Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படைத்தரப்பின் பதிவு நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு! வழக்குத் தாக்கல் செய்ய கூட்டமைப்பு முடிவு!

Featured Replies

யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்களை குடும்பம் குடும்பமாக புகைப்படங்களுடன் பதிவு செய்யுமாறு சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்டு வரும் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் வழக்கும் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா படைத்தரப்பினரின் இந் நடவடிக்கையால் யாழ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், விசனமும் தெரிவித்துள்ளனர். இந் நிலையிலேயே சிறிலங்கா படைத்தரப்பின் இந் நடவடிக்கைகளுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுடைய விருப்பத்துக்கு முரணாக அவர்களுடைய கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலேயே ஜேர்மனிய நாசிப் படைகளின் பாணியில் சிறிலங்கா படைத்தரப்பால் இப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா படைத்தரப்பின் இந்த நடவடிக்கையை கிராம சேவகர்கள் எதிர்த்துள்ள போதிலும், இப் பதிவு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

உடுவிலில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பின் 513வது படைப்பிரிவின் தளபதிகள் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான கூட்டம் ஒன்றை உடுவில் மகளீர் கல்லூரியில் நடத்தியுள்ளார்கள்.

சண்டிலிப்பாய், மானிப்பாய், தெல்லிப்பளை, சுன்னாகம் பொலிஸ் பகுதிகளைச் சேர்ந்த கிராம சேவகர்கள், பொலிஸ் அதிகாரிகள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

மக்களைப் பதிவு செய்வது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொள்ளும் இந் நடவடிக்கைக்கு உதவ வேண்டும் என கிராம அதிகாரிகள் இக் கூட்டத்தல் கட்டாயப்படுத்தப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இத்தகைய பதிவு நடவடிக்கை ஒன்று அவசியமில்லை என கிராம அதிகாரிகள் வலியுறுத்திய போதிலும், சிறிலங்கா படைத்தரப்பினர் அதனை ஏற்க மறுத்து விட்டதாக தெரிகின்றது.

சிறிலங்கா படைத்தரப்பின் செயற்பாடுகளில் சிவில் அதிகாரிகளான தம்மை படையினர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஈடுபடுத்துவது பொது மக்களுடனான தமது உறவுகளைப் பாதிப்பதாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியதாகத் தெரிகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பங்களின் விபரங்களை புகைப்படங்களுடன் சிறிலங்கா படைத்தரப்பினர் ஏற்கனவே வைத்திருப்பதால் இவ்வாறான ஒரு நடவடிக்கை இப்போது அவசியம் இல்லை என கிராம சேவகர்கள் படைத் தரப்பினருக்கு விளக்கியதாகத் தெரிகின்றது.

ஆயினும், இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த சிறிலங்கா படைத்தரப்பினர் முன்னைய பதிவுகள் ஐந்து வருடங்கள் பழமையானவை என்பதால் புதிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக கூறியுள்ளார்கள்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் அது தொடர்பான தமது அதிகரித்த பணிகளுக்கு மத்தியில் இவ்வாறான பதிவுகளை மேற்கொள்வதற்கு தமக்கு நேரம் இல்லை எனவும் கிராம சேவகர்கள் சுட்டிக்காட்டிய போதிலும், அதனை ஏற்றுக் கொள்ள சிறிலங்கா படைத்தரப்பினர் மறுத்துள்ளனர்.

இதேவேளையில், தென்மராட்சி மற்றும் தீவுப் பகுதிகளில் சிறிலங்கா படைத்தரப்பினர் நேரடியாகவே பதிவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={1B9BB7CC-382B-4671-805A-8CFD4B64951D}

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.