Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் தமிழீழத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்

Featured Replies

அன்பார்ந்த மக்களே

தென் தமிழீழத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்

தென் தமிழீழத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தையும் தாண்டியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள், மணல் வீடுகள் முற்றாக சேதமுற்றுள்ளன உணவு , குடி நீர் ஆகியவற்றிற்கு வசதியற்றி 190 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு

இன்று எடுக்கப்பட்ட கணக்கின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 86035 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 549 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 345 பேர் 185 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுளனர். ஏனையோர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பாலம், பனிச்சங்கேணி பாலத்தினூடான போக்குவரத்து துண்டிக்கப்ட்டுள்ளது. கிரான் பிரதேசத்திலிருந்து புலிபாய்ந்த கல் பிரதேசத்துக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல கிராமங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இங்கு படகு மூலம் போக்குவரத்து செய்வதுகூட கஷ்டமான காரியமாக மாறியுள்ளது. வாவி நீர் பல கிராமங்களுக்குள் புகுந்துள்ளதால் வாவியையும் குளங்களையும் அண்டிய கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அம்பாரை

இன்றைய கணக்கெடுப்பின்படி அம்பாரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 724 குடும்பங்களைச்சேர்ந்த 53 ஆயிரத்து 240 குடும்பங்கள் சுமார் 45 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

இன்று இரவு (11/1/2011) அம்பாரை சாகமம் குளம் உடைப்பு எடுத்துள்ளது. இதனால் கழிமண்ணிலான வீடுகள் முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளன. ஆலையடி வேம்பு பிரதேச சபை, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் மக்கள் அனைவரும் வெளியேறி வினாயகர் வித்தியாலையம், கலைமகள் வித்தியாலையம், பெருநாவலர் பாடசாலை ஆர்.கே.எம் கல்லூரி ஆகிய இடங்களில் தங்கியுள்ளனர். மட்டக்களப்பு - அக்கரைப்பற்று வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

உதவிகள் இல்லை, வழங்கும் உதவிகளிலும் பாகுபாடு

பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்ட்டுள்ளபோதிலும் இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு வழங்கும் நடைமுறை இல்லை. போதியளவு சமைத்த உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்கப்படாமையினால் மக்கள் பெரும் அவலத்தினை சந்தித்து வருகின்றனர்.

அரசாங்கமோ அரச சார்பற்ற நிறுவனங்களோ இதுவரை பெரிதாக எதனையும் செய்யவில்லை. இதனைவிட நிவாரண விநியோகத்திலும் சிறுபான்மை பெரும்பான்மை என பாகுபாடு காட்டப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்களும் தம்மிடம் அனர்த்த நிவாரணத்திற்கு நிதி இல்லையென கைவிரித்துள்ளன. சிவில் நிர்வாக அதிகாரிகள் தொடர்பில் இல்லை. கிராம சேவகர்கள் மற்றும் சில அதிகாரிகளும் இடம்பெயர்ந்துள்ளமையே இதற்கு காரணம். சில பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது பிரதேசங்களில் மட்டும் நிவாரணப்பணிகளை செய்கின்றனர்.

புலம்பெயர் மக்கள்தான் உதவ வேண்டும்.

மேற்கூறப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தம்மாலான உதவிகளை தென் தமிழீழ மக்களுக்கு முடிந்தவரை செய்யுமாறு புனர்வாழ்வுக்கழகம் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். உங்களுக்கு அறிந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் ஊடாக தொடர்பு கொண்டு உதவிகளை செய்யுங்கள். உதவி செய்யும் உள்ளூர் அமைப்புக்களின் விபரங்கள் , தொண்டர்களின் விபரங்கள் யாருக்கும் தேவை எனின் உங்கள் நாட்டு புனர்வாழ்வுக்கழக அலுவலகத்திடம் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இப்படிக்கு

கே.பி.றெஜி11/01/2011

regi.itro@gmail.com

http://www.yarl.com/forum3/uploads/monthly_01_2011/media.pdf

அன்பார்ந்த மக்களே.... உதவி செய்வது என்றால் நேரடியாக செய்யுங்கள்.....தமிழர் புனர்வாழ்வுகழகத்துக்கு கொடுக்க வேண்டாம்...இவர்கள் சுனாமி அனர்ததின் போது எங்களுக்கு திருக்கோயிலில் என்ன தந்தவர்கல் தெரியுமா?????? ஒரு ரப்பர் வாழி, கால் கிலோ உருளை கிழங்கு, அரை கிலோ சீனி.....

புனர்வாழ்வுகழகத்திற்கு கொடுக்குமாறு இந்த அறிக்கையில் கூறப்படவில்லையே...சுனாமி காலப்பகுதியில் நான் கொழும்பில் புனர்வாழ்வுக்கழகத்தில் இருந்தேன் அம்பாரை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொழும்பில் இருந்து வி நியோகம் செய்யும் பிரிவில் கடமையாற்றினேன் எனக்கு தெரியும் அங்கே என்ன நடந்தது என்று.

