Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் – அசோக் கே காந்த்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் – அசோக் கே காந்த்

* Wednesday, February 23, 2011, 4:30

சுவிஸர்லாந்தில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இடம்பெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த மீளாய்வின் போது, விருப்பமின்றியேனும், இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க நேரிடும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த் அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதுசெய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சேவை சந்தித்த, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்த்,

இந்தியாவின் தாழ்மையான கோரிக்கைகள் தொடர்பில் இலங்கையின் பதில்கள் தொடர்ந்தும் இவ்வாறே இருக்குமாயின் ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கெதிராக தீர்மானம் எடுக்க நேரிடும் என அறிவித்துள்ளார்

இந்திய உயர் ஸ்தானிகர் மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தைகளை சம்பரதாய பூர்வமாக வெளிவிவகார அமைச்சருடனேயே நடத்தியிருக்க வேண்டும். வெளிவிவகாரங்கள் விடுத்து, தனது அமைச்சு குறித்து கூட தீர்மானம் ஒன்றை எடுக்க அதிகாரமற்ற பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் போன்ற பொம்மைகளைச் சந்திப்பில் எந்த பயனும் இல்லை என்பதை அறிந்துக்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்தில் உள்ள அதிகாரம் படைத்த பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து, தமது நாட்டின் நிலைப்பாடு பற்றி அறிவித்துள்ளார்

தமிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இலங்கை மேற்கொண்டு வரும் இவ்வாறான செயற்பாடுகளினால் இந்திய ஏற்படும் அரசியல் ஸ்திரமற்றதன்மை குறித்து, இந்திய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கியுள்ளார்

இந்திய உயர்ஸ்தானிகரின் இந்திய நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பை அடுத்து, பீதியடைந்த பாதுகாப்புச் செயலாளர் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 136 பேரை இரண்டு மணிநேரத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்

பருத்தித்துறை, மல்லாகம் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுவொன்றின் மூலம் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மூத்த சட்டத்தரணி ஒருவர் , இந்த இந்திய மீனவர்களின் அவசர விடுதலையானது பாதுகாப்புச் செயலாளர் இலங்கையின் சட்டத்திற்கு அப்பால் சென்று பணியாற்றும் அதிகாரம் படைத்தவர் என்பதை நன்கு உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்றங்கள்(இந்தியா தொடர்பான) தொடர்பில் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களை நாங்களும் தூசு துடைக்க வேண்டி ஏற்படும்-கோத்தபாய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.