Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் கடந்த கால அவலங்களுக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பு! முன்னாள் எம்.பி தம்பிமுத்துவின் புதல்வர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கடந்த கால அவலங்களுக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பு! முன்னாள் எம்.பி தம்பிமுத்துவின் புதல்வர் தெரிவிப்பு

வியாழன், 03 பெப்ரவரி 2011 01:05 .தமிழ் மக்களின் கடந்த கால பேரவலங்களுக்கு அன்றைய தமிழ் தலைமைகளே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் எம்.பி சாம் தம்பிமுத்துவின் புதல்வரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர்களில் ஒருவருமான அருண் தம்பிமுத்து.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் இடம்பெற்று வருகின்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்து நிரந்தர பாதுகாப்பை பெறுகின்றமைக்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இவரின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அருண் தம்பிமுத்து இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:

"நான் தமிழ் தேசியத்தின் பாரம்பரியத்தில் வளர்ந்தவன். எனது அம்மப்பா அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர். எனது தந்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆனால் தமிழ் மக்களின் கடந்த கால அவலங்களுக்கு எல்லாம் தமிழ் தலைமைகளே காரணம் என்பதை நான் கண்டு கொண்டேன். இத்தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

நான் கடந்த ஓகஸ்ட் மாதம் நாடு திரும்பி இருந்தேன். அப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ என்னை அழைத்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று கோரினார். நான் தமிழ் தேசியத்தின் பாரம்பரியத்தில் வளர்ந்தவன் என்பதை அவருக்கு விளங்கப்படுத்தினேன். இருந்தாலும் அவர் தந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.

மட்டக்களப்பு மாவட்டம் ஆண்டாண்டு காலமாக மழை, வெள்ளம், சூறாவளி, சுனாமி .. என்று இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்தை இயற்கை அனர்த்தங்களில் இருந்து காப்பாற்றுகின்றமை தொடர்பாக கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றது.

ஆனால் இவ்வனர்த்தங்களில் இருந்து மட்டக்களப்பை பாதுகாக்கும் பொறிமுறை எதுவும் நடைமுறைக்கு வரவே இல்லை. எதிர் காலத்தில் அனர்த்தங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியமை கட்டாயம் ஆன விடயம். எனவே அனர்த்தங்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய பொறிமுறை ஒன்று உடனடியாக அமுலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இப்பணியில் நான் அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன். "

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17854&Itemid=413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.