Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வல்லுறவுக்கு முயன்ற சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு! நீர்வேலியில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவுக்கு முயன்ற சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு! நீர்வேலியில் சம்பவம்!

* Friday, January 14, 2011, 19:21

யாழ்.நீர்வேலிப் பகுதியில் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட இராணுவத்தினன் ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இன்று (14-01-2010) அதிகாலை நீர்வேலியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த இராணுவத்தினன் ஒருவர் அங்கிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டிருக்கின்றார்.

இதனை அடுத்து குறித்த பெண் கூச்சலிட்டு உதவி கோரியுள்ளார். பெண் கூச்சலிட்டதை அடுத்து அங்கு திரண்ட மக்கள் இராணுவத்தினனை மடக்கிப்பிடித்து தாக்கி நையப்புடைத்துள்ளனர். அதன் பின்னர் அவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் யாழ்.மாவட்ட பொலிஸ் அதிகாரி விடுத்த அறிவுறுத்தலில் யாழ்ப்பாணத்தில் மக்கள் எவரும் நள்ளிரவு 11மணிக்கு பின்னர் நடமாட முடியாது என்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினால் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

tamilthai.com

இலங்கையை அமைதிப்பூங்காவாக்கி மக்களை நிம்மதியாக வாழவைக்க நாங்கள் சிலர் இங்கை இருந்து இணையங்களில் எல்லாம் எழுதி ( உங்கை வந்தும் தான்) முயற்ச்சி செய்யும் இந்த காலத்தில் விடுதலைபுலிகளின் வளி முறைகளான வன்முறையை மக்கள் கையிலை எடுக்க கூடாது எண்டு கேட்டு கொள்கிறம்....

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மேன்மை மிகு ஜனாதிபதியும், மேதகு அம்மைச்சர் டக்கிளஸ் அவர்களின் நியமனத்தில் அதிகாரத்தில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு கடமைக்கு இடைஞ்சல் செய்யாமல் உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்...

வன்முறை, பிரிவினை கருத்துக்களுக்குள் நீங்கள் போகக்கூடாது என்பதே எங்களின் பெருத்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது...

(இந்த விசயத்தை அந்த பெண்ணின் பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் சொல்லிவிடுங்கோ.... )

இப்படிக்கு கிருபண்ணாவின் அறிவுரையை கேட்டு திருந்திய

தயா ...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக்கு கிருபண்ணாவின் அறிவுரையை கேட்டு திருந்திய

தயா ...

தப்புத் தப்பா விளங்கிவிட்டீர்கள். இதுக்குத் திருந்தாமாலே இருக்கலாம் :o

தப்புத் தப்பா விளங்கிவிட்டீர்கள். இதுக்குத் திருந்தாமாலே இருக்கலாம் :o

மக்களை நிம்மதியாக இருக்க வைக்க இதை விட வேறை நல்ல வளி இருக்கா... அடங்கி போனால் அமைதியாக இருக்க விடமாட்டாங்களா என்ன...?? புலிசார் அமைப்புக்களை மாதிரி ஆடினால் அடிச்சு அடக்க மாட்டாங்களா என்ன ....???

இண்டைக்கு ஆமிக்காறனை அடிக்க வெளிக்கிட்டவை நாளைக்கு ஆமி காம்பையே( முகாமை) அடிப்பினம்... பிறகு ஆமியை ஊருக்கை வராமல் தடுப்பினம்... அவன் மேதகு அமைச்சர் டக்கிளஸ் ஐயாவின் ஆக்களை வேவு பாக்க அனுப்புவான் இவை அவங்களுக்கும் அடிப்பினம்... ( சந்திரிக்காவுக்கு கதிர்காமர் போல.. அர்ஜூண் அதை பயங்கரவாதம் எண்டு சிங்களவனுக்கு நூல் எடுத்து குடுப்பார் ) பயங்கர வாதத்தை அழிக்க உலக நாடுகளிலை பிரச்சாரம் நடக்கும்... ( எங்கட அண்ணை மாருக்கு எலும்பு கிடைக்கும்) பிறகு பயங்கர வாதத்தை அழிக்க போர் தொடங்கும்... அதுக்கு ஆமிக்காறன் மேலாலை குண்டு கொண்டு வந்து போடுவான்... அதுக்கு கற்றபோல் கட்டி இவை அடிப்பினம்... உடனை பயங்கரவாதிகளை அடக்க கொத்துக்குண்டு இரசாயண ஆயுதம் எண்டு கொண்டு கோத்தபாய கிழம்புவான்... ! இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் நீர்வேலியிலை ... அதுக்கு நாங்கள் வீதிக்கு போக வேண்டி வரும்...! இது எல்லாம் தேவையா....???

