Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆமிரேஜ் இன் இலங்கை விஜயத்துடன் மஹிந்தவின் அமெரிக்க விஜயம் தொடர்பா?

Featured Replies

ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழநாதம்.

முன் நாள் அமெரிக்க துணை இராஜாங்க செயலர் ரிச்சார்ட் ஆமிரேஜ் அவர்கள் கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இந்த விஜயம் தனிப்பட்ட விஜயம் என சொன்னாலும் இராஜதந்திரிகள், மற்றும் அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கப்பட்ட விடயமாகவே இருந்தது. ரிச்சார்ட் ஆமிரேஜ் வந்ததும் மஹிந்த இராஜபக்‌ஷவை சந்தித்ததும் பூசி மெழுகப்பட்ட தொன்றாகவே இருக்கின்றது. சந்திப்பு நடந்த நான்கு நாட்களின் பின்னரே இது ஒரு முக்கியத்துவம் அற்ற செய்தியாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக பிரிவு வெளியிட்டது.

MR%20and%20armitage.jpg

இதே வேளை ஆமிரேஜ் அவர்களின் சந்திப்பின் பின்னர் மஹிந்த இராஜபக்‌ஷ திடீர் பயணம் ஒன்றை அமெரிக்காவிற்கு 21 ஆம் திகதி மேற்கொள்கின்றார். ஆனால் இந்த பயணம் தனிப்பட்ட பயணம் என ஜனாதிபதி செயலகம் கூறுகின்றது. ஒரு தடவை ஜனாதிபதி மருத்துவ தேவைக்காக செல்கின்றார் என கூறப்பட்டது.

மருத்துவதேவை எனின் ஏன் இப்படி திடீர் பயணம். அவ்வளவு உயிராபத்தான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா ஜனாதிபதி? இன்னொரு தகவல் மஹிந்தாவிற்கு இப்போ பலன் நல்லாக இல்லை ஆகையால் இரு வாரங்கள் அவர் இலங்கையில் தங்க கூடாது என்பதாகும். எது எப்படியோ மஹிந்தவுடன் 20 பேர் சென்றிருக்கின்றார்கள் தனிப்பட்ட விஜயம் எனின் ஏன் 20 பேர்? இப்போது மஹிந்த தனது சகோதரர் டட்லி ராஜபக்‌ஷ வீட்டில் இருப்பதாக தகவல்.

இதே வேளை அமெரிக்காவிலும் பல்வேறு அறிக்கைகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அமெரிக்காவின் இராஜாங்க துணை செயலர் மஹிந்த இராஜபக்சவின் பயணம் தனிப்பட்டது என கூறியுள்ளார்.

அனைத்துலக மன்னிப்பு சபை மஹிந்த இராஜபக்‌ஷவை போர்க்குற்றத்திற்காக விசாரிக்க வேண்டும் என கோரி நிற்கின்றது.

ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணைக்கான ஆலோசனைக்குழு தாம் ஜனாதிபதியினை அமெரிக்காவில் சந்திக்க மாட்டோம் என கூறுகின்றது. இதே வேளை இன்று இன்னசிற்றி பிறஸ் இலங்கை அரசாங்கம் பான் கி மூன் குழுவினரிற்கான இலங்கை விஜயத்தினை அனுமதிக்க போவதில்லை என தெரிவதாக கூறுகின்றது. இதற்கு வலுச்சேர்ப்பதுபோல் பான் கி மூனின் குழுவினரும் தாம் நேரடியாக ஜனாதிபஹ்டியினை சந்தித்து பேசப்போவதில்லை என கூறுகின்றது.

ஆகவே இந்த சூழலின் அடிப்படையில் இலங்கை - ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு - அமெரிக்கா ஆகியோருக்கு இடையில் ஆமிரேஜ் எனும் இராஜதந்திர நரி தரகராக வந்துள்ளதா?

அப்படி வந்தால் ஆமிரேஜின் நோக்கமும் தந்திரோபாயமும் பணம் மட்டுமே.மிகப்பெரும் கம்பனிகளுக்காக இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபட்டு வருமானங்களை ஈட்டிக்கொடுத்து தரகு பெறுவதே இந்த ஆமிரேஜின் நோக்கமும் கடந்தகால செயற்பாடும்.

