Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் விவசாயம் செய்வது கட்டாயச் சட்டமாக்கப் படவிருக்கிறது.

Featured Replies

இலங்கையில் விவசாயப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், பாடசாலைகளிலும், அரச அலுவலகங்களின் காணிகளிலும், மரக்கறி விதைகளை உடனே பயிரிடுமாறு அரசு கட்டாயச் சட்டம் கொண்டுவரவிருக்கிறது.

மரக்கறி வகைகள், அரிசி மற்றும் முக்கிய அத்தியாவசிய விவசாய உற்பத்தி ஏற்கனவே குறைவடைந்திருந்த நிலையில், மேலதிக இறக்குமதி மூலம், இத்தகைய சூழ்நிலையை அரசு எதிர்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, முக்கிய விவசாயப் பகுதிகளான பொலநறுவை, அநுராதபுரம், மன்னார் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட கிழக்கிலங்கையில் விவசாயம் தடைப்பட்டுள்ளதால், மரக்கறி வகைக்கான தட்டுப்பாடு மிக மோசமாக உருவாகலாமென விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இவை தவிர, போர் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளிலும், விவசாயம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலைகள், அரச அலுவலங்கள், அரச காணிகள், அரச ஊழியர் விடுதிகள் அனைத்திலும், உடனடியாக மரக்கறிப் பயிர்ச்செய்கையைக் கட்டாயமாக்கும் சட்டமூலம் இன்று அல்லது நாளை சிறீலங்கா அரசால் அரசவர்த்தமானி அறிவிப்பாக விடுக்கப்பட விருக்கிறதென, விவசாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஈ.கருணாதிலக தெரிவித்துள்ளார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6454

  • தொடங்கியவர்

உள்ளூராட்சித் தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடும்

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடப் போகின்றது. பொதுமக்கள் உயிர் வாழ முடியாது. தமது பிள்ளைகளையும் பாதுகாக்க முடியாத நிலையில் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள். இதனால் நாட்டில் சாதாரண சூழல் பாதிப்படைந்து எகிப்தை தாண்டிய கிளர்ச்சி சூழல் ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வு கூறியுள்ளது.

எனவே ஏற்படப் போகும் அச்சுறுத்தலான நிலைக்கு அரசாங்கத்தின் முறைகேடான நிர்வாகமும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுமே பிரதான காரணமாக அமையும் என்றும் அக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில், தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது பாரிய சுமைகளை சுமத்தி துரோகத்தனமாக செயற்படுகின்றது. எவ்விதமான நேர்மையும் அற்ற வகையிலான ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. நாட்டில் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. மக்கள் உயிர் வாழ முடியாத நிலையில் உள்ளனர்.

மந்த போசனம் மற்றும் போதியளவு உணவு பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்களும் தீவிரமடைந்து வருகின்றன. இதனை சற்றும் சிந்திக்காது அரசாங்கம் அதி சொகுசு வாகனத்தை சாதாரண பஸ்களுக்கு விதிக்கப்படும் வரியில் இறக்குமதி செய்கின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதோடு அதற்கான வரி குறைப்புகளிலும் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளை பாதுகாத்து இலங்கையை பௌத்த இராச்சியமாக மாற்றப் போவதாக கூறிய அரசாங்கம் இறுதியில் நாட்டை சூதாட்ட பூமியாகவும் பட்டினியின் இருப்பிடமுமாகவே மாற்றியுள்ளது. மஹிந்த சிந்தனை பெயரளவிலே உள்ளது. எனவே எதிர்வரும் தேர்தல்களில் பொது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். வாழ வேண்டிய பிள்ளைகளையும் வாழ வைக்க முடியாது பட்டினியில் அவர்கள் மரணிக்க வேண்டுமென்றால் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களியுங்கள்.

http://www.alaikal.com/news/?p=57308

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.