Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கே ஒரு காஷ்மீரை உருவாக்காதீர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கே ஒரு காஷ்மீரை உருவாக்காதீர்கள்!

ஆவேச வைகோ... உஷாராகும் உளவுத்துறை

ஈழத் தாய் பார்வதி அம்மாள் இறந்துபோனாலும்இ கடந்த காலங்களில் அரசுகள் அரங்கேற்றிய கூத்துகள்இ இன்னமும் எதிரொலித்தபடியே இருக்கின்றன. சென்னை தியாகராய நகர் செ.தெ. நாயகம் பள்ளியில் பார்வதி அம்மாளுக்கு புகழ் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

தேனிசை செல்லப்பா பாடிய ஈழ எழுச்சிப் பாடல்​களால் சூடான கூட்டம்இ தமிழறிஞர் அரசேந்திரனின்இ 'கொள்ளி வைப்பானா பிள்ளை... கொள்ளி வைப்பானா பிள்ளை’ கவிதையால் உறைந்துபோனது. அந்தக் கவிதையைத் தன் கணீர்க் குரலில் மீண்டும் வாசித்துப் பேச்சைத் தொடங்கினார் வைகோ. மலேசியாவில் இருந்து சிகிச்சைக்காக விசா பெற்று சென்னைக்கு வந்த பார்வதி அம்மாளை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியதைஇ நேரடிக் காட்சியாக விவரித்த அவரது பேச்சு முழுவதும்இ வெப்ப மயம்.

''சட்டமன்றத்தில் முதல்வர்இ 'பார்வதி அம்மையார் இங்கே யாரையும் சந்திக்கக் கூடாது. எந்த அரசியல் கட்சித் தலைவரையும் சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு

மத்திய அரசுக்கு விண்ணப்பித்தால்இ அதைப் பரிசீலிக்கலாம் என்ற ஏற்பாட்டைச் செய்வோம்!’ என்று கூறினார். உடல்நலக் குறைவால் நினைவு தவறுகிற வேளையில்இ எங்கள் தாயின் விரல் ரேகையைஇ நீங்கள் தயாரித்துக் கொடுத்த கடிதத்தில் பதியவைத்தீர்களே? அயோக்கியத்தனத்துக்கு எல்லையே கிடையாதா? இதைவிடக் கொடுமை உண்டா? அப்படி ஒரு கடிதம் வருவதற்குஇ நீங்கள்தான் ஏற்பாடு செய்தீர்கள்.

தன்மானத்துக்கு அடையாளமான எங்கள் தாயாரா இந்திய அரசிடம் மன்றாடுவார்? 'நான் தமிழ்நாட்டுக்கு வர எண்ணினேன். ஆனால்இ இந்திய அரசாங்கத்திடம் மடிப் பிச்சை ஏந்தத் தயாராக இல்லை. அப்படி என் உயிரைக் காப்பாற்றிக்​கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’ என்று சொன்னார் அந்த வீரத் தாய். வீரனைச் சுமந்த வயிறு அல்லவா? வயது முதிர்ந்த எங்கள் தாயாரைஇ இந்தத் தமிழ் மண்ணிலேயே கால் எடுத்துவைக்கவிடாமல் திருப்பி அனுப்பிய பாவத்துக்கு மன்னிப்பே கிடை​யாது!

எரிகிறது எங்கள் நெஞ்சிலே நெருப்பு... இசைப் பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை இரண்டு நிமிடங்கள் பார்க்க முடியவில்லை என்று துடிக்கிற சகோதரர்களேஇ இன்னும் சில காட்சிகள் இருக்கின்றன... அதைப் பார்த்தால் நெஞ்சு வெடித்துவிடும். கூட்டம் கூட்டமாகப் பெண்கள் சிங்கள ராணுவத்தினரால் பலாத்காரம் செய்த காட்சிகள் இருக்கின்றன. 'அதைக் காட்ட முடியாது’ என்று சேனல் 4 நிர்வாகிகள் சொல்கிறார்கள். அவை ஐரோப்பிய நாடுகளில் ஆவணங்களாக இருக்கின்றன.

இவ்வளவு கொடுமைகளையும் செய்துஇ இன்றைக்குத் தமிழர் குடியிருப்புகளைச் சுற்றிலும் நிற்கிறது சிங்கள ராணுவம். தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களர்கள் குடியேறுகிறார்கள். தமிழர்களின் ஆலயங்களுக்கு உள்ளேஇ பௌத்த விகாரங்கள்இ புத்தர் சிலைகள்... தமிழர்களை முழுமையாக அழிக்கத் திட்டமிட்டுச் செயலாற்றுகிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு நிச்சயம் வரும். புரட்சி முன்கூட்டி அறிவித்துக்கொண்டு வராது. உரிய வேளையில் ஒரு பொறி அதில் விழுகிற​போதுஇ கந்தகக் கிடங்கு வெடிக்கும். தன்மானத் தமிழர்​களின் உள்ளம்இ இன்றைக்குக் கந்தகக் கிடங்காகத் தகிக்கிறது.

