Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் - மகிந்தா சந்திப்பு! சிறிலங்காவின் இராஜதந்திர நெருக்கடிகளைத் தீர்க்க ஆலோசனை!!

Featured Replies

சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் நேற்று மாலை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இச் சந்திப்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் றொமேஸ் ஜெயசிங்கவும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த போது ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் கொழும்புக்கு விஜயம் செய்திருந்ததுடன், டோக்கியோ நன்கொடையாளர் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நன்கொடையாளர் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ரிச்சர்ட் ஆர்மிட்டேஜின் அணுகுமுறைகளும் ஒரு காரணம் என அக்காலப் பகுதியில் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந் நிலையில், பல்வேறுபட்ட சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவும் நோக்குடனேயே அவர் கொழும்புக்கு விஜயம் செய்திருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடிகளைத் தணிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ரிச்சர்ட் ஆர்மிட்டேஜின் ஆலோசனையைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கொழும்புக்கு விஜயம் செய்துள்ள ரிச்சர்ட் ஆர்மிட்டேஜின் வருகை குறித்து அரசாங்கம் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

2001ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் 13வது பிரதி இராஜாங்க அமைச்சராக ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் பணியாற்றி இருந்தார். இதன் பின்னர் முரண்பாடுகளுக்கான சர்வதேசக் குழுவின் சபை உறுப்பினராக இருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ், தற்போது 'ஆர்மிட்டேஜ் இன்ரநசனல்' எனும் சர்வதேச வர்த்தக அபிவிருத்தி, தந்திரோபாய திட்டமிடல் மற்றும் இராஜதந்திர நெருக்கடிகளைத் தீர்த்தல் போன்ற விடயங்களில் ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5A52C7DF-D221-447A-98E6-B997341B5E11}

  • தொடங்கியவர்

ஆர்மிட்டேஜ் இன்ரநசனல்

Armitage International L.C. was formed in March 2005 by Richard L. Armitage, former U.S. Deputy Secretary of State. He is joined by four partners with extensive experience in government and business. Together, they provide multinational clients with critical support in the areas of international business development, strategic planning, and problem-solving.

http://www.armitageinternational.com/about/

The Honorable Richard L. Armitage

At the U.S. State Department, Mr. Armitage helped shape, direct and lead U.S. foreign policy during one of the most trying and intriguing eras in modern history. Mr. Armitage is uniquely qualified to deal with the challenges stemming from international policy and business and how best to succeed.

  • தொடங்கியவர்

ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் - மகிந்த ராஜபக்ச சந்திப்பின் பின்னணி குறித்து கேள்வி!

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தின் பின்னணி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் கடந்த 18ஆம் திகதி மாலை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அலரி மாளிகையில் நடைபெற்ற இச் சந்திப்பில்; சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் றொமேஸ் ஜெயசிங்கவும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிலையில், இச் சந்திப்புக் குறித்த புகைப்படத்தை சிறிலங்கா அரசாங்கத்தின் இணையத்தளம் கடந்த 18ஆம் திகதி வெளியிட்டிருந்த போதிலும், ஏனைய ஊடகங்களுக்கு இப் புகைப்படங்கள் நேற்றே வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அதிகாரியிடம் கேட்ட போது, அவர் இக் கேள்விக்கான உரிய பதிலை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜின் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து அரசாங்கம் இதுவரை போதிய தகவல்களை வெளியிடவில்லை. 2001ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் 13வது பிரதி இராஜாங்க அமைச்சராக ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் பணியாற்றி இருந்தார்.

இதன் பின்னர் முரண்பாடுகளுக்கான சர்வதேசக் குழுவின் சபை உறுப்பினராக இருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ், தற்போது 'ஆர்மிட்டேஜ் இன்ரநசனல்' எனும் சர்வதேச வர்த்தக அபிவிருத்தி, தந்திரோபாய திட்டமிடல் மற்றும் இராஜதந்திர நெருக்கடிகளைத் தீர்த்தல் போன்ற விடயங்களில் ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே அவசரமாக அமெரிக்கா சென்றதாக அரசு சாராத வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={4991FA52-3902-4314-B356-8285C80129FC}

... முன்பு எங்கேயோ வாசித்த ஞாபகம் ...

250px-Milinda_Moragoda.JPG

... முன்னால் அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் ரிச்சட் ஆர்மிட்டேஜ் இன் உறவின பெண்ணையே, சிறிலங்காவில் அமைச்சராக இருக்கும் மிலிந்த மொறகொட திருமணம் புரிந்ததாக ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்திற்கும் ஆர்மிடேஜ் உடனான சந்திப்புக்கும் தொடர்பு உள்ளதா?

அவசர விஜயத்திற்கும் இடையில் இருக்கும் காரணங்கள் குறித்து அரசியல் தரப்பில் ..

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமெரிக்காவின் முன்னாள் பிரதி ராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்புக்கும் ஜனாதிபதியின் அமெரிக்காவுக்கான அவசர விஜயத்திற்கும் இடையில் இருக்கும் காரணங்கள் குறித்து அரசியல் தரப்பில் தற்போது பேசப்பட்டு வரும் விடயமாகி மாறியுள்ளது.

ஆர்மிடேஜை, ஜனாதிபதி கடந்த 18 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்ததுடன், அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினர் நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர். இந்த நிலைமையில் ஜனாதிபதி 19 ஆம் திகதி அதிகாலை தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு பயணமானார்.

ஆர்மிடேஜ் மற்றும் ஜனாதிபதி இடையிலான சந்திப்பு இடம்பெற்று நான்கு தினங்களுக்கு பின்னர், அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டதன் பின்னணியில் வெளியிடப்படாத கதைகள் இருக்குமோ என்ற சந்தேகம் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஆர்மிடேஜின் சந்திப்புக்கும் ஜனாதிபதியின் அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்திற்கும் சம்மந்தமில்லை என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மருத்து பரிசோதனைகளுக்காகவே அமெரிக்கா சென்றதாக உத்தியோபூர்வமற்ற தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/56908/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.