Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் வெளியிடப்படும்

Featured Replies

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் வெளியிடப்படும் -

- கூட்டமைப்புடனான சந்திப்பில் அரசு உறுதி

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-04 07:08:22| யாழ்ப்பாணம்]

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வவுனியாவில் வெளியிடப்படும் எனவும் பின்னர் அந்தத் தரவுகள் ஏனைய பிரதேசங்களிலும் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று இரண்டாவது கட்டப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த மாதம் 10ஆம் திகதி தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகள் குழுவுக்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் முதலாவது சந்திப்பு இடம்பெற்றி ருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மற்றொரு சந்திப்பு இடம்பெற்றுள் ளது. இச் சந்திப்பு தொடர்பாக சுரேஷ் எம்.பி. கூறியதாவது,

இன்றைய(நேற்றைய) சந்திப்பில் ஏற்கெனவே நாங்கள் பேசிய, இன்று இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகள் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக விடயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். முக்கியமாக காணாமல் போவது தொடர்பாக ஒரு தகவல் வங்கி ஒன் றை உருவாக்கியிருப்பதாகவும் இங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் இரா ணுவ முகாம்களில் எத்தனை கைதிகள் இருக்கின்றார்கள் என்ற விடயத் திரட்டு அங்கேயுள்ளதாகவும் ஆகவே காணாமல் போனவர்களுடைய பெற்றோர்கள் சகோதரர்கள் பார்க்கவேண்டும் என்று அங்கே போனால் அவர்களுடைய பெயர் பட்டியலில் இருக்கின்றதா? இல்லையா? என்பதை கண்டுகொள்ள முடியும் என்று ஒரு அறிவிப்பை சொல்லியிருக்கிறார்கள்.

இதைவிட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் மீள் குடியேறுபவர்கள் தொடர்பான இன்னோரு விடயத் தைப் பற்றி கடந்த முறை கேட்டிருந் தோம். அதில் இப்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எதுவும் இல்லை என்றும் சில இடங்களில் இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் முகாம்களைச் சுற்றி பாதுகாப்புக்காக சில இடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவை படிப்படியாக விடப்படும் என்ற தொனியில்தான் அவர்களுடைய கருத்து இருந்தது.

ஆனால் நாங்கள் அப்படியல்ல. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என்பது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது. அதேபோன்றே யாழ்ப்பாணத்திலும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பது வர்த்தமானி அறிவித்தல் மூலம் இல்லாவிட்டாலும்கூட அங்கு இன்னும் மக்கள் மீளக் குடியேற முடியாத நிலை இருக்கின்றது போன்ற விடயங்களை நாங்கள் அவர்களுக்கு மீண்டும் கூறினோம்.

இதேபோன்றே வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் மீளவும் தங்களது சொந்த இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் தேவை என்று நாங் கள் வலியுறுத்தினோம். ஆகவே அடுத்த சந்திப்பில் இவை பற்றிய விபரங்களை திட்டவட்டமாகக்கூறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனைவிட தீர்வு தொடர்பாக எப்படிச் செல்வது என்பது தொடர்பா கவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

இன்று நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக முதன் முதலாக பேச் சை ஆரம்பித்து இருக்கின்றோம். ஆகவே அடுத்த கட்டக் கூட்டங்களில் தான் அது தொடர்பாக விரிவான ஆய்வுகளுக்குச் செல்லமுடியும் என்று நான் கருதுகின்றேன்.தமிழ் மக்களுடைய இனப்பிரச் சினை தீர்வு தொடர்பாக பல்வேறு பட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த காலங் களில் நடந்திருக்கின்றது இவைகள் எல்லாவற்றையும் கருத்தில் எடுத்து தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வை நோக்கி தற்போது நாங்கள் பயணிக்க வேண்டும். அந்த அடிப்படையில் அதிகாரப் பகிர்வு என்பவை எப்படியிருக் கலாம். எப்படியிருந்தால் அது ஆக்க பூர்வமானதாகவும் செயல்முறைப் படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்ற அடிப்படை விடயங்களைப் பற்றிப் பேசியிருக்கின்றோம். ஆகவே அடுத்தடுத்த கட்டங்களில் விபரமாகப் பேசலாம் என்று இருக்கின்றோம் என்றார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=15771

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.