Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்க பான்கிமூனிடம் உரித்திரகுமார் கோரிக்கை!

Featured Replies

Jan

08

ஐ.நா.நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்க பான்கிமூனிடம் உரித்திரகுமார் கோரிக்கை!

Posted in : eelam news | Posted by : Admin

thumbnail_20110108155725.jpg

அண்மையில் இடம்பெற்ற வன்செயல்கள் உட்பட, போரின் பின்னர் இடம்பெற்ற வன்செயல்கள் பற்றிய விசாரணைகளையும் உள்ளடக்கியதாக ஐ.நா.நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு வி. ருத்ரகுமாரன் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை:

சிறிலங்கா நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் கோரப்பட்டுள்ளார் - அண்மையில் இடம்பெற்ற கொலைகளையும் ஆட்கடத்தல்களையும் காரணமாக தெரிவித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!

அண்மையில் இடம்பெற்ற வன்செயல்கள் உட்பட, போரின் பின்னர் இடம்பெற்ற வன்செயல்கள் பற்றிய விசாரணைகளையும் உள்ளடக்கியதாக செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் சட்டவரையறையை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமைச்சர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும், ஆட்கடத்தல்களையும் காரணம் காட்டி, தமது தாயகபூமியில் வாழும் தமிழ்மக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் கட்டமைப்பு ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகம் உருவாக்க வேண்டும் என்றும் கோரி செயலாளர் நாயகத்துக்கு திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

போர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே ஓய்ந்துவிட்ட போதிலும் தமிழ் பொதுமக்களுக்கு எதிரான வன்செயல்கள் தொடர்ந்து வருவதும், கடந்த சில வாரங்களாக அவை வேகமாக அதிகரித்து வருவதும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

முழுமையாக பெரும்பான்மை இன சிங்களவரைக்கொண்ட சிறிலங்கா அரசின் இராணுவம், தீவின் வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் நிரம்பியுள்ளதோடு, ஆயுதம் தாங்கிய அரசின் தமிழ் துணைக் குழுக்களுக்கு பின் புலமாகவும் இருந்து வருகின்றது.

இராணுவக்காவல் மிகவும் இறுக்கமாக உள்ளநிலையில், இராணுவத்திற்கு தெரியாமலும், இராணுவ உதவியில்லாமலும் இவ்வாறான வன்செயல்கள் இடம்பெறுவது என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

ஆயுதம் தாங்கிய அரசின் தமிழ் துணைக் குழுக்களுக்களும் சிறிலங்கா இராணுவமும் முற்றிலும் சட்டவிதிவிலக்கு உடையவைகளாக எந்தக்காலத்திலும் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படாதவைகளாகவும் இருக்கின்றன.

அண்மைக்காலத்தில் அதிகரித்துவரும் வன்செயல்களின் விளைவாக இளைஞர் ஒருவரின் தலை வெட்டப்பட்டும், போரில் இறந்தவர்களுக்கு கிரியை செய்ததற்காக இந்து பூசகர் ஒருவர் கொல்லப்பட்டும், சிறிலங்கா தேசியகீதத்தை சிங்களத்தில் பாடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதை பற்றி முறையிட்டதற்காக கல்விப்பணிப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டும், சுற்றுச்சூழல்வாதி ஒருவர் கொல்லப்பட்டும், ஆசிரியர் ஒருவர் காணாமல் போயும், ஆறு பிள்ளைகளின் தாயார் ஒருவர் கடத்தப்பட்டும், இவ்வாறான பல வன்செயல்கள் தொடர்ந்த வண்ணமும் உள்ளன. இங்கு பாதிப்புற்ற அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவது பற்றியும், கடத்தப்படுவது பற்றியும் அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வாறான பயங்கரவாத சூழலிலேயே அங்கு தமிழர்கள் தமது தாயகபூமியில் வாழ்கிறார்கள். இந்த கொலைகள் இராணுவத்தாலோ அல்லது ஆயுதம் தாங்கிய அரசின் தமிழ் துணைக் குழுக்களுக்களலோ எழுந்தமானமாக செய்யப்படுபவை அல்ல இவை தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க திட்டமிட்டு செய்யப்படும் பயங்கரவாத செயல்கள்.

அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் கொலைகளை, சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் அவை பொருந்தும் சூழலை வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இந்த கடிதம் கேட்டுக்கொண்டுள்ளது.

60 வருடங்களாக தொடர்ந்து வரும் தமிழ் தேசிய இனத்துக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையின் தொடர்ச்சியே போரின் பொது இடம்பெற்ற கொலைகளும் இன்று தொடர்ந்துவரும் கொலைகளும் ஆகும்.

போரின் இறுதிநாட்களில் இடம்பெற்ற வன்செயல்களை விசாரணை செய்ய செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவொன்றை அமைத்துள்ளதை பிரதமர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் வரவேற்றுள்ளார். ஆயினும், அண்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு உட்பட, போர் நிறைவுற்ற நாட்களில் இருந்து பல வன்செயல்கள் இடம்பெற்று வருவதை அவர் அவதானித்துள்ளார்.

தங்களது நிபுணர்கள் குழுவிற்கு இந்த வன்செயல்களை விசாரிக்க சட்டவரையறை வழங்கப்படவில்லை. ஆகவே இதனை நிவர்த்தி செய்து, அண்மையில் இடம்பெற்ற வன்செயல்கள் உட்பட, போர் முடிந்த பின்னர் இடம்பெற்ற வன்செயல்கள் பற்றிய விசாரணைகளையும் உள்ளடக்கியதாக நிபுணர் குழுவின் சட்டவரையறை விஸ்தரிக்கப்பட வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

சிறிலங்கா அரசின் உண்மையான நோக்கத்தினை கிரகித்துக்கொள்வதற்கும், போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற வன்செயல்களின் கொடூரத்தின் ஆழத்தையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்துவதற்கு இது உதவும் என நம்புகின்றோம்.

இன்றைய நிலையில் தங்களது தலையீடு மட்டுமே ஏதிலிகளான தமிழ்மக்களுக்கு அவர்களது தாயகபூமியில் ஓரளவாவது பாதுகாப்பை பெற்றுத்தரும். மிகவும் பாரதூரமானதான இந்த விடயத்தை தங்களின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்து, தங்குதடையின்றி இது தொடருவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

கொலைகளும், கடத்தல்களும் அண்மையில் அதிகரித்து வருவதை பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் தெரிவித்து, அவற்றை தடுக்க அந்த நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பிரதமரின் அலுவலகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

TAMILSOURCE

நல்ல முயற்சி.

இந்தக் கடிதங்கள் கருணாநிதியின் கடிதங்கள் போல் அமைந்துவிடாது பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.