Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இருந்து GTNற்காக கனகண்ணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து GTNற்காக கனகண்ணை

அந்த சனத்துக்கு ஏதுமே கிட்டப் போறதில்லையெண்டது மட்டும் அப்பட்டமா தெரியுது.

கனநாளா கதைக்கவேணும் கதைக்க வேணுமெண்டு நினைச்ச விசயமிது. உயர் பாதுகாப்பு வலயத்தில சனத்தை மீளக் குடியமர்த்தப் போறம் எண்டுறாங்கள். இல்லையில்லை உயர் பாதுகாப்பு வலயமெண்ட ஒண்டே இல்லையென்றாங்கள். பாதுகாப்பு அமைச்சு அனுமதிக்கயில்லை யெண்டுறாங்கள். கண்ணி வெடியா கிடக்கெண்டுறாங்கள். அட அதுக்கையே உந்த 40 ஆயிரம் ஆமியும் இருந்தவங்கள் எண்டு யோசனையா கிடக்கு. இவங்கட கதையளை கேட்டால், சனத்தைப்போல எனக்கும் தான் தலை வெடிக்குது.

கொஞ்ச நஞ்ச காலமே. 20 வருஷம் கடந்திட்டுது. பெரும்பாலான அடுத்த சந்ததி பிள்ளை, குட்டியளுக்கு தங்கட வீடெங்க, ஊரெங்கையெண்டே தெரியாது. அடைக்கலம் புகுந்த ஊர்களில, அடுத்தவன் கோடியளுக்க தான் அதுகளின்ர வாழ்க்கை. பெருமூச்சுகளோட காலம் போகுது.

சண்டை முடிஞ்சுதெண்டு ரோட்டை திறந்தாலும் திறந்தாங்கள், இப்ப அந்த சனங்கள் வாழுற கோடியளுக்கும், ஆப்பு விழத்தொடங்கியிட்டுது. எங்கட புலம்பெயர்ந்தவை பலரும் அரக்கப்பறக்க இப்பெல்லாம் ஊருக்கு ஓடோடி வருகினம். ஏதோ மண் பற்று அது இதுவெண்டு நீங்கள் நினைச்சு போடாதீங்கோ. இப்ப காணி, வீடு வளவெல்லாம் நல்லா விலை போகுதெண்டு அறிஞ்சிட்டினம். எல்லாம் மூண்டு மடங்கு நாலு மடங்கு. அவசர அவசரமா வித்துப்போட்டு, திரும்ப புலம் பெயர் நாட்டுக்குப்போற அவசரம் அவைக்கு. உள்ளுர் பேப்பரெல்லாம் இப்ப காணி, வீடு, வளவு விக்கிற விளம்பரங்கள்தான். அதுக்கையும் சிலர் வெளிநாட்டிலிருந்தே விளம்பரம் கொடுத்து வித்துத்தள்ளிப்போடுறாங்கள். கெட்டிக்காரங்கள் பிழைக்க தெரிஞ்சவங்கள். இஞ்சினை வந்து எயார்போட்டிலை, மாட்டாமல் தப்ப தெரிஞ்சு வச்சிருக்கிறாங்கள்.

இப்ப பிரச்சினையென்னவெண்டால், இவங்கள நம்பி, இந்த இருவது வருஷமா அவங்கடை காணி, வீடு, வளவுகளை கட்டிக்காத்த சனத்தை வெளிய போவெண்டு;றாங்கள். அதுகளோ சொந்த ஊருக்கும் போகேலாமல், அடைக்கலம் புகுந்த இடத்திலும் இருக்கேலாமல் அல்லாடுதுகள். இனி எங்கை போறதெண்டு முழிசிக்கொண்டிருக்குதுகள்.

