Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாநாட்டில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இரு வௌ;வேறு இடங்களிலிருந்து ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் ஒன்று யாழ் சுழிபுரம் மேற்குப் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சடலம் அதே பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான இருபத்தெட்டு வயதுடைய முருகேசு சிவநேசன் என்பவரின் சடலம் என உறவினர்களால் இனம் காணப்பட்டுள்ளது.

மற்றுமொரு சடலம் யாழ் கொக்குவில் தலையாளி கிழக்குப் பகுதியின் ஆள் நடமாற்றம் இல்லாத பிரதேசம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அச் சடலம் கொக்குவில் பிரதேச வாசியான சிவசங்கர் என்பவரது சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பிரஸ்தாப நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமற் போனயிருந்ததாகவும், அதன் பின்பு அவரை உறவினர்கள் மூலம் தேடிய நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விரு சடலங்களையும் சிறிலங்காப் பொலிஸார் நேரில் சென்று மீட்டதாகவும், தற்போது இரண்டு சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்த வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அத்துடன், இவ்விருவரும் எவ்வித ஆயுதக் குழுக்களோடு அல்லது ஒட்டுக் குழுக்களோடு தொடர்பற்றவர்கள் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் வன்முறைச் சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துக் காணப்பட்ட போதிலும், அரசியல்வாதிகள், யாழ் அரச அதிபர் மற்றும் சர்வமதத் தலைவர்களின் தலையீட்டால் சிறிலங்கா படைத்தரப்பினர் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதாக உறுதியளித்து பல்வேறு நடைவடிக்கைகளை முன்னனெடுத்தனர்.

இந் நிலையிலே, இச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதோடு, ஏற்கனவே சிறிலங்கா படைத்தரப்பினரின் பதிவு நடவடிக்கையால் பதற்றம் அடைந்துள்ள மக்கள் தற்போது இச் சம்பவத்தால் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D15C5412-FD49-40A4-9A54-5DD856E78B5D}

  • தொடங்கியவர்

  • டிசம்பர் 11 அன்று ஒரு ஆயுதக் கும்பலொன்று முருகமூர்த்தி கோயிலின் பிரதான பூசகர் நித்தியாநந்த சர்மாவை, 56, சங்கானை கோயிலில் வைத்து சுட்டுக் கொன்றதோடு அவரது மகன்கள் இருவரையும் காயப்படுத்தியது. அவரைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கி, இராணுவத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ள துப்பாக்கியின் வகையைச் சேர்ந்ததாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கான தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுறுசிங்க இராணுவத்தின் தொடர்பை மறுத்த போதிலும், ஒரு இராணுவக் கோப்ரல் சம்பந்தப்பட்டிருப்பதை பின்னர் ஏற்றுக்கொண்டார்.

  • டிசம்பர் 26 அன்று, ஒரு ஆயுதக் கும்பலால் வலிகாமம் வலய துணை கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் யாழ்ப்பாணத்தில் உரும்பிராயில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். பொலிசார் எவரையும் கைதுசெய்யவில்லை. 2004ல் தாக்கிய சுனாமியை நினைவுகூற யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வின்போது, தமிழ் பாடசாலை மாணவர்களை தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுமாறு நெருக்கியதை சிவலிங்கம் எதிர்த்ததாலேயே அவர் உயிரிழந்தார் என தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இ. சரவணபவன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • கடந்த மாதம் மஹேந்திரன் செல்வம், 28, மீசாலையில் சடலமாகக் கிடந்தார். அவர் காணாமல் போன பின்னர் 85 இலட்சம் ரூபா (76,000 அமெரிக்க டொலர்) கப்பம் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இராசையா சந்திரசிறி, 42, யாழ்ப்பாணத்தில் காணாமல் போய் மூன்று நாட்களின் பின்னர் டிசம்பர் 30 அன்று தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

  • புத்தாண்டு தினத்தில், தபால் ஊழியரும் சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டியவருமான கேதீஸ்வரன் தவராஜா, 28, யாழ்ப்பாண குடாநாட்டில் வடமராட்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆயுதக் கும்பல் ஒன்றால் கொல்லப்பட்டார். ஜனவரி 3, ஐந்து பிள்ளைகளின் தந்தையான மஹாலிங்கம் அமிர்தராசா, 35, உரும்பிராயில் காணாமல் போனார்.

  • ஜனவரி 6, வெள்ளை வானில் வந்த ஒரு கும்பலால் ஆறு பேர் கடத்தப்பட்டனர். ஏனையவர்கள் அவர்களை காப்பாற்ற முற்பட்ட போதிலும், கடத்தல்காரர்கள் ஆகாயத்தில் சுட்டு அவர்களை அச்சுறுத்தினர். இராணுவச் சோதனைச்சாவடியொன்றில் சோதனைக்குட்படுத்தாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்ட அந்த வாகனத்தை பலர் பின்தொடர்ந்து சென்றனர். ஆறுபேரில் ஐந்து பேர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் காலை பொலிசாரினால் அவர்களது குடும்பத்தாரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர்.

  • ஜனவரி 20, மன்னாரில் ஒரு அடையாளந்தெரியாத கும்பல் இரு மாணவர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று தாக்கியதாக வீரகேசரி பத்திரிகை தெரிவித்தது. கடத்திச் சென்றவர்கள் ஒரு மாணவனின் தந்தையைப் பற்றி விசாரித்தனர். அவரது தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்ட ஒரு வியாபாரியாவார். பின்னர் அந்த மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

  • யாழ்ப்பாண குடாநாடு இறுக்கமான இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 40,000 பேரைக் கொண்ட படை நிலைகொண்டுள்ளது. ஒவ்வொரு சந்தியிலும் துருப்புக்கள் காவலில் நிற்பதோடு வாகனங்களில் ரோந்தும் செல்கின்றன.

  • அரசாங்கத்தின் கூட்டணிப் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பீ.டி.பீ.) துணைப்படை குழு, இராணுவத்துடன் செயற்படுகின்றது. வன்னி மாவட்டத்தில் பத்தாயிரக்கணக்கான சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அறிவுக்கெட்டாமல் இந்த கொலைகளும் கடத்தல்களும் இடம்பெறுவது சாத்தியமற்றதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.