Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த விடுதலைப் புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த விடுதலைப் புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் ?

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 14:24

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்குவதற்காக சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 19 மாதங்களாக சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.

இந்த நிதி நிறுவனங்களில் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் 10 பேர் சட்டமா அதிபர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில், சுவிஸ் பொட்போல் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனதாகவும் ஏற்கனவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறித்த நிதி நிறுவனங்களில் பைனோன்ஸ், எனலோட் பைனேன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிரதான நிறுவனங்கள் எனவும் தெரியவந்துள்ளதாகவும், புலிகளின் நிறுவனங்கள் நிதி வைப்பீடுகள் மூலம் 200 மில்லியன் சுவிஸ் பிரேங்குகளை சேரித்துள்ளதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் போலி ஊதிய பட்டியல்களை சுவிஸ் வங்கிகளிடம் சமர்பித்து, இந்த நிறுவனங்கள் கடனுதவிகளையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவர் அப்துல்லா என அழைக்கப்பட்டாலும், அவர், புலிகளின் இரணவில் முகாமில் தலைவராக பணியாற்றி வந்த ஜெயபாலன் என தெரியவந்திருப்பதாகவும் ஞாயிறு திவயின குறிப்பிட்டுள்ளது.

எனினும் சுவிற்சலாந்தின் சட்டமா அதிபர் திணைக்களமோ, அல்லது சுவிஸ் காவற்துறையினரோ, சுவிஸ் அரசாங்கமோ வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை.

sangamam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.