இதோஇ தெற்கு சூடான் புதிய நாடாக மலர்ந்துவிட்டது. ஜூலை 9-ல் அறிவிக்கப்பட இருக்கிறது. 'அந்த நாடுஇ தனி நாடாக இருக்க முடியாது. பொருளாதார அடிப்​படையில் வடக்கு சூடானைச் சார்ந்துதான் இருக்க வேண்டும்’ என்றார்கள். எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்... தெற்கு சூடானிலே? அவர்கள் நம்பிக்கை இழந்தார்களா? இல்லை! இன்றைக்கு உலகத்தின் மனசாட்சி அவர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது.

'அடால்ஃப் ஹிட்லர் கொட்ட​மடிக்கவில்லையா? இனிஇ ஹிட்லரை யாரும் எதிர்க்க முடியாது’ என்று சொன்னார்களே? அந்தக் கொடியவன் அழியவில்லையா? அதேபோலத்தான்இ ராஜபக்ஷேக்களுக்கு இதுதான் முடிவு என்று ஏற்பட்டபிறகுஇ எவன் வர முடியும்? எங்கள் மீனவன் ஜெயக்குமாரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற அதே கயிற்றில்இ அவனைத் தொங்கவிட வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

ஒரு நாட்டின் விடுதலைக்கு அத்தனை பேரும் போராடிவிட மாட்டார்கள். போராடும் உணர்வு உள்ளவர்கள் மூலமாக அனைவரும் திரளுவார்கள். நம் கண் முன்னாலேயே ரத்தமும்இ சதையுமாக நம்முடைய நெஞ்சில் நிறைந்து இருக்கின்ற தமிழ் ஈழம் மலர வேண்டும். சிந்திய ரத்தம் வீண் போகாது. கொடுக்கப்பட்ட உயிர்களின் தியாகம் வீண் போகாது. இன்றைக்கு அங்கே சுற்றி நிற்கின்ற சிங்கள ராணுவத்தை வெளியேற்றுகின்ற காலம் வரும். நிறைவாக இருக்கும் வரை எங்கள் தலைவன் மறைவாக இருக்கிறான். அவனே விடுதலைப் போரை இயக்குகின்ற சக்தி!'' என்று கொந்தளித்த வைகோஇ

''ஏஇ இந்திய அரசே! தொடர்ந்து துரோகம் செய்கிறாய். தெற்கே ஒரு காஷ்மீரை உருவாக்கிக்கொண்டே இருக்கிறாய். உன்னுடைய துரோகத்துக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது. தமிழ் ஈழத்தை அமைப்பதற்குத் தடை விதித்து இருக்கின்ற நிலையில்இ தமிழகத்தையும் சேர்த்து அவர்கள் தனி நாடு ஆக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைத்துஇ நீ தடை விதித்து இருக்கிறாய். 'தாய்த் தமிழகத்து மண்ணையும் சேர்க்க வேண்டும்’ என்று பிரபாகரன் ஆசைப்படவில்லை. தமிழ் ஈழ விடுதலைக் களத்தில் அவர்கள் அதைக் கோரிக்கையாக வைக்கவில்லை. நீயாகச் சொல்கிறாய்... தடை விதிக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னாய். எதிர்காலத்தில் அது உண்மையாவதற்கு நீயே வழி வகுத்துவிடாதே...' என்று கர்ஜித்து முடித்தார் வைகோ.

வைகோவின் பேச்சு அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்கவைத்ததைத் தாண்டிஇ உளவுத் துறையினரை அதிகமாக உசுப்பேற்றி இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரிவினைப் பேச்சு என்று சொல்லி வழக்குப் போட வழி இருக்கிறதா? என்று பார்க்க ஆரம்பித்திருக்கிறதாம் ஆளும் கட்சி!

- க.த.நிலவன்

நன்றி-விகடன்.

உப்பிடியே கதைத்துக் கொண்டிருந்து வேலையில்லை.

காரியத்தில் இறங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது ஆராமுதன்.

இன்றைய உலகநிலையில் ஒரு லட்சம் மக்களை வீதியில் இறக்கினால் ஒரு பிரளயத்தை நிகழ்த்தலாம். ஆனால்................???

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது ஆராமுதன்.

இன்றைய உலகநிலையில் ஒரு லட்சம் மக்களை வீதியில் இறக்கினால் ஒரு பிரளயத்தை நிகழ்த்தலாம். ஆனால்................???

ஆனால்.............?

தமிழனை நம்பி? சொல்ல வந்ததை ஏன் விழுங்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்.............?

தமிழனை நம்பி? சொல்ல வந்ததை ஏன் விழுங்கிறீங்கள்?

என்னண்ணா செய்வது..?

இப்போதெல்லாம் எழுதுவதைவிட

விழுங்குவதுதான் அதிகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.