அதைவிட அடிச்சாலு பிடிச்சாலும் அமைதியா இருக்க வேணும்... எங்களுக்கு இண்டைக்கு நிம்மதி மட்டும் தானே வேணும்... நாளையை பற்றியும் , எங்கட சந்ததியை பற்றியும் இண்டைக்கு என்ன கவலை....??

இப்படிக்கு உங்கள் அறிவுரையால் திருந்திய

தயா... !

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்பானத்தான் தன்ர குணத்தை காட்டி போட்டான், சண்டை முடிஞ்சும் வன்முறையை கைவிடுறான் இல்ல கண்டியளோ, வன்முறையை கையில எடுத்த சமூகம் உருபட்டதா சரித்திரமே இல்ல, கருனா, டக்கிளசு போல வாழபழக வேணும்.

யாழ்பானத்தான் தன்ர குணத்தை காட்டி போட்டான், சண்டை முடிஞ்சும் வன்முறையை கைவிடுறான் இல்ல கண்டியளோ, வன்முறையை கையில எடுத்த சமூகம் உருபட்டதா சரித்திரமே இல்ல, கருனா, டக்கிளசு போல வாழபழக வேணும்.

ஏன் இது கிட்டடியிலை ஆமியோடை நிண்டு தமிழருக்காக பாடுபடும் அண்ணை ஒருவருக்கும் வெருகலுக்கையும் நடந்தது ... எங்கட ஆக்களுக்கு செய்தி குடுக்க ஆக்களும், தொழில் நுட்பமும் அங்கை போதாததாலை வெளிவரவில்லை... பொம்பிளையளும் ஏதோ ஈக்குக்கட்டாலை சாத்தினதாய் ஊரிலை இருந்து வந்த ஒரக்கா சொன்னவக... மறுகா எனக்கு வேறை ஒண்டும் தெரியாது...

மட்டக்கிளப்பானும் சும்மா இருக்க மாட்டன் எண்டுறான்...! வடக்கானும் கிழக்கானுமாய் சேந்து நாசமறுக்காமல் விட மாட்டாங்கள் போல தான் கிடக்கு...

அப்பிடியோ அண்ணைக்கு என்ன நடந்தது, அண்ணைக்காக உயிரைவிடுற சொந்தங்கள் யாழ் களத்தில இருக்கினம், அவையள் கவலைபட போகினம். மட்டகளப்பானுக்கு இன்னமும் கொழுப்பு அடங்க இல்லை, முதலில சட்டி தயிரை கட்பண்ண வேணும் அப்பத்தான் வன்முறையை கைவிட்டு, கிருபா அண்ண சொல்லிற வழிக்கு வருவினம்.

Edited by சித்தன்

அண்ணைக்கு என்ன ஈக்கு கட்டாலை சாத்தினதாலை நாயை போல கம்மிக்கொண்டு திரிவார்....! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணைக்கு என்ன ஈக்கு கட்டாலை சாத்தினதாலை நாயை போல கம்மிக்கொண்டு திரிவார்....! :lol: :lol: :lol:

அதாலதான் வெள்ளைத்தை பாக்க வந்தபோது வளைஞ்சுகொண்டு நிக்கிறார், நான் நினைச்சன் நல்லா சாப்பிட்ட கையோட வந்து இருக்கிறார் என்று. ஈக்கு கட்டு அடிக்குதான் உந்த நெளிவோ?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை நிம்மதியாக இருக்க வைக்க இதை விட வேறை நல்ல வளி இருக்கா... அடங்கி போனால் அமைதியாக இருக்க விடமாட்டாங்களா என்ன...?? புலிசார் அமைப்புக்களை மாதிரி ஆடினால் அடிச்சு அடக்க மாட்டாங்களா என்ன ....???

