Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் இராசதானியாக இருந்த கிளிநொச்சியில் வைன் உற்பத்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் இராசதானியாக இருந்த கிளிநொச்சியில் வைன் உற்பத்தி!

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 02:21

இலங்கையில் முதன் முதலாக வைன் உற்பத்தி இடம்பெற உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வைன் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன என்று அரசு அறிவித்து உள்ளது.

இதற்காக கிளிநொச்சியில் 50 ஏக்கர் காணியில் திராட்சைப் பழ தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.

இது ஒரு 300 மில்லியன் ரூபாய் திட்டம் ஆகும்.

இத்திட்டம் தொடர்பான கள ஆய்வுகள் பூர்த்தி ஆகி உள்ளன.

திராட்சை விதைகள் இஸ்ரேல் நாட்டில் இருந்தும் ஆலைகளுக்கான இயந்திரங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து திராட்சை பழங்கள், வைன் ஆகியவற்றை பெரிதும் இறக்குமதி செய்து வருகின்றது. இத்திராட்சைப் பழங்கள் கிலோ 1200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அதே போல ஒரு போத்தல் வைன் 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

முன்னெடுக்கப்பட இருக்கின்ற திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் தற்போதைய விலையை காட்டிலும் 75 சதவீதத்தை விட குறைவாக வைனின் விலையை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அத்துடன் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 2.5 மில்லியன் வரையானோருக்கு வைனை விற்பனை செய்கின்றமை சாத்தியம் ஆகும் என்றும் இதன் மூலம் நாட்டுக்கு கொழுத்த வருமானம் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.

அத்துடன் வைனை மாலைதீவுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

tamilcnn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்ல திட்டமோ, கூடததோ என யாழ்கள அரசில், சமூக , பொருளாதார அறிஞர்களிடம் கேட்டுகொள்கிறேன் ...

எனது பார்க்வையில்..நாங்கள் ஊருக்கு போற நேரத்தில், எங்களின் பெண்கள் வைன் குடிக்கலாம், அப்பாபார், அங்கிள்மார் ஹார்ட்க்கு நல்லம் எண்டு குடிக்கலாம்..நாங்களும் நயகிராவுக்கு போய் வைன் டேஸ்ட் பண்ணாமல் ..இரனைமாடுவை பார்த்திட்டு வைன் ற்றேஸ்ட் பண்ணலாம்..

சிலவேளை அங்கே இருக்க சனத்துக்கு வேலை வெட்டி ஏதும் கிடைக்கலாம்..சிங்களவனை அந்த இடத்தில் குடிஎர்ரவிட்டால்...இல்லாட்டி எங்கட யாழ் மக்கள் கொஞ்சம் பேர் வன்னியிலேயும் வந்து இருந்தால்...

கூடாதபாகமாய், இப்ப ?? 50 -100 ரூபாவுக்கு கசிப்படிகிற குடியானவர்கள்..ஸ்டைலுக்கு வைன் குடிக்க வெளிகிட்டால் 1000 கணக்கில் சிலவளியும் ...

மற்றது வழமைபோல ...ஒரு பெரியளவில் முதலாளி தொழிலாளி வர்க்கம் வரும் ..தேயிலை தோட்டத்தில் உள்ள மாதிரி ...அது அங்குள்ள சாபம்..

இது நல்ல திட்டமோ, கூடததோ என யாழ்கள அரசில், சமூக , பொருளாதார அறிஞர்களிடம் கேட்டுகொள்கிறேன் ...

எனது பார்க்வையில்..நாங்கள் ஊருக்கு போற நேரத்தில், எங்களின் பெண்கள் வைன் குடிக்கலாம், அப்பாபார், அங்கிள்மார் ஹார்ட்க்கு நல்லம் எண்டு குடிக்கலாம்..நாங்களும் நயகிராவுக்கு போய் வைன் டேஸ்ட் பண்ணாமல் ..இரனைமாடுவை பார்த்திட்டு வைன் ற்றேஸ்ட் பண்ணலாம்..

சிலவேளை அங்கே இருக்க சனத்துக்கு வேலை வெட்டி ஏதும் கிடைக்கலாம்..சிங்களவனை அந்த இடத்தில் குடிஎர்ரவிட்டால்...இல்லாட்டி எங்கட யாழ் மக்கள் கொஞ்சம் பேர் வன்னியிலேயும் வந்து இருந்தால்...