என்ர வளவுக்கு பக்கத்திலயும் அதுகள் ஒரு நூறு, நூற்றைம்பது குடும்பங்கள் இருக்குதுகள். சண்டையால, எல்லாத்தையும் விட்டுட்டு, இரவோடிரவா ஓடிவந்து, அங்கின இங்கின கூலி வேலை செஞ்சுதான் பிழைக்கிறதுகள். இப்ப அவுஷ்திரேலியாவில இருந்து வந்த காணிக்காரன் வந்து எல்லாரையும் வெளிக்கிடச்சொல்லி நிக்கிறான். அப்படி இப்படியெண்டு உதவியள பெற்று அரைகுறையாவேனும் கொட்டில்கள போட்டு வாழுதுகள். வெளிக்கிடச் சொன்னால் இப்ப அதுகளால என்ன செய்யேலும்..எங்க போகேலும்.

சரி வந்த அவுஸ்திரேலியாக்காற பொடியன் ஓரளவுக்கு மனுஷி வழி சொந்தமும்தான். வீட்டுப்பக்கம் ஒரு பின்னேரம் வந்தவன். எட தம்பி, உந்த முகாம் சனமிருக்கிற காணியை விக்கப்போறியாம். என்ன அவ்வளவு கஷ்டமோவெண்டு கேட்டன். அட கனகண்ணை இதுகளை வித்தா என்ன ஒரு ஒன்று ஒன்றரை இலட்சம் டொலர் வருமெண்ணை. அதெல்லாம் ஒரு காசே எண்டு கேக்குறான். பக்கத்தில இருந்த பேரன்தான் கணக்கு பார்த்துச் சொன்னான். அது எங்கட காசுக்கு ஒன்றரை கோடி வருமெண்டுறான். நான் விக்கிச்சுப்போனன். அட அடுத்து வேளை கஞ்சிக்கு வழி இல்லாமல் சனம் திண்டாட, இவன் இதை பெரிய காசோ எண்டு கேள்வி கேக்கிறான்.

சரியடாப்பா, இஞ்சைத்தையான வித்து அங்கின வீடுகீடு வேண்டப்போறியோவெண்டு கேட்டன். அதுக்கில்லை கனகண்ணை என்ர மனிசி, நல்ல சங்கீத பாட்டுக்காரி தெரியும்தானே உங்களுக்கு. அவள் இந்தியாவில போய் முன்னணி இசைக்காரரோடு சேர்ந்து சீடி போடப்போறாளாம். அதுக்குத்தான் இந்த காசு எண்டான். அட பத்தியெரிவார் இஞ்சை அழுதழுது, அந்த குடும்பங்கள் இடம் தேடித்திரிய, நீங்கள் இந்தியாவில பாட்டு சீடி போடப்போறியள். ம்.. அதுக்குள்ள கனகண்ணை உங்களுக்கும் சீடி அனுப்புறன் எண்டுட்டு போறான். வாயில நல்லா வருகுது. உந்த சனம் ஊருக்குப்போறதைப் பற்றி என்ன நடக்குதெண்டு தெரிய ஒரு ரவுண்டு விட்டன். வசாவிளான் பெரிய பள்ளி அதிபரா இருந்த நடராசா மாஸ்ரர்தான், உதுகளில முன்னுக்கு நிண்டவர். அவரை ரோட்டில கண்டு என்னெண்டு கேக்க, மனுஷன் வாயை திறக்க மாட்டனெண்டுது. பிறகுதான் அறிஞ்சன் மனுசன கூட்டிக்கொண்டுபோய் மூச்சு விடக்கூடாது. துலைச்சுப்போடுவமெண்டு வெருட்டிப் போட்டாங்களாம். பாவம் மனுசன் உந்த வயசிலயும், அலை அலையெண்டு அலைஞ்சு களைச்சுப்போட்டுது.

ஆனாலும் பாருங்கோ, எலெக்சன் வரக்கை எல்லோரும் அதைப் பற்றி கதைப்பினம். எலெக்சன் முடிஞ்சுதோ மூச். அமைச்சரோ மைக்கை பிடிச்சுக்கொண்டு சனத்தை கீரிமலைக்கு கூட்டிகொண்டு போனார். அவர் திரும்பினாப்பிறகு சனத்தை வீட்டை கலைச்சுப் போட்டாங்கள்.