இண்டைக்கு ஆமிக்காறனை அடிக்க வெளிக்கிட்டவை நாளைக்கு ஆமி காம்பையே( முகாமை) அடிப்பினம்... பிறகு ஆமியை ஊருக்கை வராமல் தடுப்பினம்... அவன் மேதகு அமைச்சர் டக்கிளஸ் ஐயாவின் ஆக்களை வேவு பாக்க அனுப்புவான் இவை அவங்களுக்கும் அடிப்பினம்... ( சந்திரிக்காவுக்கு கதிர்காமர் போல.. அர்ஜூண் அதை பயங்கரவாதம் எண்டு சிங்களவனுக்கு நூல் எடுத்து குடுப்பார் ) பயங்கர வாதத்தை அழிக்க உலக நாடுகளிலை பிரச்சாரம் நடக்கும்... ( எங்கட அண்ணை மாருக்கு எலும்பு கிடைக்கும்) பிறகு பயங்கர வாதத்தை அழிக்க போர் தொடங்கும்... அதுக்கு ஆமிக்காறன் மேலாலை குண்டு கொண்டு வந்து போடுவான்... அதுக்கு கற்றபோல் கட்டி இவை அடிப்பினம்... உடனை பயங்கரவாதிகளை அடக்க கொத்துக்குண்டு இரசாயண ஆயுதம் எண்டு கொண்டு கோத்தபாய கிழம்புவான்... ! இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் நீர்வேலியிலை ... அதுக்கு நாங்கள் வீதிக்கு போக வேண்டி வரும்...! இது எல்லாம் தேவையா....???

அதைவிட அடிச்சாலு பிடிச்சாலும் அமைதியா இருக்க வேணும்... எங்களுக்கு இண்டைக்கு நிம்மதி மட்டும் தானே வேணும்... நாளையை பற்றியும் , எங்கட சந்ததியை பற்றியும் இண்டைக்கு என்ன கவலை....??

இப்படிக்கு உங்கள் அறிவுரையால் திருந்திய

தயா... !

மேலே சொல்லப்பட்ட வழிமுறைகதான் தோல்விகண்ட வழிமுறையாச்சே. இதை விட்டுவிட்டு புதிதாகச் சிந்த்தித்துச் செயற்படலாமே..

தமிழர்கள் தங்கள் விடிவைப் பெற்றுக்கொள்ள வன்முறைப் போராட்டம்தான் சரியான வழி என்பது 1970/80 களில் இருந்த உலக ஒழுங்கமைப்புக்குள் பொருந்தியிருக்கலாம், ஆனால் 2010 களில்சரிவராது என்பதைப் புரிந்துகொள்ளாமல் மீண்டும், மீண்டும் பழைய பல்லவியைப் பாடுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

மேலும் சரணாகதி அரசியல் செய்துதான் தமிழர்கள் தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று டக்ளஸ், கருணா சொல்லலாம், ஆனால் அதுதான் ஒரேயொரு வழியென்று கூறமுடியாது.

தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வன்முறையற்ற, சரணாகதி அரசியல் அற்ற மூன்றாவது வழியும் உண்டு. இந்த வழியில் போவதற்கு, முதலில் சிதறுண்டு, பலவீனமாகப் போயுள்ள தமிழ்த் தேசியத்தை வலுப்பெற வைக்கவேண்டும். அது சிலவேளை நூறாண்டுகள் கூட எடுக்கலாம்!

மட்டகளப்பானுக்கு இன்னமும் கொழுப்பு அடங்க இல்லை, முதலில சட்டி தயிரை கட்பண்ண வேணும் அப்பத்தான் வன்முறையை கைவிட்டு, கிருபா அண்ண சொல்லிற வழிக்கு வருவினம்.

அப்ப மட்டக்களப்பாரும் நீங்களும் வேறு வேறு ஆக்கள் எண்டு சொல்லுறியள்! பிறகேன் எல்லாரும் ஒண்டெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறியள்? :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.