கூடாதபாகமாய், இப்ப ?? 50 -100 ரூபாவுக்கு கசிப்படிகிற குடியானவர்கள்..ஸ்டைலுக்கு வைன் குடிக்க வெளிகிட்டால் 1000 கணக்கில் சிலவளியும் ...

மற்றது வழமைபோல ...ஒரு பெரியளவில் முதலாளி தொழிலாளி வர்க்கம் வரும் ..தேயிலை தோட்டத்தில் உள்ள மாதிரி ...அது அங்குள்ள சாபம்..

தமிழ் CNN க்கு கருத்து எழுதுற நிலையாக போச்சு உங்களுக்கு.... கொஞ்சம் விட்டால் இதுதான் புலம்பெயர்ந்த தமிழரின், விடுதலைப்புலிகளின் கருத்து எண்டும் சொல்லுவியள்... :blink:

முந்தி எல்லாம் தமிழ் படங்கள் வர முன்னம் அதை புறக்கணிக்க வேணும் எண்டு லங்காசிறி இணையத்திலையும் தமிழ்வின், இணையத்திலை கட்டுரைகள் வரும்... அதை தொடர்ந்து அந்த படத்துக்கு அதே இணையம் கட்டணம் பெற்ற விளம்பரமும் போட்டு அமர்க்களப்படுத்தி இருக்கும்... அதை எங்கட வீணா போனதுகள் இது புலிகளின் பாசிசம் எண்டு தொடங்கும்...! இதை தானே இப்பவும் சொல்லுறீயள்.... ???

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரியாது தமிழ் CNN க்கு ஆக்கள் கருத்து எழுதுகிறது இல்லை எண்டு....OK அதை அப்படியே விடுவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முதலாவது மதுபான உற்பத்திச்சாலை கிளிநொச்சியில்: தயாரிப்புகளை மாலைதீவுக்கு அனுப்பவும் திட்டம்

[sunday, 2011-02-27 04:06:51]

இலங்கையில் முதல்முறையாக வைன் எனப்படும் மதுபானத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது.இந்த மதுபானத் தொழிற்சாலைக்குத் தேவையான திராட்சைப் பழங்களை கிளிநொச்சியில் 50 ஏக்கர் நிலத்தில் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய விவசாய அபிவிருத்தி நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி கொட்டகம தெரிவித்தார்.

சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மதுபானத் தொழிற்சாலைக்கான சாத்திய ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டத்தில் திராட்சை உற்பத்திக்கு 200 கூட்டு முயற்சியாளர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள தரமான திராட்சை நாற்றுகள் இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும். வைன் உற்பத்திக்கான இயந்திரங்கள் ஐரோப்பாவில் இருந்து வாங்கப்படவுள்ளது.

இலங்கை 90 வீதமான திராட்சையையும், 99 வீதமான வைன் மதுபானத்தையும் அவுஸ்ரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு 1200 ரூபாவும், வைன் மதுபானத்துக்கு 2000 ரூபாவும் செலவாகிறது.

கிளிநொச்சியில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெள்ளை மற்றும் சிவப்பு வைன் மதுபானத்தையும், திராட்சைப் பழங்களையும் 75 வீதம் குறைந்த விலையில் பெற முடியும். ஆண்டுக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த உற்பத்திகளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும்.

அத்துடன் மாலைதீவுக்கு இவற்றை ஏற்றமதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.கூட்டுமுயற்சியாளராக சேரும் விவசாயிகளுக்கு தரமான விதை, வளர்ப்புத் தொழில்நுட்ப முறைகள், உத்தரவாத விலை என்பவற்றை அளிக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.� என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொகமட் நட்ஜ் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதுகில் தட்டிக் கொடுத்தபடி...

seithy.com

எனக்கு தெரியாது தமிழ் CNN க்கு ஆக்கள் கருத்து எழுதுகிறது இல்லை எண்டு....OK அதை அப்படியே விடுவம்.

எனக்கு என்னவோ தமிழ் CNN செய்தியை ஒட்டு மொத்த புலம்பெயர் மக்களின் கருத்தாக சொல்ல முனைந்ததாக பட்டுது... அப்ப அப்படி இல்லையே....??? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.