லிட்டில் போய் அதாவது நம்மளை போல நக்....ற கூட்டம் யார் எப்படி போனால் என்ன என்று வாழுற கூட்டம் இப்ப பாரும் நம்மட தலை அன்ட் சங்...கரி கருங்குரங்கு கூடவே நான் நாங்கள் தொடர்ந்து நக்.....ம் அதப்போலத்தான் இதுவும் நமக்கு வேண்டியது எல்லாம் .......

தலை எனக்கு ஆப்கான் நசினாலிட்டி வரப்போகுது

  • 2 weeks later...

ஜெர்மனியத் தேர்தலில் உச்சக்கட்டப் பிரச்சாரம்

_40807382_merkel-ap203i.jpg

ஜெர்மனியின் முதல் பெண் சான்சல்லராக வர நினைக்கும் பழமைவாத தலைவர் ஏஞ்சலா மெர்கெல்

ஜெர்மனியில் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் தலைநகர் பெர்லினில் பெரிய பேரணிகள் பல நடந்துள்ளன.

ஆனால் போட்டி மிகமிக உக்கிரமாக இருப்பதால் வழமைக்கு மாறாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் வரையில் பிரச்சாரத்தை தொடரப்போவதாக கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஜெர்மனியின் முதல் பெண் சான்சல்லராக வர நினைக்கும் பழமைவாத தலைவர் ஏஞ்சலா மெர்கெல், ஒரு மிகப் பெரிய சர்க்கஸ் கொட்டகையில் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார்.

இந்த கொட்டகையில் வழக்கமாக இசை நிகழ்ச்சிகளும் விழாக்களும்தான் நடக்கும்.

இவரது கிருத்துவ ஜனநாயகக் கட்சிதான் தேர்தலில் மிகப் பெரிய கட்சியாக வரும் என்று கருத்து கணிப்புகள் காட்டுகின்றன.

ஆனாலும் தற்போதைய சான்சல்லர் கெர்ஹார்ட் ஷ்ரோடரின் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியும் ஆதரவை அதிகமாக்கி போட்டியில் இருகட்சிகள் இடையிலான இடைவெளியை குறைத்து வருகிறது.

BBC Tamil

ஜேர்மனியில் வசிக்கும் கள உறவுகள் தேர்தல் குறித்த செய்திகளை தமிழில் தாருங்களேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.