Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உதவிப்பொருள் அடங்கிய விமானம் கொழும்பு வருகின்றது

Featured Replies

வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு தொகுதி நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைத்துள்ளது. நிவாரணப் பொருள்களைத் தாங்கிய விமானம் இன்று கொழும்பை வந்தடையும் என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சீனி, பால்மா, சுத்தமான குடிநீர், பாய்கள், படுக்கை விரிப்புக்கள் உள்ளிட்ட உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நிவாரணப் பொருட்களே இலங்கைக்கு எடுத்து வரப்படுவதாகவும், இந்நிவாரணப் பொருள்களை இன்றைய தினமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

My link

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம்காரணமாக முகாம்களில் முடங்கியுள்ள இராணுவத்தினர்க்கு இந்தியா உணவுப்பொருட்களை விமானம்மூலம் அனுப்பிவைத்தது. என மாற்றி வாசிக்கவும். யாராவது தங்களது நெருங்கிய உறவுகள் பாதித்திருந்தால் நேரடியாகவே உதவிசெய்ய முற்படவும். மாறாக இங்கிருந்து யாருக்காவது (நேசக்கரம் தவிர) அனுப்பினால் குறிப்பாக லங்கசிறி குறாப்புக்கும் சிங்களவனுக்கும் தாரைவார்ததுக்கும் சமமாகும்..

இந்த வெள்ள அனர்த்தம் தமிழர் பகுதிகளில் ஏற்பட்டுள்ளதால் இந்திய உதவி!

இது அதன் ஒருவித தொடரும் உளவியல் அரசியலின் ஒரு அங்கம். இதன் மூலம் தான் தமிழரின் நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என தமிழருக்கு புதுடெல்லி காட்ட முனைகின்றது. இல்லை தான் முந்தாவிட்டால் சீனர்கள் வந்து உதவிடுவார்கள் என்ற பயமும் இருக்கும்.

தமிழருக்கு ஒரு நியாமான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுத்தரும் எனில் அதுவே அடுத்த இயற்கை/செயற்கை அனர்த்தங்களுக்கு பதிலாக அமையும்.

இந்திய நிவாரண பொருட்கள் கொழும்பை வந்தடைந்தன

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் முதல் தொகுதி இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளது என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

இந்த பொருட்களை விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.

உணவு, குடிநீர், நீர் சுத்திகரிக்கும் மாத்திரைகள் மற்றும் பாய்கள் அடங்கிய 25 மெட்ரிக் தொன் நிவாரண பொருட்கள் இந்திய விமான படை விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் நிவாரண பொருட்களின் இரண்டாம் தொகுதி திங்கட்கிழமை இலங்கையை வந்து சேரும் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரேந்தர் எஸ். யாதவ் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/14911-2011-01-14-06-44-43.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.