கண்ணிவெடி அபாயமெண்டுறா எங்கட அரசாங்க அதிபர் அம்மா. இன்னும் பத்து வருஷமாவது தேவையெண்டு, பெரிய மட்டத்தில சொன்னதாயும் சொல்லுறா. ஆனால் பதினொரு விதானை ஏரியாக்களில் கண்ணிவெடி அகற்றி முடிச்சாச்செண்டு, கண்ணி வெடியகற்றல் அமைப்புகாரர் சொல்லலுகினம். கோத்தபாயாவின்ர பாதுகாப்பு அமைச்சுதான் இழுத்தடிக்குது எண்டுறான் பேப்பர்கார பொடியன். இல்லையில்லை ஐ.நா. பெரிய ஆக்கள் கண்ணி வெடியகற்றின பகுதிகளை உறுதிப்படுத்தோணுமெண்டு ஏரியா தளபதி ஹத்துருசிங்கா சொல்லுறார். கச்சேரியில கேட்ட சம்பளமிவ்லையெண்டு ஜ.நாகாரர் வீட்டை போட்டாங்களாம். ஒண்டுமட்டும் புரியுது சனத்த இருக்க விடுறதில்லையெண்ட முடிவிலை மட்டும் இவங்கள் எல்லாரும் நல்ல ஒற்றுமையா இருக்கிறாங்கள். புதுசு புதுசா மண் அணை வேற போடுறாங்களாம். அப்ப விளங்கத்தானே வேணும். என்ன அவையின்ர நிலைப்பாடெண்டு.

உந்த மீள்குடியமர்வு பற்றி கதைச்சுக்கொண்டு திரிஞ்ச பொடியன் ஒருவன் இப்ப லோக்கல் கவன்மென்ட் எலெக்ஷன் கேக்கிறான். சரி என்னடா தம்பி நடக்குதெண்டு அவன்ர வாயைக் கிண்டினன். அண்ணை எல்லாம் பம்மாத்தண்ணை. எல்லாரும் தங்கட அரசியலுக்காக, எங்கட சனத்தின்ர கண்ணீரை விக்கிறாங்கள். எதுவுமே நடக்கையில்லை. சிங்கள முதலாளிமார் காங்கேசன் துறை வந்து, கிறஷர்மில் போட்டுகிடக்கிற சுண்ணாம்பு கல்லெல்லாத்தையும் தோண்டி, தெற்குக் கொண்டு போறான். எல்லாம் ஆமிப்பெரியவை, அரசியல்வாதிகளது ஆசீர்வாதத்துடன் தான் நடக்குது. பெரிய எடுப்பில ஆமியள கொண்டும், சிங்கள கைதிகள கொண்டு வந்தும் தோட்டமும் செய்யுறாங்கள். உந்த செம்பாட்டு மண் அவங்களை விடுகுதில்லை. எல்லாத்துக்கும் மேலாலை தாட்டதெல்லாம் உக்கிப்போகதானே வேணும். அதுக்குத்தான் உந்த பத்து வருஷக்கணக்கெண்டு நமுட்டுச் சிரிப்போட சொல்றான்.

எல்லாம் முடிந்சுது, எல்லாம் முடிஞ்சுதெண்டு எல்லாரும் கூக்குரலிடுகினம். சரி எல்லாம் தானே முடிஞ்சுது. அதுகள வீடுகளுக்கு போக விடுங்கோவன் எண்டால் அது பற்றி கதைக்க ஒருத்தருமில்லை. அதுக்குள்ள அயல் நாட்டுக்காரன் பலாலியை, சர்வதேச விமான நிலையமாக்கி கொடுக்கப்போறானாம். காங்கேசன் துறை, துறைமுகத்திலை கட்டுற வேலையை ஆரம்பிச்சிட்டானாம் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் ஒண்டுமே சனத்துக்கு நடக்கப்போறதில்லையெண்டு தெரியுது. மாறி மாறி அவனிவன்ர வீட்டுக்கோடிகளில வாழுறதை தவிர அந்த சனத்துக்கு ஏதுமே கிட்டப் போறதில்லையெண்டது மட்டும் அப்பட்டமா தெரியுது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57336/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.