ஆகவே ஆமிரேஜை தரகராக நியமித்தது யார்? யாருக்காக? இதன் விளைவு என்ன? விளைவு எதுவாக இருந்தாலும் அது தமிழர்களை பாதித்தே தீரும் என்பது மட்டும் உண்மை. ஏனெனில் தமிழர்களப்பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் பார்வையாளர்களே. தமிழர்கள் பலமாகவும் உறுதியாகவும் இருந்த காலத்திலேயே ஆமிரேஜ் எம்மவரை ஒதுக்க திட்டமிட்டு செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் நேற்றைய செய்தி அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. அதாவது இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆலோசனைக்குழுவில் அமெரிக்க முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அது ஒரு நீண்ட செயற்பாடு எனவும் கூறுகின்றது. இது மஹிந்தவின் இனப்படுகொலைகளை பூசி மெழுகும் செயற்பாட்டிற்கு நன்மதிப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் செயற்பாடே.

மஹிந்த அமைத்த ஆணைக்குழுக்கள் ஒவ்வொன்றும் எப்படி ஆனது என்பது உலகம் அறிந்த உண்மை அதாவது எல்லாமே ஏமாற்று வித்தைகளே, மஹிந்த இராஜபக்‌ஷவின் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி மனித உரிமை அமைப்புக்கள் உலகின் முன்னணி ஊடகங்களான பிபிசி உட்பட அனைவரும் தமது நம்பிக்கையீனங்களை வெளியிட்டு வந்துள்ளனர். விசாரனைகளின் போது பிபிசி உட்பட பல ஊடகங்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதனது நம்பிக்கை தன்மை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த சூழலில் மஹிந்தவின் நல்லினக்க ஆணைக்குழுவிற்கு நன்மதிப்பினை ஏற்படுத்தியும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவின் செயற்பாட்டை தாமதபப்டுத்தும் செயற்பாடே இப்போ நடக்கின்றது. இந்த வேலை யாருக்காக யாரால் செய்யப்படுகின்றது? இதற்குத்தான் ஆமிரேஜ் தரகராக செயற்படுகின்றாரா? இந்த பிண்ணணியில்தான் ஆமிரேஜின் இலங்கை விஜயமும் தொடர்ச்சியாக மஹிந்தவின் அமெரிக்க விஜயமும் அமைந்துள்ளதா? - ஈழநாதத்திற்காக தாமரை

My link

Edited by உமை

  • 1 month later...

அமெரிக்காவில் மகிந்தா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் இனை சந்தித்து போர்க்குற்றங்கள் சம்பந்தமாக உதவி கேட்டாரா?

நீங்கள் கூறியதன் படிதான் நான் புலிகளை அழித்தேன் என புஸ்சிடம் மகிந்தா கூறியிருக்கலாம்.

SL seeks out Bush to fight war crimes

It is surmised that on the mystery surrounded US tour of Mahinda , the latter may have reminded Bush of his advice to ‘finish them off’, and pointed out that while he so advised , America on the contrary is levelling war crime charges against Mahinda.

Nevertheless, after the conclusion of the war there is nothing that the American intelligence can do to repudiate or repel in regard to the war crime charges mounted against SL.

Richard Armitage was a Deputy Secretary of State under the Bush administration . During the period of Ranil Wickremesinghe’s Govt., he worked with extraordinary zeal and zest pertaining to the SL ‘s ethnic issue. He took a tough stand against the Tamil Tigers. Some even say his tough approach militated against the SL peace process.

If Mahinda who met Armitage in Colombo had later met Bush in Texas , it is deducible that Mahinda is personally intervening and manoeuvring to change the hostile American stance against SL Govt. Yet when considering the stern warning issued by the US State Dept. Assist . Secretary Robert Blake to SL as well as the letter signed by the members of the US Senate assembly urging the investigation of the SL war crime charges , it is crystal clear that the manoeuvring has to be carried out under the most delicate and critical circumstances.

http://print.dailymirror.lk/opinion1/38274.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.