என்னிடம் அங்கு வேலை செய்த படங்கள் மற்றும் கட்டிக்கொடுத்த தற்காலிக வீடுகள், நிரந்தரவீடுகள், முன்பள்ளிகள் ஆகியவற்றின் விபரங்கள் உள்ளன. இப்போ அம்பாரை மாவட்டத்தில் பணி புரிந்த இணைப்பாளர் ஆதவன் வீரச்சாவு, பூங்குன்றன் மாஸ்ரர், சீசர் ஆகியோர் சிறையில்.. ஆகவே அவர்களைத்தான் கேட்கவேண்டும் அங்கு எப்படி கடமையாற்றினார்கள்.

சிறிலிங்கம் அவர்களே உங்கள் மின்னஞ்சலை தந்தால் அம்பாரை மாவட்ட சுனாமி வேலைத்திட்டங்களை ஆதாரத்துடன் தருகின்றேன் அனுப்புங்கள்.

உண்மைகள் கசப்பானவை இப்போது வேண்டாம்.....வேண்டும் என்றால் நோர்வேயிலிருகும் காந்தனிடம் கேட்கலாமே........அவர்கள் எங்களுக்கு தந்தது இவைதான்.....நான் பாதிக்கப்பட்டவன் ....கண்கண்ட சாட்சி.....ஆனா இப்போது பயமில்லை அப்போது பயம்....இயக்கம் வந்து ஆரு சொன்ன எண்டு அடிக்கும்.....

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஒரு யுனிசெப்போ இல்லை ஐ.சி.ஆர்.சி.யோ இல்லை. அது ஒரு மக்கள் விடுதலை அமைப்பின் மக்கள் பணி செய்யும் கிளையாக இருந்தது. இருந்தும், அதன் பல குறைபாடுகள் மத்தியிலும், அது சிங்கள இனவாத அரசைவிட நேர்த்தியாகவும், உண்மையாகவும் செயல்பட்டது. இதை சர்வதேச ரீதியில் முன்னால் அமெரிக்க தலைவர் கிளிண்டன் அவர்களே உறுதி செய்திருந்தார்.

இன்று அதன் வெற்றிடம் ஆழமாக உணரப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த மக்களே.... உதவி செய்வது என்றால் நேரடியாக செய்யுங்கள்.....தமிழர் புனர்வாழ்வுகழகத்துக்கு கொடுக்க வேண்டாம்...இவர்கள் சுனாமி அனர்ததின் போது எங்களுக்கு திருக்கோயிலில் என்ன தந்தவர்கல் தெரியுமா?????? ஒரு ரப்பர் வாழி, கால் கிலோ உருளை கிழங்கு, அரை கிலோ சீனி.....

புனர்வாழ்வு கழகம் எதுக்காக இவற்ரை உங்களுக்கு தர வேண்டும் என நினைக்கிறீகள், புலிகளை குறை சொல்லும் நீங்கள், புலிகளால் மக்களுக்காக ஆரம்பிக்க பட்ட ஒரு நிறுவனம், அரசுக்கு ஆதரவாக செயற்படும் உங்களுக்கு உத வேண்டும் என நீங்கள் எப்படி நினைக்கலாம், அரசால் உதவி மறுக்கபட்ட ,கைவிட பட்ட அனதரவான தமிழ் இனத்துக்கு மட்டுமே அதன் உதவிகள் கிடைக்க வேண்டும், அரசுக்கு முண்டு கொடுப்போருக்கு அல்ல.

Edited by சித்தன்

உண்மைகள் கசப்பானவை இப்போது வேண்டாம்.....வேண்டும் என்றால் நோர்வேயிலிருகும் காந்தனிடம் கேட்கலாமே........அவர்கள் எங்களுக்கு தந்தது இவைதான்.....நான் பாதிக்கப்பட்டவன் ....கண்கண்ட சாட்சி.....ஆனா இப்போது பயமில்லை அப்போது பயம்....இயக்கம் வந்து ஆரு சொன்ன எண்டு அடிக்கும்.....

காந்தனை எனக்கு தெரியும் அவர் முழுமையாக அங்கு நிற்கவில்லை இடையில் விலகி வெளியில் வந்துவிட்டார்.. என்றாலும் அவரே புனர்வாழ்வுக்கழகம் கொழும்பில் வந்து நிதி பெற்று சென்றிருக்கின்றார். இப்போ எனக்கு அவர் தொடர்பு இல்லை. முடிந்தால் என்னுடன் தொடர்பு கொள்ள சொல்லவும். அவருடன் வேலை செய்த இன்னொருவர் இலண்டனில் இருக்கின்றார் அவரது இலக்கம் 07414051809 தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.

மேலும் இப்போதும் அங்கு அவருடன் பணியாற்றிய ஒருவர்தான் நலன்புரி முகாமில் இருந்து பணி செய்து கொண்டிருகின்றார். நான் அவருடன் தொடர்பில் இருக்கின்றேன். நேற்று இலங்கை காசிற்கு ஒரு இரண்டு இலட்சம் ரூபா அனுப்பினோம். நாளையும் அனுப்ப இருக்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.