Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடா நாட்டு நிலவரம்: தூங்குகின்ற புலிகளை தட்டியெழுப்பும் - ரணில்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்கள் மீண்டுமொரு பயங்கரவாதம் நாட்டில் தலைதூக்க ஏதுவாக அமைவதோடு, சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகும் என்று ஐ.தே.க. எச்சரிக்கை விடுக்கின்றது.

தூங்கிக் கொண்டிருக்கும் விடுதலை புலிகளை அரசாங்கம் தட்டியெழுப்புவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டுகின்றது. கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐ. தே. கவின் தவிசாளரும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான காமினி ஜயவிக்ரம பெரேரா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஆட்கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகளென யாழ். குடாநாட்டில் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஒரு பயங்கரமான அசாதாரணமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எனவே நிலைமை எந்தளவுக்கு மோசமானதென்பதை நாம் இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

அரசியல்வாதிகளை சார்ந்த குழுக்களே ஆட்கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது வடக்கில் மட்டுமல்ல தென்பகுதியிலும் அதிகரித்துச் செல்கிறது. எனவே இச் சம்பவங்களிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இதனை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படா விட்டால் அது நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க ஏதுவாக அமையும்.

அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் புலியை மீண்டும் அரசாங்கம் தட்டி எழுப்புவதாக அமைந்து விடும்.நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இனப்பாகுபாடு இருக்குமானால் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

அன்று எமது கடவுச் சீட்டில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என இனங்கள் பதிவுச் செய்யப்பட்டன. இதனை ஐ. தே. கவின் ஆட்சியில் இல்லாதொழித்தோம். ஸ்ரீ லங்கன் (இலங்கையர்) எனக் குறிப்பிடப்படுவதை சட்டமாக்கினோம்.

எனவே இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி வடபகுதி சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கா விட்டால் சர்வதேச ரீதியிலான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அத்தோடு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும்.

ஐ. தே. கட்சியின் பலம்

எமது கட்சி இன்று ஒன்றுபட்டுள்ளதால் அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தொகுதிவாரி முறைமையில் நடத்துவதற்கு அச்சம் கொண்டுள்ளது. எனவே தான் உள்ளூராட்சி தேர்தல் மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றுவதை தாமதமாக்கி விகிதாசார முறைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தவுள்ளது.

நாடு சீரழியும்

உல்லாசப் பயணத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக சூதாட்டங்களுக்கும் களியாட்டங்களுக்கும் அரசாங்கம் இடமளித்துள்ளது. தாய்வானிலும் இதேபோன்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

இறுதியில் அந்நாடு சீரழிவுற்றது. இலங்கை பௌத்த நாடு, கலை கலாசார பாரம்பரிய விழுமியங்களைக் கொண்ட நாடு .எனவே உல்லாசப் பிரயாணத்துறை அபிவிருத்திக்காக அரசாங்கம் நாட்டை சீரழிக்கக் கூடாது.

Virakesari

நாட்டில் இப்ப இடம்பெறுவதுதான் பயங்கரவாதம், ரணில் ஐயா அவர்களே!

அநிதீ தலைவிரித்து ஆடும் போது ஏன் தலைவா புலிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள் என்று சொல்கிறீர்கள் ? அவர்கள் பயங்கரவாதிகள் என்று உலகம் முழுவதும் சொல்லி வைத்திருக்கின்றீர்கள் , மறந்துவிடாதீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.