Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கு - முல்லைத் தீவு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்படுகின்றனர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சி கிழக்கு - முல்லைத் தீவு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்படுகின்றனர்:-

04 பெப்ரவரி 2011

வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைக்கடற்படை முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு மீன்பிடித்து வரும் தென்னிலங்கை மீனவர்களின் தொகை மிகக்குறுகிய காலத்தில் அண்மைய வாரங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

தமிழ் மீனவக்குடும்பங்கள் மீளக் குடியமரவோ மீன்பிடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களை அழைத்து வந்து குடியேற்றுவதில் அப்பகுதி முகாம்களின் இராணுவத் தளபதிகளே தரகர்களாக செயற்படுவதாகவும் வடமராட்சி கிழக்கு மீன்பிடியாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வன்னியில் தமிழ் மீனவர்கள் மீள்குடியேற்றப்படுவது திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து கொணரப்படும் சிங்கள மீன்பிடியாளர்கள் மீன்வளப்படுகைகள் நிறைந்த இடத்தில் குடியேற்றப்படுகிறார்கள்.

அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள் மீனவர்கள் வன்னிக் கரையோரப்பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அங்கு மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மீன் வளம் நிறைந்திருக்கும் பகுதிகளை

அடையாளம் காண நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு கிழக்கு பகுதிகளை இணைக்கும் பகுதியான கொக்கிளாயில் 240 சிங்களக்குடும்பங்கள் கடந்த மூன்று வாரங்களில் குடியேற்றப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களை புவியியல் ரீதியில் தொடர்பற்ற நிலங்களாகத் துண்டாடும் இந்த சதி முயற்சியினை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசார்ட் பதியுதீனும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தசிங்கள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் என்று இலங்கை அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய். ஒரு சில சிங்களக் குடும்பங்களே அங்கிருந்தன. மீதி எல்லாம் தெற்கிலிருந்து திட்டமிட்ட குடியேற்றத்துக்காக அழைத்து வரப்பட்ட சிங்களக் குடும்பங்களே என்றும், இவர்களோடு சேர்த்து ஏற்கெனவே அங்கு குடியிருந்து போரினால் வெளியேறி மீளவும் குடியேற்றப்பட்டுள்ள 43 தமிழ்க்குடும்பத்தினரும் தாம் அச்சத்துள் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொக்கிளாய் கடனீரேரியைச் சூழவுள்ள மணல்படுகைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் ஒரு ஒடுக்கமான நிலப்பரப்பாக இருக்கின்றன. வடமாகாணத்தின் முல்லைத் தீவு மாவட்டத்தினதும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தினதும் எல்லைப் பகுதி இந்தக் கடனீரேரியை ஊடறுத்துச் செல்கிறது.

கொக்கிளாய் கிராமத்தின ஒரு பகுதி முல்லைத்தீவு மாவட்டத்துடனும் இல்மனைற் நிறைந்த புல்மோட்டைப்பகுதி திருகோணமலை மாவட்டத்துடனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்கிளாய் பிரதேசத்தில் குடியிருந்த மக்கள் 1983ஆம் ஆண்டு அங்கிருந்து இடம் பெயர்ந்தனர். ஏறத்தாழ 28 வருடங்களின் பின்னர் அங்கு பாரம்பரியமாகக் குடியிருந்த தமிழ் குடும்பங்களில் 43 குடும்பங்கள் மட்டும் மீளக்குடியேற்றப்பட்டுள்ளன. அதேவேளை நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து அழைத்து வரப்பட்ட 240 சிங்களக் குடும்பங்கள் அங்கு குடியேற்றப்பட்டுள்ளன. இதன்காரணமாக மீளக்குடியேறிய தமிழ் மக்கள் நாளாந்தம் அச்சத்துடனேயே வாழ்க்கையைக் கழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கு குடியேற்றப்பட்டுள்ள சிங்களக்குடும்பங்கள் குற்றவியல் மற்றும் சமூகவிரோதப் பின்னணியைக் கொண்டவர்கள். இவ்வாறானவர்களைக் குடியேற்றிவிட்டு இலங்கை அரசாங்கம் கொக்கிளாயில் மீள் குடியேற்றம் முடிவடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறது.

வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தால் கொணரப்பட்ட இயந்திர உபகரணங்கள் பல இவ்வாறு தெற்கிலிருந்து கொக்கிளாயில் கொணர்ந்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி தொடர்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மீள்குடியேறும் மக்களுக்கு ஒதுக்கப்படும் வளங்கள் இவ்வாறு தான் திட்டமிட்ட குடியேற்றவாசிகளுக்கு திருப்பிவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசின் இவ்வாறான மீள்குடியேற்றம் என்ற போர்வையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் பல வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை இணைக்கும் மணலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது பற்றிய புள்ளிவிபரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஒரு அதிகாரி குறிப்பிட்டார்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினரும் அரசாங்க அதிபரும் அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கெதிரான இவ்வாறான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை கடந்த 60 ருடங்களாக இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1950களில் மூன்று மாகாணங்களும் சந்திக்கும் இடமான பதவியாவில் சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு இது ஆரம்பமானது.

இன்றுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இக்குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் இலங்கை ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தலையெடுத்திருந்த கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடைப்பட்டிருந்தது. தற்போதுஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து அரசாங்கம் இதனை மீள ஆரம்பித்துள்ளது.

தமிழ்நெற் உதவியுடன் ஜிரிஎன்

இப்பிரச்சினை பற்றி கூத்தமைப்பினர் அடுத்தமுறை பேசுவர் என நம்பலாம்!!!

அதற்கு முன் சிவாஜிலிங்கத்தின் மீள் குடியேற்றத்தை எதிர்பவர்கள் அடங்கிவிடுவார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சியிலும் முல்லைத்தீவிலும் நவீன உபகரணங்களுடன் தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றம்?

[saturday, 2011-02-05 06:01:17]

யாழ். வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் படையினர் மற்றும் கடற்படை முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு மீன்பிடித்துவரும் தென்னிலங்கை மீனவர்களின் தொகை மிகக்குறுகிய காலத்தில் அண்மைய வாரங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மீனவக் குடும்பங்கள் மீளக்குடியமரவோ மீன்பிடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களை அழைத்துவந்து குடியேற்றுவதில் அப்பகுதி முகாம்களின் இராணுவத் தளபதிகளே முக்கிய பங்கினை வகிப்பதாகவும் வடமராட்சி கிழக்கு மீன்பிடியாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வன்னியில் தமிழ் மீனவர்கள் மீள்குடியேற்றப்படுவது திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து கொணரப்படும் சிங்கள மீன்பிடியாளர்கள் மீன்வளப்படுகைகள் நிறைந்த இடத்தில் குடியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைய வாரங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள மீனவர்கள் வன்னிக் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். அங்கு மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் மீன்வளம் நிறைந்திருக்கும் பகுதிகளை அடையாளம்காண நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு கிழக்கு பகுதிகளை இணைக்கும் பகுதியான கொக்கிளாயில் 240 சிங்களக் குடும்பங்கள் கடந்த மூன்றுவாரங்களில் குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.